கலைமகளின் வீணை..
விடுதிக்கென்று
விசேஷக் கட்டணம் - நுழைவாயிலில்
நுழைய நுழைவுக் கட்டணம்
கராத்தே கற்றுக்கொள்ள
கறாராகக் கட்டணம்
தனிப் பயிற்சி வகுப்புகளுக்கு
தனியே கட்டணம்
சீருடைக்கென்று
சிறப்புக்கட்டணம்
பாடப்புத்தகம் வாங்க
பல நூறு கட்டணம்
கேள்வித்தாள்களுக்குக் கட்டணம்
இதை எதிர்த்துக்
கேள்வி கேட்டாலும் கட்டணம்
விடைத்தாளுக்குக் கட்டணம்
இதுபோல் எத்தனையோ
விடை தெரியாக்கட்டணம்....
ஏதேதோ காரணம் சொல்லி
எக்கச்சக்கமாய்
கட்டணம் வாங்கிய பின்னும்
குழந்தைகள் சரியாகப்
படிக்கவில்லையே என்று கேட்டால்
பதில் சொல்கிறார்கள்
பள்ளியில்...
"வீட்டில் சொல்லிக்கொடுங்கள்"
- ஆதலையூர் சூரியகுமார்.
நன்றி: ஆனந்த விகடன்.
08.12.10
சமக்கால கல்வி பற்றி எம்மை தொடர் பதிவெழுத அழைத்த ப.செல்வக்குமார்http://koomaali.blogspot.com/2010/12/blog-post.html அவர்களுக்கு நன்றி.
இந்த கவிதைக்கூட அதற்க்கான டிரைலர் தான். மெயின் பிக்சர் தயாராகிக் கொண்டுள்ளது.
24 கருத்துரைகள்:
vadai
கேள்வித்தாள்களுக்குக் கட்டணம்
இதை எதிர்த்துக்
கேள்வி கேட்டாலும் கட்டணம்///
இந்த வரிகள் சூப்பர்
பரிந்துரைக்கப்பட வேண்டிய கவிதைதான்!
nice:)
அருமை..!
////"வீட்டில் சொல்லிக்கொடுங்கள்"////
அருமையுங்க...
எப்படி எல்லாம் காசு பார்க்கிறாங்க...
கவிதை அருமை...
இன்ட்லில சப்மிட் பண்ணுங்க.
கவிதை அருமை...
//இந்த கவிதைக்கூட அதற்க்கான டிரைலர் தான். மெயின் பிக்சர் தயாராகிக் கொண்டுள்ளது. //
எதிர்பார்ப்புடன்..........
நயமான கவிதை... வாழ்த்துகள்... இரசித்தேன்...
பகிர்ந்தமைக்கு நன்றிங்க.
நல்ல கவிதைங்கோ.....!
மீண்டு(ம்) வந்ததுக்கு வாழ்த்துக்கள் பாரதி!
கவிதை நல்லாயிருக்கு!!
சாட்டையடி
அருமையான கவிதை.. தனியார் பள்ளிகளின் நிலையை சொல்கிறது..
சூப்பர் கவிதை,ஆல்ரெடி ஆனந்த விகடனில் படித்து விட்டாலும் பதிவுலகுக்கு அறிமுகப்படுத்தியஹற்கு நன்றி
அருமை
சரி நான் மெயின் பிக்சருக்கே வரேன்
//பள்ளியில்...
"வீட்டில் சொல்லிக்கொடுங்கள்"//
உண்மைலேயே ரொம்ப ரொம்ப கலக்கலான கவிதைங்க ..!!
//சமக்கால கல்வி பற்றி எம்மை தொடர் பதிவெழுத அழைத்த ப.செல்வக்குமார்http://koomaali.blogspot.com/2010/12/blog-post.html அவர்களுக்கு நன்றி.//
நான் கூட நான் அழைத்த தொடர் பதிவு எழுதினதுனாலதான் உங்க ப்ளாக் தொலஞ்சு போச்சோ அப்படின்னு நினைச்சேன் . ஹி ஹி ஹி ..!!
கவிதை சூப்பர்....கலக்குங்கள்....
சூப்பர்
அருமையான கவிதை..
Post a Comment