இது வலைப்பதிவு மேனியா - பதிவர்களை தாக்கும் நோய், இதன் அறிகுறிகளை நீங்களும் கடந்து வந்திருக்கக்கூடும், அல்லது இப்போதும் இந்த அறிகுறிகள் உங்களுக்குள் இருக்கக்கூடும்.
எப்போதும் Stats பார்த்துக்கொண்டே இருப்பது.
பின்தொடருபவர்கள் அதிகரிக்கும் போது, புது சொத்து வாங்கின மாதிரி சந்தோஷப்படுவது.
ஆன்- லைனில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என ஆராய்வது, தான் மட்டும் தான் என்ற உண்மை தெரிந்தவுடன் விரக்தியாவது.
பிரபல பதிவர்களின் பதிவுகளை ஆராய்ந்து, நம்மள விட கேவலமா எழுதியிருக்கிறான் (கவனிக்க அன் விகுதி) ஆனா இவ்வளவு பேர் வந்து பாக்குறாங்களே என கலங்குவது.
அரசியல் கூட்டமா இருந்தா, பிரியாணி குடுத்து ஆள் தேத்தலாம் இப்ப என்ன பண்றது என மருகுவது.
பின்னூட்டமே இல்லாமல் இருப்பதால், தானே மச்சம் வைத்து, மாறு வேடத்தில் வந்து, வேறு வேறு பெயர்களில் பின்னூட்டமிடுவது.
கம்பியூட்டர் தெரியாதுனு சொல்லி, எஸ்கேப் ஆகுற சொந்தகாரங்ககிட்ட, நீங்க தாங்க சின்ன பில்கேட்ஸ் அப்படினு புளுகி ஃப்ளாக் ஆரம்பிக்க மார்க்கெட்டிங் செய்வது-- அட ஓட்டுப்போட ஆள் கிடைக்குமில்ல.
யாரும் ரிஸ்க் எடுக்க விரும்பாததால், தானே கள்ள ஓட்டு போட களமிறங்குவது. ஆனா பாருங்க இப்பவெல்லாம் திரட்டிகள் ரொம்ப உஷாராயிட்டாங்க.(அப்படினா முன்னாடி கள்ள ஓட்டு போட்டிங்களானு கேட்டா..ஹி ஹி ஹி, நமக்கு தற்பெருமை புடிக்காதுங்க)
புதிய பதிவர்களின் பதிவுகளை தேடிப்போய் நீளநீளமாய் பின்னுட்டுவது, (நம்ம இனமில்ல.)பிரபல பதிவர்களுக்கு ஒற்றை வரியில், ஒற்றை வார்த்தைகளில் பின்னூட்டமிட்டு கடுப்படிப்பது.
நல்ல டெரர் பதிவரா பாத்து, அவர்களுடன் சண்டையிடுவது. அடுத்த கட்டமா பஞ்சாயித்த கூட்டுனா "என்ன கைய புடிச்சு இழுத்தாங்க" ரேஞ்சுக்கு என்ன என்ன என கூத்தடிப்பது.
போட்டி வைப்பது, தொடர் பதிவுக்கு வெத்தல பாக்கு தட்டுடன் தடபுடலா கிளம்பி, நான் பொன்னுரங்கம் வந்திருக்கேன் என பீதிய கிளப்புவது.
பதிவிட விஷயம் கிடைக்காத போது விஜய், விஜயகாந்த்,ராசா என இவர்களின் வயிற்றெரிச்சலை கிண்டுவது.
கும்மியடிக்கும் கூட்டத்தாரோடு சேர்ந்து, "நானும் பெரிய ரௌடிதாங்க" வாலண்டிரியா ஜீப் ஏறுவது.
சமயத்தில் கும்மி கூட்டத்தாரின் போதைக்கு ஊறுகாயாக மாறி தவிப்பது.
கொஞ்ச நாள் பதிவு போடாமல் இருந்து விட்டு, தமிழர்களே தமிழர்களே என ஆரம்பித்து, ரொம்ப ஆணீ அதனால.. என இழுவை போடுவது.
சில பதிவர்கள் தங்களுக்குள் கூட்டணி வைத்துக்கொண்டு,ஓட்டுப்போட்டு ஹிட்டடிப்பதாக, பார்லிமெண்டை கலங்கடித்து, ஜே.பி.சி. விசாரணையை கோருவது.
விளம்பர இடைவேளைக்கு பிறகு நிகழ்ச்சி தொடரும்.
இந்த பதிவை படித்துவிட்டு, கொதிப்பாகி, ஈரோடு பதிவர் சந்திப்பில் கண்டன தீர்மானம் போட்டு விட்டு ஆட்டோ அனுப்ப தயாராகும் பதிவர்களை எதிர்கொள்ள 108 ஆம்புலன்ஸ்களுடன் நாங்களும் தயார்.
36 கருத்துரைகள்:
படங்கள்:
vinavu.com
ivaan.wordpress.com
//"வலைப்பதிவு மேனியா - பதிவர்களை தாக்கும் நோய்"//
இப்ப புதுசா வந்துருக்குங்களா இந்த நோய்....
//இந்த பதிவை படித்துவிட்டு, கொதிப்பாகி, ஈரோடு பதிவர் சந்திப்பில் கண்டன தீர்மானம் போட்டு விட்டு ஆட்டோ அனுப்ப தயாராகும் பதிவர்களை எதிர்கொள்ள 108 ஆம்புலன்ஸ்களுடன் நாங்களும் தயார்.//
அப்ப ஒரு முடிவோடதான் இருக்கீங்கபோல.....
ஹிஹிஹி..........
உங்களுக்கு நோய் முத்திவிட்டது போல.
auto varum. ennai paththi sonnathukku kannadankal. hehe
நல்ல வேலை நான் பதிவர் இனத்தவன் இல்லை இது எனக்கு பொருந்தாது.
ஒருத்தரையும் விட்டு வைக்க வில்லை போலத்தெரியுது.
"ஆடும் வரை ஆட்டம்"
"ஆயிரத்தில் நாட்டம்"
"கூடும்வரை கூட்டம் , போனபின்பு வருமா"
:)))))))))))
அடடா இந்த உண்மை கசக்குதே.....?
ஹலோ நாளைக்கு பாக்கலாம்னு சொல்லிட்டு இப்படி தூக்கத்த கேடுக்கறது நாயமா
ரொம்ப சரியா சொன்னீங்க....
அய்யய்யோ மானம் போச்சே,இப்படி கேவலப்படுத்திட்டாரே சரி நைஸா எஸ்கேப் ஆகிடலாம்
>>>ஆன்- லைனில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என ஆராய்வது, தான் மட்டும் தான் என்ற உண்மை தெரிந்தவுடன் விரக்தியாவது.
ஆமா நான் என் பிளாக்கை பார்க்கறப்ப எட்டி பார்த்தீங்களா? கரெக்டா சொல்றீங்களே?
செம போஸ்ட்
பதிவர்க்கு அழகு
பதிவர் மேனியா
சுபம்
ஹி.ஹி.ஹி..................... ஆமா சார் பதிவர்கள்ன்னா யாரு சார் ???
பப்ளிக் பப்ளிக்
ஆஹா இப்படி உண்மையெல்லாம் புட்டு புட்டு வச்சுருக்காங்களே
சிலது வலையுலகில் எல்லோரும் செய்வது.
சிலது வேண்டுமென்றே எதாவது எழுதனும்னு எழுதினது.
கை குலுக்குவது மற்றும் கையெழுத்தை வைத்து ஒருவரை மனோதத்துவ ரீதியாய் விமர்சிப்பது போல.
நாலைந்து தவிர பெரும்பாலான நோய் அறிகுறிகள் எனக்கும் இருக்கே!இதற்கு மருந்து ஏதாவது இருக்கா சொல்லுங்க!
:)
நீங்கள் சொல்வது எல்லாமே அப்பட்டமான உண்மை.....
கலக்கல் பதிவு....
:)))))))))))
///கம்பியூட்டர் தெரியாதுனு சொல்லி, எஸ்கேப் ஆகுற சொந்தகாரங்ககிட்ட, நீங்க தாங்க சின்ன பில்கேட்ஸ் அப்படினு புளுகி ஃப்ளாக் ஆரம்பிக்க மார்க்கெட்டிங் செய்வது-- அட ஓட்டுப்போட ஆள் கிடைக்குமில்ல.//
அட பாவமே ..? இப்படிஎல்லாமா பண்ணுறாங்க ..? ஆமா அந்த ஓட்ட வச்சு என்ன பண்ணுவாங்க ..? ஹி ஹி ஹி
//இந்த பதிவை படித்துவிட்டு, கொதிப்பாகி, ஈரோடு பதிவர் சந்திப்பில் கண்டன தீர்மானம் போட்டு விட்டு ஆட்டோ அனுப்ப தயாராகும் பதிவர்களை எதிர்கொள்ள 108ஆம்புலன்ஸ்களுடன் நாங்களும் தயார்./
ஹி ஹி ஹி .. பயக்காதீங்க..
ஏங்க... உண்மை என் ப்லாக்ளதானே சுடனும்?!! உங்க ப்ளாக்ல சுடுது?!!
//ஆட்டோ அனுப்ப தயாராகும் பதிவர்களை எதிர்கொள்ள 108 ஆம்புலன்ஸ்களுடன் நாங்களும் தயார்.//
வெரிகுட்!!!
இப்படி தான் எச்சரிக்கையா இருக்கணும். ஆனா நாங்க லாரிய அனுப்ப போறொமே!!!
இந்த நோய்ய குணப்படுத்த சீக்கிரமா மருந்த கண்டிபிடிகப்பா
இது சம்பந்தமா நாளைக்கு பதிவர் சந்திப்புல ஒரு தீர்மானம் கொண்டு வரலாம் முடிஞ்சா நாளைக்கு ஈரோடு வாங்க ( மாப்பு அங்க இருக்குடி உனக்கு ஆப்பு)
அட... நம்ம வலைவீச்சு இரண்டாம் பாகம் இன்னிக்கு வெளியில் வர நேரத்துல...
நீங்களும் வலைமேனியாவை பத்தி சொல்லிட்டீங்களே!!
சொல்வதெல்லாம் உண்மை..உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை..
தமிழ்மணத்தில் 8-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் தமிழ் மனத்தில் இந்தவாரம் 20 யில் இடம்பிடித்தமைக்கு
வாழ்த்துக்கள்.
இடைவேளை போதும் நண்பரே நிகழ்ச்சிதொடருங்கள் :)
ஆமாம்,இடைவேளைக்கு பிறகு என்னனு சொல்லாம ஏமாத்திடீங்க.சிறந்த ரிப்போர்ட்.எங்க வீட்ல என்ன நடக்குது தெரியுமா?குடும்ப வேலை,குழந்தையின் ஹோம் ஒர்க் முடித்துவிட்டு கிடைக்கும் நேரங்களில் அரைகுறையாக தையல் ,பெயிண்டிங் செய்ய,கற்க ,ஸ்வட்டர் பின்ன,அக்கம் பக்கத்தில் பேச,சீரியல் பார்ப்பதை கூட விட்டு விட்டு பிளாக்குகளை எதை படிக்க,எதை விடனு தெரியாமல்,இதெல்லாம் எழுத நேரம் எப்படி எப்போ செலவிடுகிறார்கள்னு கேட்டு தெரிஞ்சுக்கனும்னு ,எப்படிப்பட்ட கருத்தாக்கம் கொண்டவர்களாம் இருக்காங்கனு முனங்குவதும்,பதிவாளர் குழுமம் வைக்கிறளவிற்கு நம்மூர்லாம் முன்னேரலையே,செல்போன் போல கணினியும்,இணையதளமும் வீட்டுக்கு வீடு எப்போ வருமோ தெரியலனும்,கணவரிடம் கணினிக்காக போட்டியிடுவதும்,அடிக்ட் ஆகிடாதனு கணவர் கண்டிக்குமளவிற்காகி விட்டது இந்த வலைப்பதிவு மேனியா
//உங்களுக்கு நோய் முத்திவிட்டது போல//
உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன் பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!
http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html
Post a Comment