திண்ணையுடைய வீடு...

நான் நேற்றைய மனிதன், 
அவர்களோ "இன்றைய வாழ்க்கை" வாழ்ந்துக்கொண்டிருப்பவர்கள். 
"நாளை" என்பது எல்லோருக்கும் பொது.
வெறும் சுவாசம் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் யாரையும் குற்றம் சொல்ல போவதில்லை நான்....


முதுமை
நான் விரும்பிப் போட்டுக்கொண்ட
வேஷம் அல்ல...
காலத்தின் கட்டாயம்...

என் வெள்ளி கிரீடம்
உறுத்தலாய்
தெரியவில்லை...
இப்பொழுதெல்லாம்;
16 க்கும்
நரைத்துவிடுகிறதே.
           
குடை,
கண்ணாடி,
ஊன்றுகோல்
என
அத்தியாவசிய
உறுப்புகளின்
எண்ணிக்கை
உயர்ந்தபோதுதான்,
தள்ளாமையை
உணர நேரிட்டது...

ஒரு கோப்பை
தேநீருக்கு
பலமுறை
அழைக்க வேண்டியதாயிருக்கிறது.
இப்பொழுது
மரியாதையெல்லாம்
எதிர்பார்ப்பதில்லை;
பசிக்கிறதே..

பால் வாங்க,
ரேஷன் வாங்க,
மின் கட்டணம் செலுத்த,
அவர்களுக்கு
நானும்;
எனக்கு
ஊன்றுகோலும்
தேவைப்பட்டது. 



இப்போது
என் ஊன்றுகோல்
வீட்டினுள்
சுவற்றில்
நிறுத்தி வைக்கப்பட்டு...
நான்
வெளியே
திண்ணையில்
கிடத்திவைக்கப்பட்டு...
                                                                  - ஐ.அனார்கலி.

24 கருத்துரைகள்:

ம.தி.சுதா said...

ஃஃஃஃநான்
வெளியே
திண்ணையில்
கிடத்திவைக்கப்பட்டுஃஃஃஃ

அருமையாக உள்ளது...

test said...

//ஒரு கோப்பை
தேநீருக்கு
பலமுறை
அழைக்க வேண்டியதாயிருக்கிறது.
இப்பொழுது
மரியாதையெல்லாம்
எதிர்பார்ப்பதில்லை;
பசிக்கிறதே.//
super! :-)

செல்வா said...

//ஒரு கோப்பை
தேநீருக்கு
பலமுறை
அழைக்க வேண்டியதாயிருக்கிறது.
இப்பொழுது
மரியாதையெல்லாம்
எதிர்பார்ப்பதில்லை;
பசிக்கிறதே..
//

வாய்ப்பே இல்லைங்க ., முதுமையின் துயரத ரொம்ப இயல்பா சொல்லிருகீங்க .!!

தினேஷ்குமார் said...

முதியோரின் நிலையறிந்து இயற்றி வரிகள்
நெஞ்சம்
கனக்கிறது
தின்னை
சுமக்கிறது
அகத்துள்ளும்
புறம்தள்ளி
அறையினிலும்
புறம்தள்ளி
வசற்வெளி
திண்ணையிலே
பெருஞ்சோகம்
படைத்ததேனோ
புரியாத புதிராய்
பெற்றெடுத்த
பெற்றோரை
பேனிகாக்க
மறந்தது ஏனோ
மானிடா............

வினோ said...

முதுமையின் வலி..

எழுதியவருக்கு வாழ்த்துக்கள்...

சாந்தி மாரியப்பன் said...

மனதை கனக்கசெய்யும் உண்மைகள்..

ஆமினா said...

:(

நாளைக்கு நமக்கும் இதே நிலை தான் என நினைகும் போது கவலையா இருக்கு

அழகான கவிதையை வடித்த அனார்கலிக்கு என் வாழ்த்துக்கள்

அருண் பிரசாத் said...

முதுமையின் வலியை அழகா சொல்லி இருக்காங்க அனார்கலி... வாழ்த்துக்கள்

வைகை said...

ம்ம்ம்............. நமக்கு என்னைக்கோ?

மாணவன் said...

//இப்போது
என் ஊன்றுகோல்
வீட்டினுள்
சுவற்றில்
நிறுத்தி வைக்கப்பட்டு...
நான்
வெளியே
திண்ணையில்
கிடத்திவைக்கப்பட்டு...//

வரிகள் ஒவ்வொன்றும் மனதை கனக்கச் செய்கிறது

வலிகளுடன் உணர்வுகளை வேதனையுடன் பதிவு செய்துள்ளீர்கள்

உணர்வுகளை படைத்த ஐ.அனார்கலிக்கு எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்

தொடரட்டும் உங்கள் பணி...

ஆனந்தி.. said...

It s so nice anaarkali...so touching words..keep it up..

Chitra said...

மனதில் சோகம்!

மாதேவி said...

மனத்தை நெருடுகிறது.

குறையொன்றுமில்லை. said...

இந்த முதுமையை அனைவருமே ஒரு நாள் சந்தித்துத்தானேஆகணும்?

NKS.ஹாஜா மைதீன் said...

wonderful lines...
painful words...gd

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

முதுமை நமக்கும் ஒருநாள் என நினைத்தால் இதல்லாம் வருமா?

சுந்தரா said...

:(

முதுமையின் வலிகளை எவ்வளவு அழகா சொல்லியிருக்கீங்க அனார்கலி! பாராட்டுக்கள்!!!

சென்னை பித்தன் said...

மனதைத் தொட்ட கவிதை!
எழுதியவருக்கு வாழ்த்துகள்

Anonymous said...

நீங்க நல்ல பண்ணறீங்க...
அதே சமயத்தில நகரத்திலிருந்து
கொஞ்சம் விரல் பிடித்து
கிராமத்துக்கு கூட்டி வாங்க...
ஒட்டு போடாட்டி பரவலிங்க

"உழவன்" "Uzhavan" said...

நல்லாருக்குங்க.

சிந்தையின் சிதறல்கள் said...

மனிதனாய் அவதிரித்த நாம்
முதுமையை சுவைத்திட வேண்டும்

அதனையும் உணர்த்திய கவிதை அருமை

ஆமினா said...

//"அமெரிக்காவில மழை வந்தா, அஞ்சு நிமிஷத்துல மழைத்தண்ணி காணாம போயிடும்.
"இந்தியாவில் மழை வந்தா, அஞ்சு நிமிஷத்துல ரோடு காணாம போயிடும்."//

செம கலக்கல்ஸ்

முல்லை அமுதன் said...

vaazhthukkal
http://kaatruveli-ithazh.blogspot.com/

நிலாமதி said...

நாளை நமக்கும் என ...உணர வைக்கிறது. பாராட்டுக்கள் பதிவுக்கு.

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்