முத்ததின் மணம்... இயற்கையா? செயற்கையா?


கூந்தல்...

பெண் புத்தகத்தின்
சில ஆயிரம்
வரி கவிதை....

செயற்கை மின்னலை 
தோற்றுவிக்கும்
இயற்கை மேகம்...

விழியை ஈர்க்கும் 
புதிய கருப்பு விசை...

பெண்களின் பெரும் பகுதி
நேரத்தை
சொல்லிச்சொல்லி
களவாடும்
செல்லமான திருடி...

கூந்தலுக்கு 
மலர்கள் தரும்  
மணம் 
கொஞ்ச நேரம் தான்...

அது சரி... 

எது நிரந்தரம்?

உச்சிமுகர்ந்து 
அன்னை தந்த
அன்பு முத்ததின் மணம்...

 



 - பாரதி.

55 கருத்துரைகள்:

Unknown said...

வீட்ல விசேஷங்க....

ஊர் கூடி தேர் இழுத்ததில் இது எமது வலைப்பூவின் நூறாவது பதிவு...

முளைச்சு மூணு இலை விட்ட நிலையில் எங்கள் பதிவுகள்.

எங்கள் குறும்புகள், அத்துமீறல்கள், வார்த்தையாடல்கள் அனைத்தையும் தாயுள்ளத்தோடு பொறுத்த உங்களுக்கு எம் வந்தனங்கள்.

உங்களின் வருகை, வாக்கு, வாழ்த்து, வழிகாட்டுதல் அனைத்திற்கும் மீண்டும் ஒரு முறை நன்றியை உரித்தாக்குகிறோம்...

NKS.ஹாஜா மைதீன் said...

#எது நிரந்தரம்?

உச்சிமுகர்ந்து
அன்னை தந்த
அன்பு முத்ததின் மணம்...#

அருமையான வரிகள்.....

Unknown said...

நல்லா இருக்குங்கோ

Chitra said...

எது நிரந்தரம்?

உச்சிமுகர்ந்து
அன்னை தந்த
அன்பு முத்ததின் மணம்...


...How sweet!!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////எது நிரந்தரம்?

உச்சிமுகர்ந்து
அன்னை தந்த
அன்பு முத்ததின் மணம்...////

இதற்கு ஈடு இணை உலகில் இல்லை.

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

Unknown said...

100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

karthikkumar said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...
////எது நிரந்தரம்?

உச்சிமுகர்ந்து
அன்னை தந்த
அன்பு முத்ததின் மணம்...////

இதற்கு ஈடு இணை உலகில் இல்லை.

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்///

பன்னிகுட்டி மாம்ஸ் எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டா நான் எத சொல்றது. 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

Chitra said...

100 th post.... Congratulations! :-)

ம.தி.சுதா said...

முத்தம் பற்றி சத்தமில்லாமல் சொல்லியுள்ளீர்களே... அருமை..
100 வது ரோஜாப் பூ வை சூடிக் கொள்வதில் மகிழ்வடைகிறேன்...

"தாரிஸன் " said...

எல்லாம் சரி.... நல்லா இருக்கு...
அதுக்கு எதுக்கு ஸ்னேஹா படம்??? ?

சிவாஜி said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!!!

வைகை said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

Unknown said...

கவித கவித

100 பதிவுக்கு வாழ்த்துக்கள் மற்றும் 1000 பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.

என் வலைதளத்திட்க்கு உங்கள் வருகை எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி

www.vikkiulagam.blogspot.com

தினேஷ்குமார் said...

ரோசாபூந்தோட்டமே 100 பதிவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

தினேஷ்குமார் said...

"தாரிஸன் " said...
எல்லாம் சரி.... நல்லா இருக்கு...
அதுக்கு எதுக்கு ஸ்னேஹா படம்??? ?

கரக்டா கேளுங்க சகோ நானே கொஞ்சம் ஆடிபோயிட்டேன்

Unknown said...

//"தாரிஸன் " said...
"தினேஷ் குமார்" said
எல்லாம் சரி.... நல்லா இருக்கு...
அதுக்கு எதுக்கு ஸ்னேஹா படம்??? ?//

கூந்தல் என்பதற்கான படம் தேடியதில், எல்லா கூந்தல் பற்றிய படங்கள் எல்லாம் பயமுறுத்துவதாகவே இருந்தது. வேறு வழியில்லாமல் சினேகா-கூந்தல் படம்.
எடுத்து விடலாமா?

வினோ said...

நூறுக்கு வாழ்த்துக்கள்... கவிதை அருமை....

சாந்தி மாரியப்பன் said...

அருமையான கவிதை..

நூறுக்கு வாழ்த்துக்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

Muruganandan M.K. said...

"நிரந்தரம்?
உச்சிமுகர்ந்து
அன்னை தந்த
அன்பு முத்ததின் மணம்..." மனம் எங்கும் நிறையும் வரிகள்.

மாணவன் said...

அருமை,

100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.......

Kousalya Raj said...

நூறாவது பதிவுக்கு என் வாழ்த்துக்கள்...கவிதை அருமை.

Ashwin-WIN said...

வாழ்த்துக்கள் சதத்துக்கு...

அன்பரசன் said...

கடைசி வரிகள் கலக்கல் போங்க..
100க்கு வாழ்த்துக்கள்....

சென்னை பித்தன் said...

பாண்டிய மன்னனுக்கே சந்தேகம் வந்ததாம்-பெண்களின் கூந்தலுக்கு இயற்கைமணமா,செயற்கை மணமா என்று.அதற்குப் பதில் கூறக் கடவுளே வரவேண்டியதாயிற்று!நாமெல்லாம் எம்மாத்திரம்?
சதம் அடித்தாகி விட்டு.தொடர்ந்து பொறுப்புடன் சிறப்பாக ஆட வாழ்த்துகள்.

Cable சங்கர் said...

வாழ்த்துக்கள்

கலையன்பன் said...

தாயின் அன்பை புதுக்கவிதையில்
அழகுற எடுத்துச் சொன்னீர்கள், நன்று!

கலையன்பன் said...

'கூந்தல்' என்று கவிதைத் தலைப்பிருந்தாலும்
கவிதையின் மையக்கருவே 'தாயன்பு' என்பதன்
மேன்மையைச் சொல்வதுதான். அத்ற்கு
'கூந்தல்' என்ற தலைப்பு முழுப் பொருத்தமல்லவே?

கலையன்பன் said...

குறுகிய காலவெளியில் நூறு பதிவுகள்
இட்டு, பிரபலமா(க்)கியுள்ளீர்கள்.
வாழ்த்துக்கள்!!!

கலையன்பன் said...

மன்னிக்க...
தலைப்பு 'முத்தத்தின் மணம்... இயற்கையா? செயற்கையா?'
என்றிருக்கின்றது. அதனால் தலைப்பு சரியே! (ஹி... ஹி...)
தலைப்பைச் சுருக்கலாமே?

http://kalaiyanban.blogspot.com/2010/12/entha-iravu-song8.html

pichaikaaran said...

வாழ்த்துக்கள்

செங்கோவி said...

கவிதையை கவிதை ஆக்குவதே கடைசி வரிகள்தான்..சூப்பர்..100வது பதிவிற்கு வாழ்த்துகள்!
----செங்கோவி
அதிரடிக்கார மச்சானும் அவசர மதுரை பயணமும்

Meena said...

குழந்தைக்கும் அன்னை
கணவருக்கும் அன்னை
உச்சி முகர்வதில் நான்

அந்நியன் 2 said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள் அது என்ன முளைச்சு மூணு இலை (ஒன்னு வெற்றிலை,ரெண்டு பச்சிலை,மூன்று ?

எது நிரந்தரம்?

உச்சிமுகர்ந்து
அன்னை தந்த
அன்பு முத்ததின் மணம்...

அது உங்களைப் போன்ற மாணவிகளுக்கு வேணா பொருத்தமாக இருக்கலாம் ஆனால் எங்களைப் போன்ற ஆண்களுக்கு பொருந்துமா என்று கொஞ்சம் யோசித்துத்தான் சொல்ல முடியும்.
காரணம் அஞ்சு ஆம்பிளைப் பிள்ளையை பெற்ற தாயவளுக்கு ஒரு பெண் பிள்ளை இல்லை என்றால் வாழ்க்கையே இருண்டு போய் விடும்,கடவுளே என் எதிர்காலத்தை கருதி எனக்கொரு பெண் மகளை தந்து விடு இறைவா என்று,பல அன்னை மார்கள் புலம்புவதை காணத்தான் செய்கிறோம்.

காரணம் மகன்கள் பெரியவர்களாகி மனைவி சொல்லினைக் கேட்டு,நம்மை சித்ரவதைக்கு ஆளாக்கும் பட்ச்சத்தில் ஆறுதலுக்கு அன்பு மகள்தானே ஓடோடி வரணும்.

சோ....உச்சிமுகர்ந்து
அன்னை தந்த
அன்பு முத்ததின் மணம்.மகளுக்கே உரிது.

வாழ்த்துக்கள் !!!

தேவன் மாயம் said...

வாழ்த்துகள்!

puthuvayal said...

ஒரு நல்ல விஷயத்திற்கு நடிகைப் படம் தேவையில்லை.
வலைப்பூவில் ரோஜா கூட்டமாவே இருங்க. தனித்தன்மையை விடாதீங்க.

சரி.பிள்ளைகளை வயல்வெளிக்கு கூட்டிட்டு வந்து பாருங்க. நானும் கொஞ்சம் மூளைக்கு வேலை தர மாதிரி விஷயங்களை சேர்த்து இருக்கேன்.

Admin said...

நல்ல வரிகள் இரசித்தேன்.
வாழ்த்த்துக்கள்...

ஹேமா said...

பாரத்...100 ஆவது பதிவுக்கு வாழ்த்துகள்.தொடருங்கள் உங்கள் எண்ணங்களோடு.தாயின் முத்தம் இனிப்பதையும் மறக்காமலிருப்பதையும் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் !

சிவகுமாரன் said...

கவிதை அருமை
வாழ்த்துக்கள்.

நிலாமதி said...

நூறை எட்டிய உங்களுக்கு பாராட்டுக்கள் . மேலும் பல்லாயிரம் படைக்க் வாழ்த்துக்கள். விலையிலாதது,
இயற்கையானது தாயின் உச்சி முகர்ந்த முத்தம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

100வது பதிவுக்கு வாழ்த்துகள்..

ஜெயந்த் கிருஷ்ணா said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்!

சி.பி.செந்தில்குமார் said...

டைட்டில் செம ,கவிதை சூப்பர்.கடைசி பன்ச்லைன் ஓக்கே

100வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

முத்தம் குடுக்கறமாதிரி ஒரு ஸ்டில் போட்டிருக்கலாம்

Unknown said...

100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்..

ஐயையோ நான் தமிழன் said...

அருமையான வரிகள்................

இந்த நூறு ஆயிரம் ஆகி அவை இன்னும் பல ஆயிரங்களாக மாற எனது வாழ்த்துக்கள்

Arun Prasath said...

அட 100 ரா... கலக்குங்க....

Arun Prasath said...

வடை வாங்க எவ்ளோ மொக்கை போட வேண்டி இருக்கு

R. Gopi said...

நூறாவது பதிவுக்கு வாழ்த்துகள்.

கவிதை சூப்பர்

Unknown said...

எமது நூறாவது பதிவை பார்வையிட்ட, பின்னூட்டமிட்ட, வாக்களித்த, வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது நன்றிகள். (பிரபல பதிவர்களை அனைவரும் வாழ்த்தியிருப்பது கூடுதல் மகிழ்ச்சியே)

Unknown said...

தாரிஸன், தினேஷ் குமார் மற்றும் புதுவயல் ஆகியோரின் பின்னூட்டத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், இந்த பதிவிலுள்ள முதல் படம் நீக்கப்படுகிறது.

Unknown said...

puthu vayal said....
//நானும் கொஞ்சம் மூளைக்கு வேலை தர மாதிரி விஷயங்களை சேர்த்து இருக்கேன்.//

காத்திருக்கிறோம் சகோ, ஆணையிடுங்கள் விரைவில்...

Unknown said...

பல பின்னூட்டங்கள், பதிவில் உள்ள கவிதையை விட ரசனையாக இருப்பது மிக்க மகிழ்ச்சியூட்டுகிறது.

அருண் பிரசாத் said...

அதுக்குள்ள 100 ஆ.... சபாஷ்...


வாழ்த்துக்கள்

செழியன் said...

அருமையான வரி+ கவிதை
//பெண்களின் பெரும் பகுதி
நேரத்தை
சொல்லிச்சொல்லி
களவாடும்
செல்லமான திருடி...//

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்