மழைத்தண்ணியில
வீடெல்லாம் மிதக்குதுன்னு
டீ.வி செய்தியில புலம்புறீங்க..
ஏரில வீடு கட்டுனா
எங்கதான் போயி நிக்கும்
மழைத்தண்ணி?
ஊருக்குள்ள யானை வருதுன்னு
பட்டாசு வைக்குறீங்க;
ஏனுங்கனு கேட்டா
வாய் உங்களுக்கு நீளுதுங்க..
அதோட இடத்துல புகுந்துகிட்ட
உங்கள தொரத்த
ஆணைகுண்டு இல்ல இல்ல
அணுகுண்டு வெக்கலாங்களா?
கிராமத்து அரசமரத்தடி
மோசமின்னு சொன்ன நீங்க
நகரத்து ஆஸ்பத்திரியில
பஞ்சு மெத்தையில
படுத்துதான் கெடக்குறீங்க...
அத சொகமுன்னு சொக்கிப்போயி
கிடக்குறீங்க...
விவசாயம் நடந்த இடத்துல
கான்கிரீட் பூக்கள நட்டீங்க..
மரத்தை எல்லாம்
மதக்கலவரத்தில வெட்டுனீங்க..
இப்ப மொத்தமா மாட்டிகிட்டு
முழிக்குறீங்க...
வெதைச்சது வினைய தானே
அப்புறம் என்ன வெட்கம் அறுக்கறதுக்கு...
என்னவெனா செய்யுங்கப்பு..
ஆனா உங்க நகரத்து புது வீட்ட
எதுக்காவது தோண்டிராதீங்க...
ஒரு வேள அது
பொண பொதைச்ச இடமாக இருக்கலாங்க...
- பாரதீ...
இந்த கவிதை பிடித்திருந்தால் வாக்களித்து ஆதரவளிக்க அன்புடன் வேண்டுகிறோம்..
32 கருத்துரைகள்:
வினையை விதைத்து விட்டோம் வினையைத்தான் அறுக்கவேண்டும் .அதுதான் நம் தலை விதி
ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்கிறவர்கள் கவனிக்க வேண்டிய கவிதை
//என்னவெனா செய்யுங்கப்பு..
ஆனா உங்க நகரத்து
புது வீட்ட
எதுக்காவது தோண்டிராதீங்க...
ஒரு வேள அது
பொண பொதைச்ச இடமாக இருக்கலாங்க...//
சூப்பரப்பு!! :-)
வெதைச்சது வினைய தானே
அப்புறம் என்ன வெட்கம் அறுக்கறதுக்கு...//
அறுத்து தான் ஆகணும்
அருமையான கவிதை!
அனைவரும் யோசிக்க வேண்டிய கவிதை...
தண்ணி தேங்குர ஏரிக்குள்ள வீட்ட கட்டினா அப்புறம் தண்ணி எங்க போகும்?
விவசாயம் நடந்த இடத்துல
கான்கிரீட் பூக்கள நட்டீங்க..
.....சுளீர்! உண்மைதான்.
யோசிக்க வைக்கும் கவிதை... வாழ்த்துக்கள்..
Very nice :)
good one
இப்ப தேவையான விழிப்புணர்வு இது!! ஏனோ இப்ப பின்னூட்டங்களுக்கு பதில் வருவதில்லை?!!!!
நிதர்சனம்
///கிராமத்து அரசமரத்தடி
மோசமின்னு சொன்ன நீங்க
நகரத்து ஆஸ்பத்திரியில
பஞ்சு மெத்தையில
படுத்துதான் கெடக்குறீங்க...
அத சொகமுன்னு சொக்கிப்போயி
கிடக்குறீங்க...//
இந்த வரிகள் மட்டும் இல்லைங்க ., எல்லா வரிகளுமே சிந்திக்க தூண்டுகின்றன ..
சாட்டை வீச ரெடியாகுறீர்கள் நடக்கட்டும்
சுளீர் வரிகள்..
//விவசாயம் நடந்த இடத்துல
கான்கிரீட் பூக்கள நட்டீங்க..
மரத்தை எல்லாம்
மதக்கலவரத்தில வெட்டுனீங்க..//
பொட்டில் அறைந்தார்போன்று உள்ளது அருமை,
தொடருங்கள்....
உங்கள் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்களுடன்
உங்கள்.மாணவன்
முகத்தில் அறைகிறது கவிதை...
ஆக, இது விதைச்சதை அறுக்கிற காலம்!
மழை நீரை சேகரிப்போம். ஏரியில் வீடு கட்ட மாட்டோம்
மழை நீரை சேகரிப்போம். ஏரியில் வீடு கட்ட மாட்டோம்
மழை நீரை சேகரிப்போம். ஏரியில் வீடு கட்ட மாட்டோம்
மழை நீரை சேகரிப்போம். ஏரியில் வீடு கட்ட மாட்டோம்
மழை நீரை சேகரிப்போம். ஏரியில் வீடு கட்ட மாட்டோம்
Concrete pookalai nattathala mattumilla mazhai neerukku sariyana vadikal illathathalaium yamarajan azhaiya virundaalia adikkadi varraru
அழுத்தமான பதிவு.
நானும் இது சம்பந்தமா ஒரு பதிவு போட்டிருக்கேன். குரங்குகளுடன் கற்பனை உரையாடல் வடிவத்தில்!
http://ramamoorthygopi.blogspot.com/2010/09/blog-post_14.html
நீங்க
பட்டணத்து
எதார்த்ததை
சொன்னிங்க
நம்ம வயலுக்கு வந்து
பாருங்க
கவிதை வரிகளில் ஒரு மிகப்பெரிய விஷயத்தை சொல்லி இருக்கீங்க ..!! விழிப்புணர்வு வருமான்னுதான் தெரியல ..!! :-)
பெண்களின் உணர்வு பூர்வமான பாடல்கள் தொடர் தங்கள் விருப்பப்படி இதில் http://kjailani.blogspot.com/2010/12/blog-post.html
தொடருக்கு அழைத்த தங்கள் மற்றும் நீரோடை மலீக்காக்கா அவர்களுக்கும் நன்றிகள் பல :-)
கலக்குறீங்க ! நடத்துங்க!
அருமை...
கடைசி வரி நச்
இன்றைய மாணவர்களின் தெளிவை பார்த்தால் நாளை இந்தியா பற்றிய நம்பிக்கை எழுகிறது... வெறும் எழுத்தோடு நின்று விடாமல் செய்கையிலும் காட்டுங்கள். கவிதையும் , அதன் கருத்தும் ரொம்ப அருமை
அருமையான மதிவு - உண்மையின் நிறம் கருமை(ஏனெனில் கண்ணுக்கு புலப்படுவதில்லை)
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
மழை நீரை சேகரிப்போம். ஏரியில் வீடு கட்ட மாட்டோம்
மழை நீரை சேகரிப்போம். ஏரியில் வீடு கட்ட மாட்டோம்
மழை நீரை சேகரிப்போம். ஏரியில் வீடு கட்ட மாட்டோம்
மழை நீரை சேகரிப்போம். ஏரியில் வீடு கட்ட மாட்டோம்
மழை நீரை சேகரிப்போம். ஏரியில் வீடு கட்ட மாட்டோம்//
அண்ணே ஒரு தடவை சொன்னா போதும்ண்ணே, அது என்ன ஃஎக்கோ ஃஎபெக்ட் வேற கொடுக்குறீங்க.....
எங்க போனாலும் இதே வேலையா போச்சு...
ஹிஹிஹி....
நல்ல நிறைவான வரிகள்..
வாழ்த்துக்கள் சகோ..
இந்த பயணம் சிறக்க என் வாழ்த்துக்கள்..
விவசாயம் நடந்த இடத்துல
கான்கிரீட் பூக்கள நட்டீங்க..
nice lines
வயித்துல புளி கரைக்காதிங்க அண்ணா!
Post a Comment