இன்றைய கவிதைகள்:
By சௌமினா தஸ்ரின் எட்டாம் வகுப்பு இ பிரிவு.
சூரியனைக் கண்டேன்;
என்னுள் வெளிச்சம் தோன்றியது.
சந்திரனைக் கண்டேன்;
என்னுள் குளிர்ச்சி தோன்றியது.
நட்சத்திரங்களைக் கண்டேன்;
என்னுள் மகிழ்ச்சி தோன்றியது.
பூக்களை கண்டேன்;
என்னுள் புத்துணர்வு தோன்றியது.
தோல்வியை கண்டபின் தான்
என்னுள் புது துணிவு தோன்றியது.
அன்பை பொழிய அன்னை இல்லை,
ஆதரவு காட்ட தந்தை இல்லை,
கூடி விளையாட நண்பரும் இல்லை,
கொண்டாடி மகிழ்ந்திட உறவினரும் இல்லை,
ஆனால் நான் அனாதையும் இல்லை,
ஏனெனில் என் அன்பு கடவுள் என்னொடு... இன்றைய சிந்தனை:
குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கிமான இரண்டு விஷயங்கள்:1.காரணமின்றி சந்தோஷமாக இருப்பது.
2.எப்போதும் ஏதாவது ஒன்று செய்துக்கொண்டு பிஸியாக இருப்பது.
இன்றைய மொக்கை:
'டேய், என்னடா டெஸ்ட்ல ஜீரோ மார்க் வாங்கி இருக்கே?'"அது ஜீரோ இல்லப்பா, நான் நல்லா படிக்கிறேன்னு
டீச்சர் 'ஓ' போட்ருக்காங்க"
இன்றைய தகவல்:
இந்தியாவிலுள்ள ஏழைகளுக்கான ஒரு உணவகத்தின் இன்றைய விலைப்பட்டியல்
தேநீர் ரூ. 1.00
சூப் ரூ. 5.50
சாப்பாடு ரூ. 2.00
சப்பாத்தி ரூ. 1.00
சிக்கன் ரூ. 24.50
தோசை ரூ. 4.00
மீன் ரூ. 13.00
வெஜ்.பிரியாணி ரூ. 8.00
இது எல்லாம் குறைவான சம்பளம் பெறுகிற ஏழைகளுக்கு மட்டும்,அந்த ஏழைகள் ரூ.80,000 சம்பளம் வாங்குகிற நம் எம்.பி.கள்.
அட நம்ம நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கேன்டீனின் விலைப்பட்டியல் தாங்க இது.
டிஸ்கி: 1பதிவுகளுக்கு டெரர் தலைப்பு மட்டும் எடுபடும், மென்மையான தலைப்புகள் எடுபடாது அப்படினு சொன்னாங்க,
என்னதான் நடக்குதுன்னு பாக்கவே இந்த தலைப்பு.
டிஸ்கி:2 ஈரோடு பதிவர் சந்திப்புக்கு எங்கள் நல்வாழ்த்துகள்.
35 கருத்துரைகள்:
i vadai
இது எல்லாம் குறைவான சம்பளம் பெறுகிற ஏழைகளுக்கு மட்டும்,அந்த ஏழைகள் ரூ.80,000 சம்பளம் வாங்குகிற நம் எம்.பி.கள். //
ada paavigala
தோல்வியை கண்டபின் தான்
என்னுள் புது துணிவு தோன்றியது///
ithu toppu
Mokkai comedy mokkai alla arumai MP Canteen super
விசயங்கள் பல.. கான்டீன் கொடுமை...
நானும் ஏழைதான் ஒரு பயபுள்ளையும் எனக்கு இந்த விலையில தரமாட்டேங்கிறாங்க!
வாழ்த்துக்கள் தஷ்ரீன்
அருமையான தகவல்.....
மசாலா சூப்பரா இருக்கு
சூப்பர் ஜோக்
உணவக விலை பட்டியல் அதிர்ச்சி..நல்ல தொகுப்பு
மூட்டை தூக்கும் ஏழை தெருவோர கடையில் பத்து ரூபாய்க்கு சாப்பிடுகிறான்
சூப்பருங்க.. தொடரட்டும்...
ரோஜா பூந்தோட்டம் இனிமையான மணம் கமழும் சுவையான அனுபவம் தந்தது..
நல்வாழ்த்துக்கள்
//தோல்வியை கண்டபின் தான்
என்னுள் புது துணிவு தோன்றியது.//
//அனாதையும் இல்லை,ஏனெனில் என் அன்பு கடவுள் என்னொடு... //
மென்மை மென்மேலும் மேன்மையடைய வாழ்த்துக்கள்
கண்டிப்பா நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பொது மக்களுக்கும் இதே விலையில் உணவு கொடுப்போம்
இது எல்லாம் குறைவான சம்பளம் பெறுகிற ஏழைகளுக்கு மட்டும்,அந்த ஏழைகள் ரூ.80,000 சம்பளம் வாங்குகிற நம் எம்.பி.கள்.
அட நம்ம நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கேன்டீனின் விலைப்பட்டியல் தாங்க இது.
.....பாவம்ங்க... எப்படி அவங்களுக்கு கட்டுபடி ஆகுது? சம்பளத்தை உயர்த்த சொல்லி போராட்டம் நடத்தலியா?
//தோல்வியை கண்டபின் தான்
என்னுள் புது துணிவு தோன்றியது.//
its nice
ஃஃஃஃநம்ம நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கேன்டீனின் விலைப்பட்டியல் தாங்க இது.ஃஃஃஃ
நம்ம நாட்டிலும் இதே கதை தாங்க...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
கருத்தடை முறை உருவான கதை - contraception
//கொண்டாடிமகிழ்ந்திட உறவினரும் இல்லை.ஆனால் நான் அனாதையும் இல்லை.ஏனெனில் என் அன்புகடவுள் என்னோடு//
அருமை.வாழ்த்துக்கள்.
அருமை..வாழ்த்துக்கள்,,சௌமினா..
//இது எல்லாம் குறைவான சம்பளம் பெறுகிற ஏழைகளுக்கு மட்டும்,அந்த ஏழைகள் ரூ.80,000 சம்பளம் வாங்குகிற நம் எம்.பி.கள். //
பாவம் அஞ்சி வருஷம்தானே அதான் ஏழைன்னு வச்சிருக்காங்களோ என்னவோ..!!
//என்னுள் புது துணிவு தோன்றியது.//
அழகான கவிதை கொடுத்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள் தங்கம்!!
// டீச்சர் 'ஓ' போட்ருக்காங்க"//
இது 5 வருஷத்துக்கு முன்னாடி தெரியாம போச்சே :(
மென்மைமேனமையடைய வாழ்த்துக்கள் பதிவுகள் பலவகைஅனைத்துமே அருமை
நஸரீன் வாழ்த்துக்கள்பதிவுகள் பலவகைஅருமை
பாவம் ஏழைகள் இவ்வளோ காஸ்ட்லியா இருக்கு விலை பட்டியல்... டிஸ்கவுண்ட் குடுக்க சொல்லி நாடாளுமன்றத்தை முடக்கனும்
நீங்கள் அழைத்த -
பிடித்த 10 பெண்குரல் பாடல்கள்...
தொடர்பதிவு எழுதியாச்சு... தாமதத்திற்கு மன்னிக்கவும்
http://arunprasathgs.blogspot.com/2010/12/10.html
//தோல்வியை கண்டபின் தான்
என்னுள் புது துணிவு தோன்றியது.//
ரொம்ப அருமையா இருக்குங்க ..!!
//அட நம்ம நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கேன்டீனின் விலைப்பட்டியல் தாங்க இது.//
அட கொடுமையே ..?!
தகவல்களும் கவிதையும் அருமை...
தொடருங்கள்....
சௌமினாவுக்கு என் இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள்..
//இது எல்லாம் குறைவான சம்பளம் பெறுகிற ஏழைகளுக்கு மட்டும்,அந்த ஏழைகள் ரூ.80,000 சம்பளம் வாங்குகிற நம் எம்.பி.கள்.
அட நம்ம நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கேன்டீனின் விலைப்பட்டியல் தாங்க இது//
என்ன கொடும சார்!
தஸ்ரினுடைய கவிதை அருமை.
கேண்டீன்ல இம்புட்டு விலை வித்தா நம்ம மக்களுக்கு எப்படிக் கட்டுப்படியாகும் :(
எட்டாம் வகுப்பு மாணவி எழுதிய கவிதையா?என்ன தெளிவான சிந்தனை!வாழ்த்துகள்
//இந்தியாவிலுள்ள ஏழைகளுக்கான
ஒரு உணவகத்தின் இன்றைய விலைப்பட்டியல் //
இரு எம்.பி.கள் பேசிக் கொள்கிறார்கள்
”விலையெல்லாம் மலிவா இருக்கே?”
”நம்மை மாதிரி எழைகளெல்லாம் நல்லா வயிறாரச் சாப்பிடணும்னு கொடுக்கிறாங்க”
பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்!!
Post a Comment