பொம்மியின் வார்த்தைகளில் வளர் கன்னி.

காத்திருந்து, காத்திருந்து தேயும் 
இந்த முதிர்(கன்னி) நிலவுக்கு
யார் ஆறுதல் சொல்வது...விடியல்  
துளிர் விடும்  
சிறுபொழுது மயக்கம்...

"கனவு வங்கி"மூடப்பட்டு
பெருமூச்சு
விழுங்கும் நிசப்தம்...

முட்களை
இழுத்துப்பிடித்து
போர்வை வானத்தில்  
நட்சத்திர போர்...

இந்த நிலவுக்கு  
யார் பூச்ச்சூட்டுவது...

விமானப்பயணம்
வாழ்க்கையின் வேகம்

நிறுத்தற்குறிகள்
அம்மா, அப்பா..
ஆச்சர்யம்
வளைக்கப்படும்  
கேள்விகள்...

பதில்
சொல்லத்தெரியாத
இளிப்புகள்;

எப்போதோ வரும் 
 மழைக்காக  
எத்தனை நாள்  
சேமிக்க வேண்டும்; 
அழுகையுடன்
அழகை...

-பொம்மி. 

இந்த கவிதை பிடித்திருந்தால்  இன்ட்லியில்
வாக்கு தர வேண்டுகிறோம்..


26 கருத்துரைகள்:

Arun Prasath said...

நல்லா எழுதறீங்க பொம்மி

பாரத்... பாரதி... said...

நன்றி அருண் பிரசாத் , வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள்..

எஸ்.கே said...

மிக நன்றாக உள்ளது! எழுதியவருக்கு வாழ்த்துக்கள்!

ஆனந்தி.. said...

very very nice bommi..keep it up ..keep it up!!

பாரத்... பாரதி... said...

வலைச்சரம் தளத்தில் எங்களை வாழ்த்திய எஸ்.கே. அவர்களுக்கு நன்றிகள்.. (இங்கே வாழ்த்தியதற்கும்....)

பாரத்... பாரதி... said...

Ananthi said...
//very very nice bommi..keep it up ..keep it up!!//
Thank you sister...

ஆமினா said...

சூப்பர் பொம்மி!!!!

மனமார்ந்த வாழ்த்துக்கள்

பாரத்... பாரதி... said...

வாழ்த்திய ஆமினா அவர்களுக்கு நன்றிகள்..

வைகை said...

நல்லாயிருக்கு! வாழ்த்துக்கள்!!

வினோ said...

நல்லா இருக்குங்க கவிதை.. வாழ்த்துக்கள்....

Chitra said...

எப்போதோ வரும்
மழைக்காக
எத்தனை நாள்
சேமிக்க வேண்டும்;
அழுகையுடன்
அழகை...


.....ஆழமான வரிகள்.

பாரத்... பாரதி... said...

வாழ்த்திய வைகை மற்றும் வினோ ஆகியோர்க்கு நன்றிகள்..

பாரத்... பாரதி... said...

//சித்ரா சொன்னது..
.....ஆழமான வரிகள்.//

நன்றிங்க சித்ரா..

பாரத்... பாரதி... said...

//சூப்பர் பொம்மி!!!!//
நன்றி ஆமீனா-அக்கா..

dineshkumar said...

பொம்மிக்கு வாழ்த்துக்கள் ......

ரசித்தேன் ........

dineshkumar said...

குடும்ப சூழல்
ஒருபக்கம்
குடும்ப சுமையோ
மறுபக்கம்
முதிர் மங்கையரின்
மணநாள் காணா
கண்ணீர் ஆழமாக
பதியப்பட்டுள்ளது
வரிகளில்

பாரத்... பாரதி... said...

வாங்க தினேஷ்... நன்றிகள் கருத்துரைக்கு...

Lakshmi said...

மிக, மிக நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.

அமைதிச்சாரல் said...

நல்லா எழுதியிருக்கீங்க பொம்மி.. வாழ்த்துக்கள்.

puthiaparvai said...

ஆழமான
உயிரோட்டமான
வரிகள் ...

பொம்மி
விம்மி வருது
அழுகை...

பாரத்... பாரதி... said...

வாழ்த்திய லக்ஷ்மி,அமைதிச்சாரல் மற்றும் புதிய பார்வை ஆகியோர்க்கு நன்றிகள். அடிக்கடி வாங்க...

//பொம்மி
விம்மி வருது
அழுகை...//


ஆகா... பின்னூட்டத்தில கவிதை!

Riyas said...

//இந்த நிலவுக்கு
யார் பூச்ச்சூட்டுவது...//

நான் ரசித்த அழகான வரி..

ஹேமா said...

மழைக்காகக் காத்திருக்கும்
பொம்மி அழகு !

ப.செல்வக்குமார் said...

/பதில்
சொல்லத்தெரியாத
இளிப்புகள்;//

ஹி ஹ ஹி ., நானும் இந்த மாதிரி நிறைய இடங்களில் இருந்திருக்கிறேன் ..௧!

மாதேவி said...

நல்ல கவிதை.

Riyas said...

//இந்த கவிதை பிடித்திருந்தால் இன்ட்லியில்
வாக்கு தர வேண்டுகிறோம்//

இப்படியெல்லாம் சொல்லக்கூடாது.. ஓட்டுப்போடுங்கன்னு அடம்பிடிக்கனும்

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்