இருட்டில் கிடக்கும் வெளிச்ச பறவைகள்....

வேட்டையாடி...விளையாடி...

கங்கா,பவானி,யமுனா,
காவேரி,அமராவதி
என ஆறுகளுக்கு
பெயரிட்டு,
எங்களை
பெருமைப்படுத்திவிட்டு,
கள்ளிப்பால் ஊற்றி
எங்களை சிறுமைபடுத்துவது
ஏன்?

லட்சுமி,சீதா,சரஸ்வதி,பார்வதி
என தெய்வங்களாய்,
எங்களை உயர்த்திவிட்டு;
நெல் உமி போட்டு,
எங்களை
மண்ணுக்குள் அனுப்புவது
ஏனோ?

பட்டாம்பூச்சியாய்
சிறகடித்து
பறக்க நினைக்கும்
எங்களை
கணவன் இறந்தபின்
வளையல், பூ மறுத்து
பழமை தீக்குச்சியால்,
பொசுக்குவது
ஏன்?

அது
எப்படி
உங்களால் முடிகிறது
சிரித்துக்கொண்டே;
எங்கள் நகக்கண்ணில்
ஊசி நுழைக்க...

-நர்மதா ஆனந்தகுமார்.

29 கருத்துரைகள்:

வைகை said...

வாழ்த்துக்கள் நர்மதா!! தொடரட்டும்!!

வைகை said...

அட நான்தான் முதல்ல!

ஆனந்தி.. said...

Fentastic Narmada..:))

பாரத்... பாரதி... said...

இருட்டில் கிடக்கும் வெளிச்ச பறவைகள்....
முதலில் நதியாய் ஓடோடி வந்த வைகைக்கும், ஆனந்தி அவர்களுக்கும் நன்றிகள்.. வாக்களித்தற்கும்.

வைகை said...

நன்றிக்கு நன்றி பாரதி!! புதிய பதிவு போட்டாச்சு!!!

ப.செல்வக்குமார் said...

//பட்டாம்பூச்சியாய்
சிறகடித்து
பறக்க நினைக்கும்
எங்களை
கணவன் இறந்தபின்
வளையல், பூ மறுத்து
பழமை தீக்குச்சியால்,
பொசுக்குவது
ஏன்?//

சரியான கேள்விகள்ங்க .!

பாரத்... பாரதி... said...

நன்றி செல்வா...

dineshkumar said...

அது
எப்படி
உங்களால் முடிகிறது
சிரித்துக்கொண்டே;
எங்கள் நகக்கண்ணில்
ஊசி நுழைக்க...

சமுதாயம் பதில் சொல்லும் என்று பார்ப்பதைவிட கேள்விகளின் பதிலை நாமே நம்மால் உண்டாக்குவோம் பதில்சொல்லா சமுதாயம் அன்று கேள்விகேட்க்கும் கேள்விக்கு விடைசொல்ல புதிய சமதாயம் படைப்போம்

பாரத்... பாரதி... said...

நன்றி தினேஷ் வருகைக்கும், கருத்துக்கும்...

அன்பரசன் said...

//சிரித்துக்கொண்டே;
எங்கள் நகக்கண்ணில்
ஊசி நுழைக்க...//

நல்லா இருக்குங்க.

பாரத்... பாரதி... said...

நன்றி அன்பரசன்....

ராஜவம்சம் said...

தெய்வங்கள் அதிகமானால் குழப்பம் என்பதாலோ.

பதில் சொல்லமுடியா சமூகப்பிரச்சனை நர்மதாவுக்கு வாழ்த்துக்கள்.

Chitra said...

மனதின் வலி, கவிதையில் தெரிகிறது.

ஆமினா said...

வாழ்த்துக்கள் நர்மதா....

நல்லகவிவரிகள்

சுந்தரா said...

நர்மதாவின் குரல் ஒட்டுமொத்தப் பெண்களின் குரலாக ஒலிக்கிறது.

பாராட்டுக்கள் நர்மதா!

THOPPITHOPPI said...

பாரத் பாரதி குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்குள்

அருமையா கவிதை எழுதுறிங்க.


கள்ளிப்பால் ஊற்றி
எங்களை சிறுமைபடுத்துவது
ஏன்?
--------------------
வேதனையை ஒதுக்கி கொஞ்சம் மகிழ்ச்சியையும் காட்டுங்கள்

ஹரிஸ் said...

அட்டகாசம்..வாழ்த்துக்கள் நர்மதா,,,

வினோ said...

நல்ல கேள்வி தாங்க.. வாழ்த்துக்கள் நர்மதா...

Riyas said...

nice poem narmada...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

கவிதை ரொம்ப நல்லாருக்கு.. வரிகள் ரசிக்கத்தூண்டுது.

எஸ்.கே said...

அருமை! அருமை!

கே.ஆர்.பி.செந்தில் said...

அற்புதமான கவிதை ... சமுதாயக்கோபம் கொப்பளிக்கும் வரிகள்.. நர்மதா ஆனந்தகுமாருக்கு ன் வாழ்த்தும், பாராட்டும்...

மாணவன் said...

//அது
எப்படி
உங்களால் முடிகிறது
சிரித்துக்கொண்டே;
எங்கள் நகக்கண்ணில்
ஊசி நுழைக்க.....//

மனதை உறுத்தும் வரிகள்...
அருமை தொடரட்டும் உங்கள் பணி

polurdhayanithi said...

பாராட்டுகள் நல்ல ஆக்கத்தை தேர்வு செய்து பதிவு செய்துள்ளீர் . உளம் கனிந்த பாராட்டுகள்

polurdhayanithi said...

பாராட்டுகள் நல்ல ஆக்கத்தை தேர்வு செய்து பதிவு செய்துள்ளீர் . உளம் கனிந்த பாராட்டுகள்

sachu said...

"கணவன் இறந்தபின்
வளையல், பூ மறுத்து
பழமை தீக்குச்சியால்,
பொசுக்குவது
ஏன்?"

This stanza made me stun!!..
All the best for the poet.

sachu said...

"கணவன் இறந்தபின்
வளையல், பூ மறுத்து
பழமை தீக்குச்சியால்,
பொசுக்குவது
ஏன்?"

This stanza made me stun!!..
All the best for the poet.

விக்கி உலகம் said...

அருமை

லீலா said...

1அருமை பெண்கள் உணர்வுகள் நன்றாக சொல்லப்பட்டுள்ளது. நம்பிக்கை ஊட்டுவதாக இருந்திருக்கலாம் லீலா

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்