கல்வி தந்தவர்களே….

வறண்டு போன பாறையாய் இருந்தேன்;

வாழ்க்கை பாதையில் உருண்டொடியதால்

கல்லாய் மாறினேன்.

அப்படியே விட்டிருந்தால் எப்படியோ

போயிருப்பேன்.- உங்கள்

கை பட்டதால் இன்று பலபேர் வணங்கும்

சிற்பமாய் வடிவெடுத்தேன்.

உடல் மட்டும் கொண்டிருந்த எனக்கு

உயிர் தந்த உங்களுக்கு

நான் எதை தரக்கூடும்?

என் ஆனந்த கண்ணீரை தவிர...

- சமீமா பர்வீன்.M.K.
----------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------
கல்வி


வாழ்க்கைக்கு தேவை பணம்;

பணம் இருந்தால் அதிகாரம் இருக்கும்;

அதிகாரம் இருந்தால் பணிவு இருக்க வேண்டும்;

பணிவு இருந்தால் துணிவு இருக்க வேண்டும்;

துணிவு இருந்தால் இன்பம் இருக்க வேண்டும்;

இன்பம் இருந்தால் அன்பு இருக்க வேண்டும்;

மனிதன் மனிதனாக இருக்க வேண்டுமென்றால்

கல்வி கற்க வேண்டும்.


- உமல் முத்து பசிரியா.M.

3 கருத்துரைகள்:

cheena (சீனா) said...

அன்பின் பாரதி

ஆசிரியப் பணியே அறப்பணி - அதற்கே உனை அர்ப்பணி என்ற கொள்கையின் அடிப்படையில் பணியாற்றும் ஆசிரியப் பெருமக்களுக்கு - உயிர் கொடுத்த ஆசிரியர்களுக்கு மாணவியரின் ஆனந்தக் கண்ணீர் காணிக்கை நன்று நன்று. சமீமா பர்வீனின் எண்ணங்கள் நன்று

உமல் முத்து பசிரீயாவின், கல்வியின் முக்கியத்துவத்தினை விளக்கும் சிந்தனை அருமை.

நல்வாழ்த்துகள் அனைவருக்கும்
நட்புடன் சீனா

Unknown said...

fantastic words shameema..without teachers we are nothing and they guide us in everything...you have nicely said...

Unknown said...

நன்றிகள் vaish... வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்
வந்து பார்க்கவும்..

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்