வினாக்களின் நீட்சி..

அங்கே இல்லாதவனுக்கு
வறுமையால் பட்டினிச்சாவு;

இங்கே இருப்பவனுக்கோ
முறையற்ற உணவால் மாரடைப்புச்சாவு;

அங்கே இல்லாதவனுக்கு
மழலையை பெற புதிய மருத்துவயுக்தி

இங்கே அதிகம் இருப்பவனுக்கோ
கள்ளிப்பால் யுக்தி;

அங்கே இல்லாதவனுக்குப் புகலிடம்
தெருவோர நடைப்பாதை

இங்கோ இருப்பவனுக்கு புகலிடம்
எட்டடுக்கு மாடி, எட்டிப்பிடிக்க வானம்;

ஏனிந்த பேதம்? ஏனிந்த பிரிவினை?
ஏனிந்த பாகுபாடு?

பகுத்துண்ணல் என்பது உணவுக்கு மட்டுமா?
வாழ்க்கை முறையில் இல்லையா?

- உமா மகேஸ்வரி.ம.

4 கருத்துரைகள்:

ஜோயல்சன் =9841004800 said...

மிகவும் சரி...
அருமை கவிதை வரிகளும் தன்

பாரத்... பாரதி... said...

நன்றி..பிடித்த வரிகளைக் குறிப்பிட்டிருந்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.. இருப்பினும் நன்றி ஜோயல்சன்

cheena (சீனா) said...

அன்பின் பாரதி

உமா மகேஸ்வரியின் கட்டுரை அருமை - இருப்பவனிடம் இருந்து இல்லாதவனுக்குப் பகிரலாமே என்ற எண்ணம் நன்று - வினாக்களின் நீட்சி என்னும் தலைப்பு நன்று.

கள்ளிப்பால் பகிர இயலாதெ - பகிரக் கூடாதே - அவ்வரிகள் இவ்வுரைக்குப் பொருந்தாதே

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

பாரத்... பாரதி... said...

சீனா... அவர்களுக்கு,
முதலில் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்..
இந்த வலைப்பூ-இல் உள்ள
அனைத்து பதிவுகளை படித்து,
மிகச் சரியான மதிப்பீடுகளை வழங்கியமைக்கு
நன்றிகள். எங்களுக்கு வேறு யாரும் வழங்கியிராத
ஆதரவு. உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கும்
தாய் அன்பு உங்களுடையது..
நன்றிச் சொல்ல வார்த்தைகளே
இல்லாது தீர்ந்துப்போன உணர்வு...
தங்கள் சுட்டிக்காட்டிய தவறுகளை
வெகு விரைவில் சரி செய்கிறோம்..
தொடர்ந்து வழிகாட்டுங்கள்..
தமிழ் மணத்தில் இணைய முயற்சிகளைத்
தொடங்கி விட்டோம்..

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்