பிஞ்சுக்கேள்வி....

அதை
கோவில் இருந்த இடம்
எங்களிடம் தாருங்கள்
என்கிறார்கள் சிலர் ,

மசூதி இருந்த இடம்
எங்களிடம் தாருங்கள்
என்கிறார்கள் சிலர்,

இரண்டு பேருக்கும்
வேண்டாம் ,
எங்களிடம் '
தாருங்கள்.
நாங்கள்
வீடு கட்டிக்கொள்கிறோம்;
எங்களுக்குத்தான்
வீடில்லையே
என்கிறாள்
பாரதி (ஆறாம் வகுப்பு ஆ பிரிவு).

என்ன பதில்
சொல்லக்கூடும்
நான்?
என்னச் சொல்லி
புரிய வைக்க நான் ?

8 கருத்துரைகள்:

cheena (சீனா) said...

அன்பின் பாரதி

வீடில்லையே எனக் கேட்கும் பாரதிக்கு என்ன பதில் சொல்வது ....

காலம் பதில் சொல்லும்

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

பாரத்... பாரதி... said...

சீனா... அவர்களுக்கு,
முதலில் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்..
இந்த வலைப்பூ-இல் உள்ள
அனைத்து பதிவுகளை படித்து,
மிகச் சரியான மதிப்பீடுகளை வழங்கியமைக்கு
நன்றிகள். எங்களுக்கு வேறு யாரும் வழங்கியிராத
ஆதரவு. உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கும்
தாய் அன்பு உங்களுடையது..
நன்றிச் சொல்ல வார்த்தைகளே
இல்லாது தீர்ந்துப்போன உணர்வு...
தங்கள் சுட்டிக்காட்டிய தவறுகளை
வெகு விரைவில் சரி செய்கிறோம்..
தொடர்ந்து வழிகாட்டுங்கள்..
தமிழ் மணத்தில் இணைய முயற்சிகளைத்
தொடங்கி விட்டோம்..

பேரு: மாதேஸ்வரன். said...

எல்லா தங்கச்சிகளுக்கும் வணக்கம் (பள்ளி மாணவிகள் தான நீங்கலாம்.. அப்போ எனக்கு தங்கச்சி தான்),

உங்க blogspot-ல எல்லா பதிவுகளும் நல்ல இருக்கு. ஆனா, நீங்க blogspotல பதிவு பண்ற முறை-ல சில மாற்றங்கள் தேவை.

ஒரு பதிவு பண்ணும்போது, அந்த பதிவு முழுவதும் முதல் பக்கத்தில் வராமல் இருக்க, insert a jump break பட்டன்-ஆ கிளிக் பண்ணுங்க. இல்லன்ன இந்த tagஅ முகப்புல எது வரைக்கும் காமிக்கனுமோ, அதுக்கு அடுத்து போடுங்க.

முகப்பு பார்க்க நல்லா இருக்கும்.

Theme-அ கொஞ்சம் மாத்துனா கூட நல்ல இருக்கும்னு நினைக்கிறேன்.

நன்றி.

மாதேஷ்

http://halwaplusaruva.blogspot.com

கந்தசாமி said...

பாரதி.. அந்த வீடு வேண்டாம்.. கட்டி கட்டி இடிப்பாங்க..இடித்து இடித்து கட்டுவாங்க..

அன்புடன்
கந்தசாமி

பாரத்... பாரதி... said...

ஆகா.. அற்புதம்..
"கலக்கல்" கந்தசாமி...

பாரத்... பாரதி... said...

நன்றி மாதேஸ்வரன் அண்ணனுக்கு....
நீங்கள் சொன்ன மாற்றங்களை விரைவில் செய்துவிடுகிறோம்.
சுட்டிகாட்டியதற்கு மனமார்ந்த நன்றிகள்..
இப்போது தான் மாற்றங்கள் செய்ய பழகிக் கொண்டிருக்கிறோம்...

Anonymous said...

good sir keep updating this site sir i will pass to this wedsite to my friends also sir.-karthick & Ranjith

Anand said...

AMMM INDHA NATIN KAEDUUU DHANNN INDHA PIRASHANAIIIIIIII

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்