குரங்குதான் அடுத்த கட்டத்திற்கு மாறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டது.நின்றது, நடந்தது, குதித்தது, மரம் ஏறியது, நிமிர்ந்தது. பரிமாணம் பெற்றது.
முயற்சி செய்ததால் ஒரு விலங்கு இனம், பரிமாண வளர்ச்சி பெற்று மனிதனாக மாற முடிந்தது. எனில் ஏன் மனிதனால் தெய்வமாக மாறமுடியாது.
அறிந்துக் கொள்ளுதலும், புரிந்துக் கொள்ளுதலும் முழுமைப்பெற, முயற்சி செய்தால் நிச்சயம் இது நிகழும்.
முயற்சி என்பது சுவாசம் போல் எப்போதும் இருக்க வேண்டும். முயற்சி நின்று போகும் போது ஒருவன் உயிர் இழந்தவனாகிறான்.
தோற்றுப்போனவனை பாராட்டுங்கள். முயற்சி செய்யாதவனை விட , தோற்றவன் நூறு மடங்கு சிறந்தவன்.
நின்று கொண்டிருக்கும் நீரில் தான் அழுக்குகள் சேரும். நீரோட்டம் என்பது நதிக்கு உயிரோட்டம். முயற்சி என்பது வாழ்க்கைக்கு உயிரோட்டம்.
"நின்ற இடத்தில் நிற்க வேண்டுமா? ஓடிக்கொண்டே இரு " என்பது ஒரு பழமொழி.
மனிதன் தெய்வமாக முயற்சிக்காவிட்டால் கூட
பரவாயில்லை, மீண்டும் மிருகமாக மாறாமல் இருந்தாலே போதும்.
- பாரதீ..
5 கருத்துரைகள்:
அன்பின் பாரதி
கட்டுரை அருமை - முயற்சி திருவினை ஆக்கும் - உண்மை - எண்ணங்கள் அருமை - விலங்கு மனிதனாக ஆனது - ஏன் மனிதன் தெய்வமாக ஆக முடியாது ... நல்ல சிந்தனையில் விளைந்த நல்ல கேள்வி - நிச்சயம் முடியும் - பல பேர் மாறித் திகழ்கிறார்கள்.
ஒற்றுப்பிழைகள் - வலி மிகும் இடங்கள் - தவறுகள் தவிர்க்கலாமே
//தோற்றுப்போனவனை பாராட்டுங்கள். முயற்சி செய்யாதவனை விட , தோற்றவன் நூறு மடங்கு சிறந்தவன். // அருமை அருமை
நல்ல சிந்தனை - நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
Really nice!! "Praise the looser since he is far better than the one who never tries" is really great!!Kudos for the encouraging staff!!
உண்மை.
நன்றி.
வாழ்க வளமுடன்.
வருகை தந்து வாழ்த்திய வைஜயந்திக்கு மிக்க நன்றிகள்..
வி.என். தங்க மணி அவர்களின் வருகைக்கு நன்றிகள்.
உங்களுடைய வாழ்த்துக்களை மாணவிகளிடம் தெரியப்படுத்துகிறோம். வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றிகள்.
Post a Comment