கவிதைகள்...

விடியல் தொடங்கி உடலுக்கு

வேலை கொடுத்தவனே;- உன்

மனசுக்கும் கொஞ்சம் வேலை கொடு;

மனசிறையிலிருந்து விடுதலையாகு.

ஊமை விழிகளால் உறங்கியது போதும்;

இயந்திர வாழ்க்கையை மறந்து

இனிமைக்கு திரும்பு.

எழில் கொண்ட இயற்கையை

வெறுமனே ரசிக்காதே மூச்சென சுவாசி.
------- படைப்பு---------
 - சித்ரா.பூ.
----------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------
கல்லறையில் உறங்க

சொன்னால்கூட உறங்குவேன்.
அம்மா....

நீ வந்து தாலாட்டு பாடினால்...

 
நாம் நுழைவதற்கு முன்வெற்றிடங்கள்...

நாம் நுழைந்த பின்

வெற்றி இடங்கள்....

------- படைப்பு---------

மசூதா பானு.....
----------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------
அன்னையைப் பார் அன்பு புரியும்;
குழந்தையைப்பார் அதன் தூய்மை புரியும்;

நட்சத்திரங்களைப் பார் ஒற்றுமை தெரியும்;

நிலவைப் பார் உண்மை அழகு புரியும்;

இயற்கையைப் பார் புதிய எண்ணங்கள் தோன்றும்;

நெருப்பை பார் அதன் கோபத்தின் நியாயம் தெரியும்;

இதையெல்லாம் பார்த்தாலுன்மனதில் மாறுபாடுகளை ஏற்படுத்தும்.

அதில் நம்பிக்கை என்னும் விதையை விதையை விதைத்து

சாதனை என்னும் விளைச்சலை அறுவடை செய்.

------- படைப்பு---------
சஃதானா பேகம்.M.

2 கருத்துரைகள்:

cheena (சீனா) said...

அன்பின் பாரதி

சித்ராவின் கவிதை - எழில் கொண்ட இயற்கையினை வெறுமனே இரசிக்காதே - மூச்சென சுவாசி - எண்ணங்கள் அருமை - அருமை

மசூதா பானு - அன்னையின் மேல் வைத்திருக்கும் அன்பு - வெற்றிடங்களை வெற்றி இடங்களாக மாற்றும் தன்னம்பிக்கை - வாழ்க வாழ்க

சாதனைக்கு அடிப்படை நம்பிக்கையே என்று எண்ணும் சஃதானா பேகம் - தன்னம்பிக்கையே வாழ்வின் ஆதாரம் - சிந்தனை நல்ல திசையை நோக்கிச் செல்கிறது - நன்று நன்று

அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் நல்வாழ்த்துகள்

நட்புடன் சீனா

Unknown said...

சீனா... அவர்களுக்கு,
முதலில் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்..
இந்த வலைப்பூ-இல் உள்ள
அனைத்து பதிவுகளை படித்து,
மிகச் சரியான மதிப்பீடுகளை வழங்கியமைக்கு
நன்றிகள். எங்களுக்கு வேறு யாரும் வழங்கியிராத
ஆதரவு. உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கும்
தாய் அன்பு உங்களுடையது..
நன்றிச் சொல்ல வார்த்தைகளே
இல்லாது தீர்ந்துப்போன உணர்வு...
தங்கள் சுட்டிக்காட்டிய தவறுகளை
வெகு விரைவில் சரி செய்கிறோம்..
தொடர்ந்து வழிகாட்டுங்கள்..
தமிழ் மணத்தில் இணைய முயற்சிகளைத்
தொடங்கி விட்டோம்..

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்