"ரௌத்திரம் பழகு"

இந்த உலகில் தனித்திறமை உள்ளவர்கள் மட்டுமே ஜெயிக்க இயலும்.

தனித்திறமை என்பது தன்னைப் புரிந்துக் கொள்ளுதல், அனைவரிடமும் உள்ள சிறப்பு பண்புகளை (Plus Points) உற்று நோக்கி; அதனை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளுதல், தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஒருவாறு யூகித்தல், வார்த்தைகளின் முக்கியத்துவத்தை உணர்தல், இவையனைத்திறகும் மேலாக நம்பிக்கை.

படி எங்கிருக்கிறது என்று தெரியாத போதும்
முதல்அடி எடுத்துவைப்பதற்குப் பெயர் தான் நம்பிக்கை!

நம்பிக்கையை பாதுகாப்பாக வைத்துக் கொண்டால், இன்று நம்மை எள்ளி நகைக்கும் இவ்வுலகம் நிச்சயம் திரும்பிப் பார்க்கும்.

இவ்வுலகில் ஏசுநாதரைப் போல் வாழ்வது என்றால் நம்மை பாதாளத்தில் தள்ளி விடுவார்கள். எனவே தேவைப்பட்டால் மறுகன்னத்தில் மட்டுமல்ல, இரு கன்னத்திலும் திருப்பி அறைய வேண்டும். "ரௌத்திரம் பழகு" என்பது பாரதியின் வார்த்தைகள். நல்லவனாக வாழுதல் தவறல்ல. நல்லவனாக மட்டும் வாழ்தல் என்பது இன்றைய சூழலில் " பிழைக்கத் தெரியாதவன்" என்ற பட்டத்தை பெறுவதற்கு மட்டுமே உதவும்.

நமது சுற்று வட்டாரம் எப்படிப்பட்டது, நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும் திறம், என்பவையும் முக்கியம். இவை சமுதாயத்தால்மதிக்கப்படக்கூடியநிலையை உருவாக்கும்.

வாழ்க்கையின்இறுக்கம் தாண்டி, நல்ல விஷயங்களை ரசிக்கும் மனதையும் பெற்று விட்டால் இனி எல்லாம் சுகமே....

-- நந்தினி . B. 12- A1


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------





எங்கோ படித்தது... ரசித்தது.

இன்று தலைகுனிந்து படிப்பதெல்லாம்
நாளை தலைநிமிர்ந்து நடப்பட்ப்பதற்கே...
இன்று பெற்றோர் இகழ்வதெல்லாம்
நாளை மற்றொர் புகழ்வதற்கே...
இன்று முகம் கவிழ்ந்து போவதெல்லாம்
நாளை முகம் மலர்ந்து வாழ்வதற்கே...
இன்று வலியாய் இருப்பதெல்லாம்
நாளை சிலையாய் மாறுவதற்கே...
--- கீர்த்தனா. நா. 12 - அ1




16 கருத்துரைகள்:

Joelson said...

மிகவும் அருமை கீர்த்தனா உண்மைதன் கூறியது
//இன்று பெற்றோர் இகழ்வதெல்லாம்
நாளை மற்றொர் புகழ்வதற்கே... //
பெற்றோர் கண்ட கனவை நினைவக்காமல்
வாழ்வதை காட்டிலும் வீல்வதே நன்று....

Unknown said...

நன்றி ஜோயல்சன்...

Anonymous said...

very nice. forceful words..

cheena (சீனா) said...

அன்பின் பாரதி

கீர்த்தனாவின் - படித்து ரசித்ததைப் பகிர்ந்த செயல் பாராட்டுக்குரியது. நன்று நன்று

நந்தினியின் ரௌத்திரம் பழகு - சிந்தனை அருமை - இருப்பினும் முதலில் அன்பின் வடிவாக மறு கன்னம் காட்டுவது தவறல்ல. பலனில்லை எனில் இதனைப் பயன்படுத்தலாம்.

நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா

V.PADMAPRIYA said...

sir, this is V.PADMAPRIYA ur old student(2009) sir.. sir i didn`t expect this website from our school sir.. It`s very superb and very interesting and very informative sir.. All poems are excellent sir.. congrats to all student who are wrote these poems..I`m very proud of you sir.. I`m very lucky to be ur student sir... THANK YOU SIR..

V.PADMAPRIYA said...

sir, this is V.PADMAPRIYA ur old student(2009) sir.. sir i didn`t expect this website from our school sir.. It`s very superb and very interesting and very informative sir.. All poems are excellent sir.. congrats to all student who are wrote these poems..I`m very proud of you sir.. I`m very lucky to be ur student sir... THANK YOU SIR..

சிவாஜி said...

மதிப்பிற்குரிய பாரதி அவர்களுக்கு,

உங்களின் அழைப்பின் முறையே மனதிற்கு மிகுந்த மகிழ்வைத் தருகிறது.

உண்மைதான். ஒரு அரசுப்பள்ளி மாணவிகளின் கருத்துக்களை உலகத்தின் பார்வையில் வைத்து இருமுனையிலும் நம்மை கூர்தீட்டிக் கொள்வதென்பது தூய அன்பில் தோய்த்தெடுத்த அசாத்தியமான தைரியசாலிக்கே உரித்தானது. வாழ்த்துக்கள். இது போல் கொட்டுக்காரம்பட்டி நடுநிலைப்பள்ளி (http://pumskottukarampatti.blogspot.com)தலைமைஆசிரியரும் கூட அருமையான பணி செய்து வருகிறார். உங்கள் வலைப்பூவை என் பட்டியலில் இணைத்து விட்டேன். தொடர்ந்து பதிவிடுங்கள். வளருவோம் வளம் பெருவோம். வாழ்வைக் கொண்டாடுவோம்.

அன்புடன்,
சிவாஜி

V.N.Thangamani said...

நந்தினி . B. கீர்த்தனா. நா.
மிகவும் அருமை
வாழ்த்துகள்

சிவாஜி said...

படி எங்கிருக்கிறது என்று தெரியாத போதும்
முதல்அடி எடுத்துவைப்பதற்குப் பெயர் தான் நம்பிக்கை!

அற்புதமான மந்திர வரிகள். எனக்கு பன்மடங்கு உற்சாகத்தை தருகிறது.

ரெளத்திரம் என்றால் தார்மீக கோபம் என்று நான் ஒருசில நேரங்களில் பொருள் கொள்கிறேன். எனினும் தனித்திறமையை அடையாளம் கண்டுகொண்டு விட்டாலே ’படி’ தட்டுப்பட்டு விட்டது என்று அர்த்தம். நிச்சயம் ஒவ்வொருவருக்குள்ளும் குறைந்தது ஐந்து தனித்திறமைகளாவது இருக்கும் என நினைக்கிறேன். மனம் எதை அதிகம் நாடுதோ, அதற்கு சூழ்நிலையும் வாய்ப்பும் கூடிவருமென நம்பிக்கையும் இருந்துவிட்டால் எந்த தடை வந்தாலும் தகர்த்தெரியும் மனஉறுதி நமக்கு ரெளத்திரத்தை பழக்கிக் கொடுக்கும். வாழ்த்துக்கள் நந்தினி கீர்த்தனா.

Unknown said...

சீனா... அவர்களுக்கு,
முதலில் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்..
இந்த வலைப்பூ-இல் உள்ள
அனைத்து பதிவுகளை படித்து,
மிகச் சரியான மதிப்பீடுகளை வழங்கியமைக்கு
நன்றிகள். எங்களுக்கு வேறு யாரும் வழங்கியிராத
ஆதரவு. உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கும்
தாய் அன்பு உங்களுடையது..
நன்றிச் சொல்ல வார்த்தைகளே
இல்லாது தீர்ந்துப்போன உணர்வு...
தங்கள் சுட்டிக்காட்டிய தவறுகளை
வெகு விரைவில் சரி செய்கிறோம்..
தொடர்ந்து வழிகாட்டுங்கள்..
தமிழ் மணத்தில் இணைய முயற்சிகளைத்
தொடங்கி விட்டோம்..

Unknown said...

நன்றி சிவாஜி அவர்களே... கொட்டுக்காரம்பட்டி பள்ளியின்
வலைப்பூவை பார்வையிட்டேன். அருமையான பதிவுகள்.
அடையாளம் காட்டியமைக்கு மீண்டும் நன்றிகள்...

Unknown said...

வி.என். தங்க மணி அவர்களின் வருகைக்கு நன்றிகள்.
உங்களுடைய வாழ்த்துக்களை மாணவிகளிடம் தெரியப்படுத்துகிறோம். வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றிகள்.

கண்ணகி said...

நந்தினியின் ரவுத்திரம் சிந்தனை பாராட்டத்தக்கது...அதை கையாளுவதில்தான் நம் வெற்றி இருக்கிறது..

கீர்த்தானா என்ன சொல்ல .அருமை ஒவ்வொரு வரிகளும் முத்துக்கள்..

Unknown said...

நல்ல மனங்களின் கோபத்திற்கு இந்த
உலகம் நிச்சயம் பதில் சொல்லியே தீர வேண்டும்

மாதேஸ் said...

ரௌத்திரம்... மிக நல்ல வார்த்தை...


ரொம்ப சின்ன வயசுல படிச்ச அந்த ஒரு சின்ன வார்த்தைல பல ஆயிரம் அர்த்தம இருக்குறது இப்போ தான் புரிய ஆரமிகுது...

அது மட்டும் இல்ல... 'நாவடக்கம்'-ன்றதா பத்தி திருக்குறள்-ல சொல்ற விஷயங்கள் இப்போ தான் கொஞ்சம் புரியுது...

"கண் கெட்ட பின்னாடி சூரிய நமஸ்காரம்" :(

Unknown said...

"இப்போதும் கற்றுக்கொள்ளும்" மாதேஸ்வரனுக்கு மரியாதை கலந்த வணக்கங்கள்..

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்