என் அம்மா உறங்குகிறாள்.
கத்தாதே குருவியே,
பாடாதே இளங்குயிலே,
என் அன்பு அம்மா உறங்குகிறாள்.
வெளிச்சமாய் வீசாதே வெண்ணிலவே
சீக்கிரம் மேகத்திற்குள் சென்று மறைந்துக்கொள்.
ரீங்காரத்துடன் தேன் உறிஞ்சும் வண்டுகளே
உங்கள் பாடல்களை நிறுத்திக்கொள்ளுங்கள்.
ஏய் பேய் போல வேகமாய் காற்றிலாடும் ஊஞ்சலே
பூனைப் போல் மெதுவாய் நகர்ந்துச் செல்
என் அம்மா உறங்குகிறாள்
அம்மா...
எதுவும் உன் உறக்கம் கெடுக்காமல்
பார்த்துக்கொள்கிறேன்.
களைப்பு களைந்து விரைவில் கண் விழி தாயே...
உன் உணர்வுகள் புரிந்துக்கொள்ளும்
மகளாய் நடந்துக்கொள்கிறேன்
விரைவில் உன் கல்லறைத் தூக்கம்
கலைத்து கண்விழி தாயே..
நந்தினி.B. பன்னிரெண்டாம் வகுப்பு அ1 பிரிவு
13 கருத்துரைகள்:
அடடா..!
//உன் உணர்வுகள் புரிந்துக்கொள்ளும்
மகளாய் நடந்துக்கொள்கிறேன்
விரைவில் உன் கல்லறைத் தூக்கம்
கலைந்து கண்விழி தாயே..//
super.
அருமையான கவிதை வாழ்த்துக்கள்
WWW.KAVITHAIVIDYA.BLOGSPOT.COM
அருமையான கவிதை
nice one. great.
Really nice....
Pleasant from the beginig
and sentimental at the end...
"ALL THE BEST, Mis.Nandhini"
kavidhai kavidhai...........
but its very nice.
/ உன் உணர்வுகள் புரிந்துக்கொள்ளும்
மகளாய் நடந்துக்கொள்கிறேன்
விரைவில் உன் கல்லறைத் தூக்கம்
கலைத்து கண்விழி தாயே../
அருமை.. வாழ்த்துக்கள் நந்தினி..
nice one..
கவிதை அருமை! எழுதியவருக்கு என் வாழ்த்துக்கள்!
//விரைவில் உன் கல்லறைத் தூக்கம்
கலைத்து கண்விழி தாயே..//
ஏக்கம் வரிகளில் :(
வாழ்த்துக்கள் நந்தினி..
கவிதை நல்லா இருக்கு சகோ.
கொஞ்சம் வேலை இருந்ததால் நேரம் ஆகிடுச்சு ..!!
அன்பின் நந்தினி
அருமையான சிந்தனை - கடைசியில் சூப்பர் "கிளைமாக்ஸ்" - ஏக்கப் பெருமூச்சு !
"மறைந்துக் கொள்
பூனைப் போல்
நகர்ந்துச் செல்
நடந்துக் கொள் "
ஒற்றுப் பிழை தவிர் நந்தினி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment