இந்த வாரம் ரசிக்க வைத்தவைகளும், யோசிக்க வைத்தவைகளும்....

இந்த வார ஹிட் செய்தி:

அயோத்தி வழக்கில் தீர்ப்பு, வியாழக்கிழமை அளிக்கப்பட்ட நிலையில், நாடு முழுவதும் ஆர்பாட்டமோ, கொண்டாட்டமோ இல்லாமல் அமைதி நிலை காணப்பட்டது.
- தினமணி 02-10-10

இந்த வார ஹைக்கூ:

நான் ஒரு எறும்பை நசுக்கிக்கொன்றேன்.
என் மூன்றுக் குழந்தைகளும்
அதை நிசப்தமாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
- எழுதியவர் தெரியவில்லை.

இந்த வார சிந்தனை:

தான் என்ற நினைப்பு, அகம்பாவம், தான் மிக உயர்ந்தவர் என்ற எண்ணம் உடையவர்கள் அது சிதறடிக்கப்படும்போது அவமானம் அடைகிறார்கள்.
தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும்போது ஏற்படும் உரசல், முதுமை, நோய், தோல்வி, இவற்றை நாம் முன்னிலைப்படுத்திக் கொள்ளாத போது அவமனங்களை எளிதாக தாங்க முடியும்.
- பாலகுமாரன்..

இந்த வார பஞ்ச்:

கட்டிக்கொண்டிருக்கும் போதே சரிந்து விழும் “காமன் வெல்த்” களேபரங்களுக்கு நடுவே, தமிழக கட்டடக் கலைக்கு ஆயிரம் ஆண்டு சாட்சியாக நிற்கிறது ராஜராஜனின் தஞ்சை பெரிய கோவில்.
- ஆசிரியர், தினமணி.

இந்த வார தகவல்:

சட்ட மேலவை தேர்தலுக்கான பட்டதாரிகள், ஆசிரியர்கள் தொகுதிகளுக்கான வாக்காளர்களாக சேருவதற்குரிய விண்ணப்படிவத்தின் விபரம் 2-10-10 தேதியிட்ட தினமலர் பக்கம் எண் 11 அல்லது www.elections.tn.in

இந்த வார சான்றோர் வாக்கு:

தவறு செய்தல் மனித இயல்பு தான் என்றாலும் கூட, தவறு என அறிந்தபின் அதை இனி ஒருபோதும் செய்வதில்லை என்ற மனவுறுதி பெறுவது ஒவ்வொருவரின் கடமையாகும்.
- காந்திஜி (அக்-2 சர்வதேச அகிம்சைத்தினம்)

இந்த வார புதிய தகவல்:

தஞ்சை பெரிய கோவிலை நிர்மாணிக்க சோழ நாட்டு மக்கள், தங்கள் பங்களிப்பை வழங்கினர். அவர்களின் பெயர்களை எல்லாம் கல்வெட்டில் பொறித்துள்ளார் ராஜராஜன். உலகில் எந்தவொரு பேரரசரும் மக்களைத் தன்னுடன் இணைத்து, பெயர்களை பொறித்ததாக வரலாறு இல்லை.
-முனைவர். குடவாயில் பாலசுப்பிரமணியன்

இந்த வார சேவைச் செய்தி:

பாரத ஸ்டேட் வங்கி சேவையில் அதிருப்தி இருப்பின், குறையைப் போக்கும் SMS சேவை தொடங்கப்பட்டுள்ளது. “ UNHAPPY” என 8008 20 20 20 என்ற எண்ணிற்கு அனுப்ப, அதிகாரிகள் உடனடியாக வாடிக்கையாளரைத் தொடர்பு கொண்டு, குறையைத் தீர்க்க உதவுவார்கள்.

5 கருத்துரைகள்:

அருள் said...

அயோத்தி: நடந்தது இதுதான்!

இங்கே காண்க:

http://arulgreen.blogspot.com/

Unknown said...

கட்டாயம் வந்துப் பார்க்கிறோம். உங்கள் வருகைக்கு
நன்றி...

Unknown said...

கட்டாயம் வந்து பார்க்கிறோம்.அனைத்து நண்பர்களுக்கும் சொல்கிறோம்.. வருகைக்கு
நன்றி..

மாதேஸ் said...

பாலகுமாரனின் சிந்தனை மிக அருமை...


நான் அதனால மிகவும் அவதிப்பட்டுடேன்... :( அதான், 'தன்னை முன்னிலை படுத்துதல்'...

'Never Show Yourself Off.. You will Run Out of Things One Day'

இது நான் சொல்றது...

Unknown said...

நன்றி மாதேஸ்வரன்.... அடுத்தாக இருக்கும் காந்திஜீயின் வார்த்தைகளை படித்துப்பார்த்தேன். அது உங்களுக்கான பின்னூட்டமாகவே தோன்றுகிறது.

வருகைக்கு நன்றிகள். அடிக்கடி வாங்க.....

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்