நாம் மாணவர்கள்...

 (உங்களுக்கும் எனக்கும் அதிக வேறுபாடு இல்லை.
நான் பள்ளி மாணவி.
நீங்கள்  வாழ்க்கைப் பாடத்தில் மாணவி / மாணவன்.)


பொன் நகையை சுமப்பது அல்ல வாழ்க்கை
புன்னகையை சுமப்பது வாழ்க்கை

கற்பது மட்டுமல்ல வாழ்க்கை
கற்றபடி நடப்பதுதான் வாழ்க்கை

தனித்து வாழ்வதல்ல வாழ்க்கை
தனித்தன்மையுடன் வாழ்வது தான் வாழ்க்கை

சலித்து வாழ்வதல்ல வாழ்க்கை
சாதித்து வாழ்வதுதான் வாழ்க்கை

வரலாறு படிப்பதல்ல வாழ்க்கை
வரலாறு படைப்பதுதான் வாழ்க்கை

கோடி நாள் வாழ்வதல்ல வாழ்க்கை
கோடி உள்ளங்களில் வாழ்வதுதான் வாழ்க்கை

                                  -- ரோசரி    XI-A

5 கருத்துரைகள்:

மாதேஸ் said...

ஆகா ஆகா...

க க போ...

:)

பள்ளிக்கூடத்தில மாணவனா இருக்குறது ரொம்ப சுலபம். ஆனா, வாழ்க்கை... ரொம்ப கஷ்டம் டா சாமி...

உங்களுக்கு இது தான் படிக்கணும்னு தெரியும்... இப்போ தான் பரிச்சை-னு தெரியும்...

என்னனே தெரியாம நான் வாழ்க்கைல பல பரிச்சைகளை எழுதிட்டு இருக்குறேன்...

நான் என்ன பண்ண? ஒரு நல்ல வழி இருந்தா சொல்லுங்க...

வினோ said...

/ கோடி நாள் வாழ்வதல்ல வாழ்க்கை
கோடி உள்ளங்களில் வாழ்வதுதான் வாழ்க்கை /

உண்மை.. அருமையான கவிதை.. வாழ்த்துக்கள்...

Unknown said...

வினோ அவர்களின் வருகையை கடந்த சில நாட்களாக எதிர்பார்த்திருந்தோம். வினோ வின் வருகைக்கும்,
கருத்துரைக்கும் நன்றிகள்..

Unknown said...

வரலாறு முக்கியம் அமைச்சரே........

பழைய பரீட்சைகள் எளிமையாகவும், தற்போதைய பரீட்சைகள் கடினமாகவும் தோன்றுவது இயல்புதானே.
மாதேஸ்வரனுக்கு நன்றிகள்..

cheena (சீனா) said...

அன்பின் ரோசரி

சிந்தனை அருமை - இரு வரிகளில் பல தத்துவங்கள் - வாழ்க்கைத் தத்துவங்கள் - வாழ்க வளமுடன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்