கவிதை BY ஆர்.சர்மிளா. எட்டாம் வகுப்பு ஈ பிரிவு...


அம்மாவின் அரவணைப்பு..,

 வானத்தில் இருப்பது நட்சத்திர கூட்டங்கள்..
கடலில் இருப்பதோ
மீன்களின் கூட்டங்கள்
ஆனால்

என் மனதில் இருப்பதோ
அம்மாவின் அன்பு முத்தங்கள்

-
...ஆர்.சர்மிளா. எட்டாம் வகுப்பு ஈ பிரிவு...

-----------------------------------------------------------------------
கனவு

 லட்சியத்தின் ஒரு வழி பாதை
நிஜங்கள் கூட தோற்றுப் போகும் உத்தமம்
கற்பனைகளின் சங்கமம்
ஏழைகளின் ராஜ சிம்மாசனம்
உறவுகளின் ரகசிய உடன்பாடு
கனவுகள் ஏமாற்றம் அடையும் போது தான்
கண்ணீர் விழிகளில் குடியேற இடம் தேடுகிறது

-ஆர்.நிர்மலா..
-----------------------------------------------------------------------------------------------
மழை...

ஓ..வானமே உன் மகன் குறும்புக்காரன்...

அடிக்கடி ஓடியாடி விளையாடி
ஆடைகளை அழுக்காக்குகிறான்
...

நீயோ சலவையில் கெட்டிக்காரி.
அடித்து துவைக்கும்
சத்தம் இடியாய் கேட்கிறது
.

அலாசுகின்ற நீர் மழையாய் பெய்கிறது.
சிறிது நேரத்தில்
உன்
மகன் பளிச்சென மின்னுகிறான்
...ஜி.ரோசரி. XI-A...10 கருத்துரைகள்:

க.பாலாசி said...

மூன்று கவிதைகளும் முத்துக்கள்... நல்லாயிருக்கு கண்ணுகளா... தொடர்ந்து எழுதுங்கள்...

பாரத்... பாரதி... said...

க.பாலாசி அவர்களுக்கு நன்றிகள்..

எஸ்.கே said...

மூன்றும் அருமை. அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

பாரத்... பாரதி... said...

நன்றி எஸ்.கே.

funmachine - தமிழமிழ்தம் said...

அறிவாற்றல் புலப்படும் கவிதைகள். அருமை அருமை.

வினோ said...

மூன்றும் அருமையா இருக்குங்க... என் வாழ்த்துக்கள் அனைவருக்கும்...

பாரத்... பாரதி... said...

funmachine-தமிழமிழ்தம் மற்றும் வினோ அவர்களுக்கு நன்றிகள்.

Anonymous said...

very good

ஏழைகளின் ராஜ சிம்மாசனம்
உறவுகளின் ரகசிய உடன்பாடு
கனவுகள்

பாரத்... பாரதி... said...

ஓ..வானமே உன் மகன் குறும்புக்காரன்...

cheena (சீனா) said...

அன்பின் மாணவியர்க்ளே !

அம்மா, கனவு, மற்றும் மழை என்ற தலைப்புகளில் அருமையாக கவிதை எழுதிய ஆர்.சர்மிளா, ஆர்.நிர்மலா, மற்றும் ஜி.ரோசரி ஆகிய மாணவிகளுக்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்