வலைப்பதிவர்களும் தமிழக முதல்வராக எளிய வழி...

இந்த வார ஹிட் செய்தி:

தனியார் பள்ளிகளுக்கு கல்விக்கட்டணம் நிர்ணயித்த குழுவின் தலைவர் நீதிபதி கோவிந்தராஜன் ராஜினாமா.
(உடல்நலத்தைக் காரணம் காட்டியுள்ளார்).
நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டண விபரம் 21-10-10 அன்று தமிழக அரசின் www.tn.gov.in இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. குழுவுக்கு போதுமான விபரங்களைத் தெரிவிக்காத 532 பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.

 இந்த வார ஹைக்கூ:

தாய்ப்பால் கேட்காமல் 

தாயைக் கேட்டது
குப்பைத் தொட்டி குழந்தை
- தென்றல் நிலவன்.
 


இந்த வார அதிர்ச்சி:

கட்டுமானப் பொருள்களில் மிக முக்கியமாவையான சிமெண்ட், செங்கல், முறுக்கேற்றப்பட்ட கம்பிகள் விலை கடந்த ஒரு மாதத்தில் 30 சதவீதம் உயர்ந்துள்ளது. 50 கிலோ சிமெண்ட் விலை ரூபாய் 145 லிருந்து திடீரென ரூபாய் 300 ஆக தமிழகத்தில் உயர்ந்துள்ளது. ஆனால் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சிமெண்ட்டின் விலை, இறக்குமதிச் செலவு, சுங்க வரி உள்பட ரூபாய் 190.  ( எந்த வித காரணமும் இன்றி ஏன் இப்போது விலை உயர வேண்டும் என்பது பலரின் கேள்வி).

 

இந்த வார கருத்து:
 
டாட்டா, பிர்லா யாராக இருந்தாலும் கடன் தான் அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துகிறது. புத்திசாலிகள் சேமிக்கிறார்கள், அதி புத்திசாலிகள் கடன் வாங்குகிறார்கள்.

-ப.சிதம்பரம்.

இந்த வார கலாட்டா:

                                                
                                             
விஜய் நடிக்கும் காவலன், அஜித் நடிக்கும் மங்காத்தா ஒரே நேரத்தில் தயாராகி வருவதால் வலைப்பதிவர்கள் உற்சாகம்.

(கலாய்க்க மேட்டர் ரெடி) 

இந்த வார தகவல்:

உங்கள் செல் போன் எண்ணிலிருந்து உங்களுக்குத் தெரியாமல் SMS, போன் செய்ய முடியும்(ஹேக்கிங்). குறிப்பிட்ட இணையதளத்திலிருந்து புதிய பாடல்களை அல்லது மென்பொருளை பதிவிறக்கம் செய்ய அழைக்கும் SMS உங்கள் செல்போன்களுக்கு வரும்போது கவனமாக இருங்கள்.
கொசுறுத் தகவல்: உலகிலேயே அதிக அளவு செல்போன் நுகர்வோரைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. மொத்தம் 67 கோடி இணைப்பு
பேசு இந்தியா பேசு... 

இந்த வார குழப்பம்: 

அடுத்ததாக நாங்கள் வெளியிட இருக்கும் பதிவு எங்களின் ஐம்பதாவது இடுகை. அதனை வித்தியாசமாக அமைக்க எங்கள் மேலிடம் உத்தரவிட்டுள்ளது.(அது வேற யாருமில்ல,பாரதி ஆறாம் வகுப்பு ஆ பிரிவு) என்னப் பண்றது? 
நீங்க தான் பிரபல வலைப்பதிவராச்சே ஒரு ஐடியா சொல்லுங்கோ...

 இந்த வார உதிரிப்பூக்கள்: 

தூங்கும் போது குறட்டை விடுவதும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனையே. குண்டாக இருப்பது, துரித உணவு, வாழ்க்கை முறை மாற்றங்களால் இப்பிரச்சனை ஏற்படுகிறது.

உலகிலேயே முதல் முறையாக 15 வயது இத்தாலிய சிறுவனுக்கு செயற்கை இதயம் பொருத்தப்பட்டுள்ளது.பேட்டரி சார்ஜ் உதவியுடன் இயங்கும் இந்த ரோபோ இதயத்துடன் 25 வருடங்கள் வாழ முடியும். 
ராஜாஜியும், அண்ணாவும் சட்டமேலவை உறுப்பினராகித்தான் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தனர். (சட்ட மேலவையில் பட்டதாரித் தொகுதிகள் போன்று வலைப்பதிவர்களுக்கென்று தொகுதிகள் உருவாக்கப்படுமா?)

டிஸ்கி:1
இந்தப் பதிவின் முதல்  கருத்துரையைப் பார்க்கவும்.

11 கருத்துரைகள்:

பாரத்... பாரதி... said...

டிஸ்கி:2
டிஸ்கி என்பதன் தமிழாக்கம், விளக்கம் என்ன?
டிஸ்கி:3
கூடுகிற கூட்டம் முழுமையும் ஓட்டுக்களாக மாறுமா?
- அரசியல் தலைவர்கள். (எசமான்களின் கேள்வி சரிதான். எங்க வலைப்பதிவுக்கும் நிறையப் பேர் வர்றாங்க. ஆனா ஓட்டு விழுகறதில்ல...)
டிஸ்கி:4
சட்ட மேலவையில் வலைப்பதிவர்களுக்கென்று தொகுதிகள் உருவாக்கப்பட்டால் கூட்டணி, தொகுதி பங்கீடு பத்தி எப்ப, எங்க பேசலாம்.
டிஸ்கி:5
எங்களின் அடுத்தப் பதிவு இவ்வளவு நீளமா இருக்காது, ரத்தினச்சுருக்கமாக இருக்கும் என இந்த பதிவுவில் உண்மையில் முதல் கருத்துரை வழங்க இருக்கும் அன்பரின் மீது சத்தியம் செய்கிறோம்..

அகல்விளக்கு said...

//எங்களின் அடுத்தப் பதிவு இவ்வளவு நீளமா இருக்காது, ரத்தினச்சுருக்கமாக இருக்கும் என இந்த பதிவுவில் உண்மையில் முதல் கருத்துரை வழங்க இருக்கும் அன்பரின் மீது சத்தியம் செய்கிறோம்..//

சத்தியத்த காப்பாத்துவீங்களா???

அகல்விளக்கு said...

நன்றாக உள்ளது...

அடிக்கடி இதுமாதிரி நிறைய பகிர்வுகள் போடுங்கள் நண்பர்களே....

பாரத்... பாரதி... said...

வாழ்த்திய அகல்விளக்கு அவர்களுக்கு நன்றிகள்.

வினோ said...

கலக்கல்.. நல்லா இருக்குங்க...

/ டிஸ்கி:2
டிஸ்கி என்பதன் தமிழாக்கம், விளக்கம் என்ன?
டிஸ்கி:3
கூடுகிற கூட்டம் முழுமையும் ஓட்டுக்களாக மாறுமா? /

யோசிக்க வேண்டிய விசயம்...

பாரத்... பாரதி... said...

வினோ அவர்களுக்கு எங்கள் நன்றிகள்.

எஸ்.கே said...

தொகுந்த கருத்துக்கள் அத்தனையும் அருமை!
50வது பதிவிற்கு வாழ்த்துக்கள்!

அன்பரசன் said...

தொகுப்பு அருமை..

பாரத்... பாரதி... said...

எஸ்.கே. மற்றும் அன்பரசன் ஆகியோர்க்கு நன்றிகள்.

cheena (சீனா) said...

அன்பின் பாரதி

டிஸ்கி : பொறுப்பி ( தமிழாக்கம் )

அத்தனையும் அருமை - முதல்வராக பதிவர்களும் வரலாம் - மேலவையில் உறுப்பினராக அரசு வழி செய்யட்டும். ஆனால் மாடும் போதுமா ? யார் நம்மைத் தேர்ந்தெடுப்பது ? ம்ம்ம்ம்ம் - நோக்கத்தில் தவறில்லை. உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் - தவறில்லை.

இவ்வாரத் தொடர்புள்ள அத்தனையும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

ஜாக்கி சேகர் said...

nice

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்