விருந்தாளிகள் கிளம்பிவிட்ட நிலையில் காமன்வெல்த் போட்டிகள் டெல்லி-2010 ன் இரண்டாம் பாகம் துவங்கிவிட்டது. டெல்லி முதல்வர், ஏ.ஆர்.ரஹ்மான், உயர்மட்ட விசாரணைக் குழுத் தலைவர் வி.கே.சங்கலு
ஆகியோரின் பேட்டிகள் பரபரப்பைக் கூட்டுகின்றன.பிரதமர் வழங்கிய விருந்தில் சுரேஷ் கல்மாடி புறக்கணிப்பு.
{முற்பகலில் "செ(ய்)யின்" பிற்பகலில் "விலங்கு"}
"சிறியது தான் புல்லாங்குழல்
கேலி செய்த மூங்கில்
பிணம் சுமக்கும் பாடை"
-துறவி.
"காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடிகளைப்
பதிக்க விரும்பினால்,
உனது கால்களை,
இழுத்து,இழுத்து நடக்காதே...."
--ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்.
(அக்-15 கலாம் அவர்களின் பிறந்தநாள்.)
இந்த வார தகவல்:
தமிழகத்தில் 39 ஆயிரம் ஏரிகள் இருப்பதாகக் கணக்கு சொல்லப்படுகிறது. ஆனால் அவற்றில் சில ஆயிரம் ஏரிகள் காணமலே போய்விட்டன. இருக்கும் ஏரிகளில் பெரும்பாலானவை தூர்ந்து போய் கிடக்கின்றன. பல ஏரிகள் ஆக்ரமிக்கப்பட்டு வீட்டுமனைகளாக மாறிவிட்டன.
இந்த வார மனிதர்:
ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் சச்சின்,
8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் முதலிடம்
(ரிட்டன் ஆப் தி டிராகன்).
தரவரிசையில் சச்சின் முதலிடம் பிடிப்பது இது ஒன்பதாம் முறை.
8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் முதலிடம்
(ரிட்டன் ஆப் தி டிராகன்).
தரவரிசையில் சச்சின் முதலிடம் பிடிப்பது இது ஒன்பதாம் முறை.
இந்த வார கருத்து:
ஆஸ்திரேலியா மிக அழகான நாடு. ஆனால், அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக்கொள்ள அந்த நாடு தவறி விட்டது. இந்தியர்களின் மீது நடத்தப்பட்ட இனவெறித் தாக்குதல்களால் அந்நாட்டின் நன்மதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.
--பிரிட்டிஷ் நிபுணர் சைமன் அன்ஹோல்ட்.
(இந்தியர்கள் அதிகம் விரும்பும் நாடுகளில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா, இப்போது மூன்றாம் இடத்தில்)
"பிரபல வலைப்பதிவர்க்கு கொலை மிரட்டல்" வாசிக்கப்பட்ட அளவுக்கு, நல்ல பதிவாக நாங்கள் கருதிய "உலுக்கி எடுத்த உண்மைகளும், இரக்கமில்லா இரவுகளும்" வலைஉலகவாசகர்களால்
கவனிக்கப்படவில்லை.{ஒண்ணுமே புரியல (வலை) உலகத்திலே...}
5 கருத்துரைகள்:
பகிர்வு அருமை...
/ இந்த வார குழப்பம் /
கவலை வேண்டாம்.. அனைத்தும் நல்ல முறையில் சென்றடையும்.
உங்கள் வலைப்பதிவு மிக சிறப்பாகவே உள்ளது. விரைவில் மிகப் பிரபலமாகும்.
இன்றைய தொகுப்பு நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்!
//{முற்பகலில் "செ(ய்)யின்" பிற்பகலில்"விலங்கு"}//
இந்தப் புது மொழி நல்லா இருக்குங்க ..
this is like a masala mix sir...you are revealing the truths...and i am much amazed about how u find time in updating the weekly's along with your regular works...i feel proud to be your student sir...
அன்பின் பாரதி
நல்லதொரு இடுகை - இந்த வாரத்தின் செய்தி(குறும்பு), குறுங்கவிதை(நக்கல்), கதை(கலாம்), தகவல், சிறந்த மனிதர், கருத்து, குழப்பம் என பல்வேறு தலைப்புகளில் எழுதியது நன்றாகவே இருந்தது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment