ரசிக்க வைத்தவைகளும், யோசிக்க வைத்தவைகளும்....இந்த வார அதிரடி.

                                         
இந்த வார ஹிட் செய்தி:

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஓட்டுப் போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி சிறப்பு விழிப்புணர்வு பாடலை உருவாக்க இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தலைமை தேர்தல் கமிஷனர் எஸ்.ஒய். குரேஷி அறிவிப்பு...

(அப்படியே எங்க வலைப்பதிவுகளுக்கும் ஓட்டுப் போட சொல்லி, ஒரு பாட்டப்போட்டா நல்லாத்தான் இருக்கும்.)

இந்த வார பரிகாரம்:

காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் தான் நம்ம இந்தியா இருக்கு, முதலிடத்தில் இருக்கிற ஆஸ்திரேலியாவின் பதக்க எண்ணிக்கையில் பாதி கூட நாம இல்ல. இருந்தாலும் " காமன்வெல்த் பதக்கப் பட்டியலில் தொடர்ந்து இந்தியா ஆதிக்கம்", "இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்கிறது", "தொடர்ந்து இந்தியா அசத்தல்", என எழுதித்தள்ளும் நமது ஊடகங்கள்..

இந்த வார சான்றோர் சிந்தனை:

முடிந்தால் உங்களைச் சுற்றியுள்ள மனிதர்களைக் கைத்தூக்கி விடுங்கள். அவர்களது ஆற்றலை இழந்து விடும்படி செய்யும் இழிசெயலை ஒருபோதும் செய்யாதீர்கள்...

--- அரவிந்தர்
(நல்ல வலைப்பதிவுகளை பார்க்கும் போது, மறவாமல் ஓட்டுப்போடுங்கோ.....)

இந்த வார தகவல்:

உலகிலேயே அதிக தபால் நிலையங்களை கொண்டதாக இந்திய தபால் துறை திகழ்கிறது. ஐந்து லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர்.

(அக்டோபர்-9ம் சர்வதேச தபால் அலுவலக தினம்)

இந்த வார அறக்கட்டளை:

ஆதரவற்று, அனாதையாக இறப்போரின் பிரேதங்களை கோவை அரசு மருத்துவமனையில் பெற்று, அடக்கம் செய்யும் கோவை தோழர் அறக்கட்டளை.

(ஆயிரமாவது பிரேதத்தை அடக்கம் செய்ய இவர்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்ற புகைப்படம் அக்-8 தேதியிட்ட தினமலரில் வெளியாகியுள்ளது.)இந்த வார சாதனையாளர்:

காமன்வெல்த் போட்டிகளில், வில் வித்தை "காம்பவுண்ட்" பிரிவில் , வறுமையைத் தாண்டி, வெள்ளிப்பதக்கம் வென்ற பாப்பிரெட்டிப்பட்டியை சேர்ந்த ஸ்ரீதர்..CONGRATS..

(அடுத்த காமன்வெல்த் போட்டியில் வில்வித்தை இல்லை)

இந்தவார பஞ்ச்:

“ஊரார் வலைப்பதிவிற்கு ஓட்டுப்போட்டால், தன் வலைப்பதிவிற்கு ஓட்டுக்கள் தானே குவியும்”

- சொன்னவரைக் கண்டுபிடியுங்களேன்.

இந்த வார ஹைக்கூ:

இறந்த வீரன்
மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது
பாதி எழுதிய மடல்.

-- அறிவுமதி.

16 கருத்துரைகள்:

ப்ரியமுடன் வசந்த் said...

//இறந்த வீரன்
மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது
பாதி எழுதிய மடல்.
-- அறிவுமதி.//

மூணே வரியில் ரணங்களை பகிர்கிறது ஹைக்கூ...

பதிவிலிருக்கும் செய்திகளில் ஸ்ரீதருக்கு
பாராட்டுக்கள் தெரிவிப்பதா? வாழ்த்து தெரிவிப்பதா என்று தெரியவில்லை :(

ப்ரியமுடன் வசந்த் said...

இல்லையில்லை பாராட்டுகள் தெரிவிப்பதா வருத்தம் தெரிவிப்பதா என்று வந்திருக்கணும்...!

பாரத்... பாரதி... said...

நன்றி ப்ரியமுடன் வசந்த். தங்களின் வருகைக்கும் , கருத்துரைக்கும்.

DEEN_UK said...

//அப்படியே எங்க வலைப்பதிவுகளுக்கும் ஓட்டுப் போட சொல்லி, ஒரு பாட்டப்போட்டா நல்லாத்தான் இருக்கும்.//

rahman sir kku,5 crore kodukka vendi irukkume!! (commonwealth song payment 5 kodiyaam!!)
anyway....arumayaana pathivu..miga sirantha haikkoo thervu...vaalthukkal..

DEEN_UK said...

//அப்படியே எங்க வலைப்பதிவுகளுக்கும் ஓட்டுப் போட சொல்லி, ஒரு பாட்டப்போட்டா நல்லாத்தான் இருக்கும்.//

rahman sir kku,5 crore kodukka vendi irukkume!! (commonwealth song payment 5 kodiyaam!!)
anyway....arumayaana pathivu..miga sirantha haikkoo thervu...vaalthukkal..

எஸ்.கே said...

தொகுப்பு மிக மிக நன்றாக உள்ளது!

பாரத்... பாரதி... said...

எஸ்.கே. அவர்களின் பாரட்டு மனதிற்கு இதமாகத் தெரிகிறது..
நன்றிகள்.

பாரத்... பாரதி... said...

முதன் முதலாய் கருத்துரை வழங்கிய DEEN_UK அவர்களுக்கு நன்றிகள்..

பாரத்... பாரதி... said...

DEEN_UK அவர்களுக்கு உங்கள் வலைப்பதிவுகளை ஆவலாய் தேடினேன். காலியாக இருக்கிறது. என்ன ஆச்சு?

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

///இறந்த வீரன்
மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது
பாதி எழுதிய மடல்.
/////////

மிகவும் வலி தரும் ஹைக்கு

பாரத்... பாரதி... said...

நன்றி பனித்துளி சங்கர்.. தங்களின் வருகை மற்றும் கருத்துரையை மிகப்
பெரிய விருதாகக் கருதுகிறோம். நன்றிகள்..

ப.செல்வக்குமார் said...

//இறந்த வீரன்
மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது
பாதி எழுதிய மடல்.
-- அறிவுமதி.//

உண்மைலேயே வலிக்குதுங்க ..!

பாரத்... பாரதி... said...

நன்றி ப.செல்வக்குமார்...

dr suneel krishnan said...

தபால் துறை நஷ்டத்தில் இயங்குகிறதாம் !! இப்போது எல்லாம் முன்ன மாறி கடிதங்கள் யாரு எழுதுறா ?
அந்த கோவை அறக்கட்டளை நல்ல பகிர்வு
விளையாட்டு போட்டிகளில் நாம் இந்த அளவு சாதனை செய்வதே பெரிய விஷயம் இப்போதைக்கு , நம்ம ஊரின் infrastructure அந்த லட்சணம் , இங்கே பதக்கம் வெல்லும் ஒவ்வொரு போட்டியாளரும் தனி திறமையால் தான் வெற்றி பெற்றுகாங்க

பாரத்... பாரதி... said...

உண்மை தான். வருகைக்கு நன்றி டாக்டர் சுனில்.

cheena (சீனா) said...

அன்பின் பாரதி

ரசிக்க - யோசிக்க வைதத செய்திகள் / நிகழ்வுகள் அத்த்னையும் அருமை. பகிர்வினிற்கு நன்றி. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்