தோல்வி நிலை என நினைத்தால்...

                                       
தோல்வி என்றால் உங்களிடம் சரக்கு இல்லை
என்று பொருள் இல்லை;


வேறு யுக்திகளைக் கையாள வேண்டிய அவசியத்தை
உணர்ந்து விட்டீர்கள் என்று பொருள்.

தோல்வி என்றால் வாழ்க்கையே வீணாக்கிவிட்டதாகப்
பொருள் இல்லை;
மீண்டும் ஆரம்பிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என்று பொருள்.

தோல்வி என்றால் விட்டுவிட வேண்டும்
என்று பொருள் அல்ல;
இன்னும் செம்மையாக உழைக்க வேண்டும்
என்று பொருள்.

தோல்வி என்றால் உங்களால் அடைய முடியாது என்று பொருள் அல்ல;
அடையக் கொஞ்சம் தாமதமாகலாம்
என்று பொருள்.

தோல்வி என்றால் கடவுள் உங்களை கைவிட்டு விட்டார் என்று பொருள் அல்ல;
உங்களுக்கு வேறு நல்ல எதிர்காலத்தை நிர்ணயம் செய்து வைத்திருக்கிறார்
என்று பொருள்.

- ஜுனா ஆக்னியஸ்.ஜெ.
   பன்னிரெண்டாம் வகுப்பு இ பிரிவு.

8 கருத்துரைகள்:

வினோ said...

/ தோல்வி என்றால் கடவுள் உங்களை கைவிட்டு விட்டார் என்று பொருள் அல்ல;
உங்களுக்கு வேறு நல்ல எதிர்காலத்தை நிர்ணயம் செய்து வைத்திருக்கிறார்
என்று பொருள். /

உண்மை உண்மை..

நல்லா பதிவு...

ப.செல்வக்குமார் said...

உண்மைலேயே கலக்கலா இருக்குங்க .,
தோல்வி பத்தி நானும் தெரிந்துகொண்டேன் ..!!

தேவா said...

சகோதரி மிகவும் அருமையான பதிவு. மனிதனை செதுக்க தோல்வியைவிட சிறந்த சிற்பி வேறெதுவுமில்லை

பாரத்... பாரதி... said...

பின்னூட்டம் அளித்த வினோ, ப.செல்வக்குமார், மற்றும் தேவா ஆகியோர்க்கு மிக்க நன்றிகள்.

அன்பரசன் said...

Nice..

vaish said...

fantastic juna...

ers said...

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

cheena (சீனா) said...

அன்பின் ஜுனா ஆக்னியஸ்.ஜெ.

ஆக்க பூர்வமான சிந்தனை. எதிர் மறை எண்ணங்கள் மறந்த சிந்தனை. நன்று நன்று. எது வரினும் எதிர் கொள்வோம் - வாழ்க . நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்