எல். கே. அவர்களின் சவால் கவிதை--நான் இறந்து போயிருந்தேன்


நான் இறந்து போயிருந்தேன்
உன் ஒற்றை சொல்லில் - 

பின்னோக்கிப் பயணித்தது 

மனது !!!!



ஜோடிப் புறாக்களாய் 

காதல் வானில் 

சிறகடித்து திரிந்தோம் - 

கண் பட - பிறர் 

கண் நம்மேல்  பட -என் 

சுவாசம் பட 

இருந்த நீ கண் காணாமல் போனாய் ....



வந்தாய் இன்று - உன் 

ஒற்றை சொல்லால் எனை 

கொல்ல!!!



காலமே பதில்

சொல்லட்டும் - நீ

இல்லா தனிமரமாய்

இனி என் நாட்கள் - நீரற்ற

ஏரி போல்

காய்ந்த மனதுடன்!!!!!




http://kavisolaii.blogspot.com/2010/10/blog-post_04.html

5 கருத்துரைகள்:

Unknown said...

//உன் ஒற்றை சொல்..
பின்னோக்கிப் பயணித்தது...
தனிமரமாய்...
காய்ந்த மனதுடன்... //
என கவிதை நெடுக அழகான வார்த்தைகளின்
ஊர்வலம்...
கவிதையாக்கத்திற்கு நன்றிகள்..

எல் கே said...

எனதுக் கவிதையை வெளியிட்டதற்கு நன்றி நண்பரே

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Lovely Kavithai


//மேட்டுப்பாளையம் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவியரின் படைப்புலகம்...//

வாவ்... பழகின ஊர் பேர் கேக்கவே சந்தோசமா இருக்குங்க

Unknown said...

இது கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம்.
ஊட்டி செல்லும் பாதையில் இருக்கிறது..

வருகைக்கு நன்றிகள்

cheena (சீனா) said...

அன்பின் எல்.கே

காதல் தோல்வி - கவிதை அருமை - சவாலைச் சந்தித்த கவிதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்