நிராகரிப்பின் நீச்சிகள்
நீளும் தருணங்களிலெல்லாம்
உடலெரிந்து பின்னிருக்கும்
சாம்பல் துகள்கள்
காற்றில் பறப்பதைப்போல்
நான் இறந்து போயிருந்தேன்
எறிந்த தரை இருப்பது போல
உயிர் இருந்தும் . . .
ஞானக் கணக்கை
நேர் செய்ய
பலரால் பல வழிகளில்
'நான்' இறந்து போயிருந்தேன் . . .
ஞானக் கண் மட்டுமேனோ
இன்னும் திறப்பதற்கு வழியேயில்லை ?!!
தாய்ப்பால் தடை செய்யப்பட்ட
காலம் தொட்டு
பால்யத்தில் கரம் பிடித்தவளின்
பிரிவு உட்கொண்டு
கணக்கற்ற தடவை
நான் இறந்து போயிருந்தேன் . . .
தொடர்ந்துகொண்டே இருக்கிறது
இறப்பும் பிறப்பும்
பள்ளித் தேர்வில் தவறிய போது
கல்லூரித் தகுதி அடையாதபோது
இன்னும் எத்தனையோ . . .
புதிது புதிதாய் . . .
'நான்' மட்டும் மாறாமல்
இருகோட்டுத் தத்துவமாய்
இறந்து கொண்டேயிருக்கின்றேன் . . .
இத்தனை முறை
மீள்த்துயிர்ந்தாலும்
இறுதி மூச்சு உள்ளவரை . . .
உதிரம் உளுத்துப் போகும் வரை
இனி மாற்ற முடியாத
இறுதிக்கோடாய்
இயல்பாய் இவனுள் சென்றவளை
இதயமறுத்து ஈருடலாய்
மெய்பித்தபோது . . .
வக்கற்றவனாய் . . .
கடைசியாய், உயிரோடு
நான் இறந்து போயிருந்தேன் . . .
இனிமேல் மீள முடியாமல்
(இது திரு. கார்க்கி அவர்களின் வலைப்பூவில் பாரத் பாரதி அவர்கள் பின்னூட்டத்தில் கேட்டுக்கொண்டதற்கிணங்க, 'நான் இறந்து போயிருந்தேன் . . .' சவால் கவிதைப் போட்டிக்காக Markanday Sureshkumar
7 கருத்துரைகள்:
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
கவிதையின் நடை நன்றாக கை வந்திருக்கிறது..
எமக்கு பிடித்த வரிகள்.....
அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
கவிதையின் நடை நன்றாக கை வந்திருக்கிறது..
எமக்கு பிடித்த வரிகள்.....
நான் இறந்து போயிருந்தேன் . . .
நிராகரிப்பின் நீச்சிகள்
நீளும் தருணங்களிலெல்லாம்
உடலெரிந்து பின்னிருக்கும்
சாம்பல் துகள்கள்
காற்றில் பறப்பதைப்போல்....
ஞானக் கணக்கை
நேர் செய்ய
பலரால் பல வழிகளில்
'நான்' இறந்து போயிருந்தேன் . . .
ஞானக் கண் மட்டுமேனோ
இன்னும் திறப்பதற்கு வழியேயில்லை ?!!
அன்பரசன் அவர்களுக்கு நன்றிகள்.. Markanday Sureshkumar இதை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சி அடைவார் என நம்புகிறோம்..
பின்னூட்டத்திற்கு நன்றிகள்...
பள்ளி மாணவியரின் வலைப்பூ என்பதை இப்போதுதான் கவனித்தேன். ஆச்சர்யமாகவும், சந்தோஷமாகவும் இருக்கின்றது. பள்ளிகள் என்பவை வெறும் பாடப்புத்தகங்களைக் கரைத்து ஊட்டும் எந்திரங்களாக மாறிவிட்ட சூழலில் பயில்வோரின் படைப்பூக்கத்தையும், தமிழார்வத்தையும் வெளிக் கொணரும் முயற்சி மெய்யாகவே வணங்கத்தக்கது.நிச்சயம் யாரோ ஒரு ஆசிரியை அல்லது ஆசிரியர் இதற்குப் பின்னால் இருக்க வேண்டும் என யூகிக்கிறேன்.அவரை வணங்குகிறேன்...பாதம்தொட்டு...!
மெல்லத் தமிழினிச் சாகாது!
தமிழ்மணம் ஓட்டுப்பட்டைய கீழ இறக்கிப் போடுங்க, சரியா வேலை செய்யும்... அப்புறம் இண்ட்லியையும் சேத்துடுங்க
மகிழ்ச்சி, வாய்ப்பிற்கும், ஒருங்கினைப்பிர்க்கும் மிக்க நன்றி, பலரைச் சென்றடையட்டும், வாழ்த்துகள்.
விந்தை மனிதனுக்கு நன்றிகள். இது முற்றிலும் சோதனை முயற்சி தான் . தவறுகள் மலிந்திருப்பது எங்களுக்கே தெரிகிறது. பிழைகளைப் பொறுக்கவும்..
அன்பின் மார்க்கண்டேயன்
நான் இறந்து போயிருந்தேன் - இவ்வரியினை வைத்துக் கொண்டு கற்பனைக் குதிரையினௌத் தட்டி விட்டு அருமையான கவிதை படைத்து விட்டீர்கள் - மிக மிக இரசித்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
Post a Comment