மலிக்கா அவர்கள் அனுப்பிய நான் இறந்து போயிருந்தேன் -சவால் கவிதை-

நான் இறந்து போயிருந்தேன்...என்ற தலைப்பில் எழுதவேண்டும்- சவால் கவிதை போட்டிக்கு இன்று மலிக்கா அனுப்பிய கவிதை....

நான் இறந்துபோயிருந்தேன்

உன் சுவாசக் காற்று

என்மூச்சுக் காற்றில் கலக்காததால்

உடனேவா உடனேவா

உயிர்தெழவேண்டும் உடனே வா

என்னருகில் வா என்னருகில் வா

என்னருகில் வந்து உன் வாசம்தா

உன்வாசம் சுவாசமாய்

என்மூச்சுக் காற்றில் கலக்கும்போது

உடனே எழுவேன் உடனே எழுவேன்

உன் கண்முன்னே உயிர்தெழுவேன்

இறந்துபோயிருந்த நான்

இறைவனிடம் இறைஞ்சிவேண்டி....

அன்புடன் மலிக்கா.

http://niroodai.blogspot.com/

மலிக்கா அனுப்பிய மற்றுமொருக் கவிதை, இதன் பின்னூட்டத்தில் உள்ளது.

11 கருத்துரைகள்:

அன்புடன் மலிக்கா said...

மிக்க நன்றி பாரதி.

இதோ என் இன்னொரு கவிதை
இதே தலைப்பில் என் தளத்திலும் வெளியிட்டுள்ளேன் என அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

மீண்டும் நன்றிகள் பல..

அன்புடன் மலிக்கா

Unknown said...

நன்றி மலிக்கா, உங்கள் கவிதைக்கான பின்னூட்டத்தினை விரைவில் அளிக்கிறோம்.
உங்கள் வலைப் பூவின் பெயர் அருமையாக இருக்கிறது..

Unknown said...

மீண்டும் இரண்டாம் முறையாக மலிக்கா அவர்கள் நான் இறந்து போயிருந்தேன் -என்ற தலைப்பில் எழுதி ,
அவருடைய வலைப்பூவில் எழுதியுள்ள கவிதை இங்கே உங்களுக்காக...



சொந்த நாட்டிலேயே
சுதந்திரம் பறிக்கப்பட்டு

நீதியை நம்பி
அநீதி இழைக்கப்பட்டபோது.
சிறுபான்மையினம் தானேயென
சீண்டிப் பார்த்து சிதைத்தபோது.

முழு பூசணிக்காயை மறைத்து
மூன்றிலொரு பாகமென-கட்டப்
பஞ்சாயத்து செய்தபோது

வேற்றுமையில் ஒற்றுமையென
வேரத்து வீதியிலெறிந்தபோது.

சமரசமெனச் சொல்லி
சாட்டையடிக் கொடுத்தபோது.

நாடுவிட்டு நாடு
பிழைப்பை தேடிவந்த மக்கள்- மீண்டும்

நாடு திரும்பும்போது
இருக்கயிடமிருக்குமா? சொந்த நிலமிருக்குமா

இல்லை
இந்தியரென்ற பேராவதிருக்குமாயென

ஐயமெழ வைத்துவிட்டதை நினைக்கும்போது
உயிரிருந்தும் நான் இறந்துபோயிருந்தேன்

உயிரோடுயிருக்கும் நீதியாவது
இறந்துவிடக்கூடாதென்ற ஆதங்கத்தில்...

அன்பரசன் said...

//சொந்த நாட்டிலேயே
சுதந்திரம் பறிக்கப்பட்டு

நீதியை நம்பி
அநீதி இழைக்கப்பட்டபோது.
சிறுபான்மையினம் தானேயென
சீண்டிப் பார்த்து சிதைத்தபோது.

முழு பூசணிக்காயை மறைத்து
மூன்றிலொரு பாகமென-கட்டப்
பஞ்சாயத்து செய்தபோது

வேற்றுமையில் ஒற்றுமையென
வேரத்து வீதியிலெறிந்தபோது.

சமரசமெனச் சொல்லி
சாட்டையடிக் கொடுத்தபோது.

நாடுவிட்டு நாடு
பிழைப்பை தேடிவந்த மக்கள்- மீண்டும்

நாடு திரும்பும்போது
இருக்கயிடமிருக்குமா? சொந்த நிலமிருக்குமா

இல்லை
இந்தியரென்ற பேராவதிருக்குமாயென

ஐயமெழ வைத்துவிட்டதை நினைக்கும்போது
உயிரிருந்தும் நான் இறந்துபோயிருந்தேன்

உயிரோடுயிருக்கும் நீதியாவது
இறந்துவிடக்கூடாதென்ற ஆதங்கத்தில்...//

Wonderful

சுந்தர் said...

மலிக்காவின் கவிதைக்குள் இறந்த உயிர் எழுந்துள்ளது.
உணர்வுகளைக்கொண்டு கவிவடிப்பது மலிக்காவுக்கு கைவந்த கலை.

முதல் கவிதைக்கு வாழ்த்துக்களும். அடுத்த கவிதைக்கு
என் மனவருத்தங்களும் அவரின் உணர்வுகளுக்கு ஒரு சல்யூட்...

தோழமையுடன்
சுந்தர்

ஜெயந்தி said...

கவிதைகள் மிகவும் சூப்பர். இறந்தும் உயிரோட்டமாய் சூப்பர் மலிக்கா. வாழ்த்துக்கள்

ஜெயந்தி

சந்தோஷிமகா... said...

மலிக்காவின் கவிதைகள் போட்ட போஸ்ட் காணாதுபோய் மீண்டும் போட்டிருக்காங்க.

அவர்களின் கவிதையின்னாலே தனி ரகம்தான் மிக அழகாய்ய் அனைதையும் வெளிப்படுதுவாங்க..
உங்களுக்கும் அவர்களுக்கும் பாராட்டும் வாழ்த்துக்களும்..

அன்புடன் மலிக்கா said...

மிக்கநன்றி அன்பரசன் தங்களின் கருத்துக்களுக்கு..

பாரத்.. பாரதி
என் பதிவை மீள் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி..

Unknown said...

மலிக்கா "வலைப்பதிவுகளில் ஜாம்பவான்" என்றுத் தோன்றுகிறது. அவரின் கவிதைகள் மட்டுமல்லாது ,
அவருக்கான பின்னூட்டங்களும் மலைக்கவைக்கின்றன..
கருத்துரைகள் வழங்கிய அன்பரசன், சுந்தர், ஜெயந்தி, சந்தோஷிமகா ஆகிய அனைவருக்கும் நன்றிகள்.

அன்புடன் மலிக்கா said...

பாரத்... பாரதி... said...
மலிக்கா "வலைப்பதிவுகளில் ஜாம்பவான்" என்றுத் தோன்றுகிறது. அவரின் கவிதைகள் மட்டுமல்லாது ,
அவருக்கான பின்னூட்டங்களும் மலைக்கவைக்கின்றன..
கருத்துரைகள் வழங்கிய அன்பரசன், சுந்தர், ஜெயந்தி, சந்தோஷிமகா ஆகிய அனைவருக்கும் நன்றிகள்//


அப்படியெல்லாம் ஒன்றுமில்லை பாரத்.

எனக்குள் எழும் எண்ணங்களை கவிதையாக்க முயல்கிறேன். என் எழுத்துக்களை இவர்கள் உணர்ந்து படிப்பதால் அவர்களுக்கு மகிழ்வு எனக்கும் சந்தோஷம். இனும் நான் கற்கவேணடியது கடலளவையும்தாண்டியுள்ளது.

அனைவரின் கருத்துக்களும் எனக்கான ஊக்கமருந்து.
தாங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி..

cheena (சீனா) said...

அன்பின் மலிக்கா

இதுவும் அருமை - ஆதங்கம் - வருத்தம் - கோபம் - அத்தனையும் சேர்ந்த கவிதை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்