இயற்கைக்கு பரிசளிக்கப்பட்ட செயற்கை மரணம்...

கடவுள் படைத்த இயற்கையை
ரசித்து எழுத எண்ணமிட்டேன்
..
நான் வார்த்தைகளைக் கோர்க்க 

நான் இயற்கையின் கூந்தலை வருடிய போது
சின்ன சின்ன வேதனைகள்

அதன் விசும்பலில் தெறித்து விழுந்தது.
இவையெல்லாம் யார் தந்த துன்பம்
?

உன்னை காயப்படுத்தி வென்றது
மனிதனின் வேதனை அம்புகளா?
என் கேள்விக்கு அது

வேறு ஏதோ பதிலுரைத்தது..



சந்திர சூரியனைப் படைத்தான் இறைவன்
நிலவில் கால் வைக்க

அனுமதித்த மனிதனை
சூரியனில் கால் வைக்க வாய்ப்புத்தரவில்லை.
ஒரு வேளை தந்திருந்தால்
நெருப்பையே களங்கப் படுத்திய
பெருமையைப் பெற்றிருப்பான்
.

அழுது கொண்டே ஓடிவரும் ஆறுதான்

பயிர்களுக்கெல்லாம் உயிர் .
அவற்றின் உயிரையும் எடுப்பவன் தான் மனிதன்.
ஆறு எப்போது வற்றும்
நாம் எப்போது மணல் அள்ளலாம் என்று

வண்டிகளுடன் காத்திருக்கிறான்.

பாலை வனத்தில் நீர்
கொண்டுவரத்தெரிந்த மனிதனுக்கு,
கடல் நீரை குடிநீராக மாற்றத்தெரிந்த
மனிதனுக்கு,
ஏன் தண்ணீரை
சிக்கனப்படுத்தத் தெரியவில்லை.

எவருடைய கையிலோ மதுக்கோப்பை
தள்ளாடிக் கொண்டிருப்பதோ இயற்கை
...

மரங்களை மாய்த்து ஒழித்தப்பின்
மனிதனுக்குப்
புரியும்,

இயற்கையின் இசை எத்தனை
இனிமையானது என்பதும்...
செயற்கைகள் எதுவும் அதனை
ஈடுச்செய்ய முடியது என்பதும்....
  
 

--எம் .ஜஷ்விதா. XI - A1 

9 கருத்துரைகள்:

எஸ்.கே said...

கவிதை மிக அருமை! எழுதியவருக்கு வாழ்த்துக்கள்!

Unknown said...

முதல் கருத்துரை வழங்கிய எஸ்.கே. அவர்களுக்கு நன்றிகள்.

Unknown said...

எனது பாராட்டுக்கள்...

வினோ said...

கவிதை அருமைங்க.. வாழ்த்துக்கள்..

Unknown said...

வாழ்த்திய வினோ மற்றும் கே.ஆர்.பி. செந்தில் ஆகியோர்க்கு நன்றிகள்.
வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள்.

அன்பரசன் said...

நல்லா இருக்குங்க

சுசி said...

நல்லா எழுதி இருக்காங்க.

naveen (தமிழமிழ்தம்) said...

wonderful. u cannot live without testing the nature. it is true.

cheena (சீனா) said...

அன்பின் ஜஸ்விதா

அருமையான தலைப்பில் எழுதப்பட்ட அழகிய கவிதை. எளிய சொற்கள் - நல்ல சிந்தனை - நன்று நன்று. நல்வாழ்த்துகள் ஜஸ்மிதா - நட்புடன் சீனா

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்