ரவிஉதயன் அவர்களின் சவால் கவிதை-- நான் இறந்து போயிருந்தேன்

நான் இறந்து போயிருந்தேன்
 

எனக்கு தெரியவில்லை.

காத்திருப்போர் பட்டியலிருந்து


வரிசைக்கிரமத்தில் காலியான 


படுக்கைவசதிக்கு

என் பெயர் வந்ததும்

கையசைத்து வழியனுப்ப


ஒருவரும் அருகில் இல்லாதிருந்ததும்


துயிலும்  படுக்கைவசதி


சவப் பெட்டியாகியிருந்ததும்


பயணமற்ற பயணத்திற்க்கு


மரண ஜங்ஷனிலிருந்து 


பச்சைக் கொடியசைத்து

விடைகொடுத்து அனுப்பிவைத்தவர் 


கடவுளென்பதும்

எனக்குத் தெரியவில்லை

ஏனெனில்
நான் இறந்து போயிருந்தேன்.


raviudayan@gmail.com

5 கருத்துரைகள்:

பாரத்... பாரதி... said...

பிடித்த வரிகள்..

//காத்திருப்போர் பட்டியலிருந்து

வரிசைக்கிரமத்தில் காலியான

படுக்கைவசதிக்கு

என் பெயர் வந்ததும்//


//பயணமற்ற பயணத்திற்க்கு

மரண ஜங்ஷனிலிருந்து

பச்சைக் கொடியசைத்து

விடைகொடுத்து அனுப்பிவைத்தவர்

கடவுளென்பதும்

எனக்குத் தெரியவில்லை//

பாரத்... பாரதி... said...

அருமையான கவிதை. இயல்பான நடை உங்களுடைய பலம். வித்தியாசமான பார்வை
கவிதையில் வெளிபடுகிறது.

ரவி உதயன் said...

என்னுடைய கவிதையை வெளி இட்டு விமர்சனம் செய்தமைக்கு நன்றி

ரவி உதயன் said...

என்னுடைய கவிதையை வெளி இட்டு விமர்சனம் செய்தமைக்கு நன்றி

cheena (சீனா) said...

அன்பின் ரவி உதயன்

சிந்தனை அருமை - மரணத்தினால் உயிர் பயணம் செய்வது நன்கு வடிக்கப்பட்டுள்ளது. சிந்தனை - இயல்பான சொற்கள் - அத்தனையும் அருமை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்