அன்பரசன் அனுப்பிய சவால் கவிதை

நான் இறந்து போயிருந்தேன்
நீ என்னை விடுத்து
மாற்றானின் கரம் பிடித்த அந்தப்பொழுதில்..
எத்தனை எளிதாய்
மறந்து விட்டாய் அத்தனையையும்!!
உன்னை மறக்கச்சொல்லி
வழக்கமான கதையாய் மாற்றிவிட்டாயே
நம் உன்னத காதலை..
எவ்வளவு ஆத்திரப்பட்டேன் தெரியுமா அன்று..
என்னுள் எறிந்த தீ சொல்லிட்று
உன்னை அடைய
அவள் கொடுத்து வைக்காதவள் என்று...
உனக்காக நான்
தாடி வளர்க்க போவதில்லை.
குடிக்க போவதில்லை.
உன் பெயரை உளறிக்கொண்டு திரியப்போவதில்லை.
மாறாக உன் முன்னால்
நல்வாழ்வு வாழ்ந்து காட்டப்போகிறேன்..
இது சாபமல்ல சபதம்..
இதோ தொடங்கி விட்டேன்
பயணத்தை
எனக்கான என் விடியலை நோக்கி...
பி.கு : பாரத் பாரதி.என்கிற நண்பரின் பின்னூட்டம் காரணமாக ஒரு சிறு முயற்சி.


Posted by அன்பரசன் http://tamizhanbu.blogspot.com/

1 கருத்துரைகள்:

cheena (சீனா) said...

அன்பின் அன்பரச

காதல் தோல்வி - ஒரே சொல்லில் மரணம் - பின் பயணம் - நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்