யார் தான் நிரப்புவது இந்த வெற்றிடத்தை..

                                         
எங்கே போனார்கள் கதைச்சொல்லிகள்...
முன்பெல்லாம் வீடுகளில் தாத்தா, பாட்டிகள் இருந்தார்கள். அவர்கள் குழந்தை
கள் வளர்ப்பில் பெரும்பங்கு வகித்தார்கள். 

தாத்தா, பாட்டிகள் சொன்ன கதைக் கேட்டு வளந்த பிள்ளைகள்,
பிற்காலத்தில் இலக்கிய, அறிவியல் துறைகளில்  சிறந்து விளங்கினார்கள். இன்றைய வாழ்க்கைச்சூழலில் கூட்டுக்குடும்பங்கள் மாறி , பெரும்பாலும் தனிக்குடித்தனங்கள் பெருகிவிட்ட சூழலில் கதைச்சொல்லிகளாக,கலைச்சொல்லிகளாக இருந்த  தாத்தா, பாட்டிகள் தொலைந்துப் போய் விட்டதாகவே தெரிகிறது. 
                                 
சிட்டுக்குருவிகள் இன்று வழக்கொழிந்துப் போனதைப் போலவே இதையும் வெறுமனே விட்டு விடவும் தமிழ்ச்சூழல் தயாராகி விட்டதாகவே தோன்றுகிறது. 

மாறிவிட்ட வாழ்க்கை முறை, பழக்கவழக்கங்கள், பாஸ்ட் புட் கலாச்சாரம் ஆகியவற்றால் இனி வரும் தலைமுறையினர் தாத்தா, பாட்டி ஆகும் வரை உயிரோடிருப்பார்களா என்பதே கேள்விக்குறியாகி விட்டது.
 

கதைச்சொல்லிகள் இருந்த அந்த வெற்றிடத்தை இனி வரும் காலங்களில் யார் நிரப்புவது?.
 



முன்பெல்லாம் கெட்டவிஷயங்கள் வாசற்படியேறி, கதவைத்தட்டி உள்ளே நுழைந்தது என்றால், இப்போது எல்லா விஷங்களும் நேரடியாக, சாட்டிலைட் வழியாக, வரவேற்பறை நுழைவதால் தொலைக்காட்சிகள் நல்ல கதைச்சொல்லியாக இருக்க முடியாது எனத்தோன்றுகிறது.

தங்கள் குழந்தைகளுக்கு பொருளாதார பாதுகாப்பு அளிப்பதையே வாழ்நாள் லட்சியமாகக் காட்டிக்கொள்ளும் பெற்
றோர்களுக்கு அவர்களுக்குள்ளே பேசிக்கொள்வதே பெரும்பாடாகிவிடுமோ   
 என்ற சூழல் கூட விரைவில் வந்து விடும் .


கதைச்சொல்லியாக இருக்க அதிக வாய்ப்புக்களைக் கொண்டுள்ள ஆசிரியர்களோ, கதைச்சொல்லியாக இல்லாமல் , மற்றவர்களை புறஞ்சொல்லிகளாகவும், தம் மாணவர்களை குறைச்சொல்லிகளாகவும் மாறிவிட்டனர் என்பது பொதுவான குற்றச்சாட்டு. 


அட கடவுளே..

யார் தான் கதைச்சொல்லி என்ற வெற்றிடத்தை  நிரப்புவது?

விஷம் பரப்பும் ஊடகங்கள், பணத்தின் பின் ஓடும் பெற்றோர்கள், பாடத் திட்டம் தடுக்கி விழும் ஆசிரியர்கள்;யார் தான் மாறவேண்டும் இனிவரும் நாட்களில்..


யார் தான் நிரப்புவது இந்த வெற்றிடத்தை..

தனியாய் தனக்குத் தானே கதைச்சொல்லிக் கொண்டு வாழ வேண்டிய சூழ்நிலை நாளைய குழந்தைக்களுக்கு வந்து விடுமோ..

10 கருத்துரைகள்:

ராம்ஜி_யாஹூ said...

நாம் தான் நமது குழந்தைகளுக்கு , அருகில் உள்ள குழந்தைகளுக்கு கதை சொல்ல வேண்டும்.

எல்லார் வீட்டிலும் ஒரே குழந்தை என்பதால் சித்தி, அத்தை, பெரியப்பா என்றால் என்ன என்று கேட்பார்கள் இருபது வருடங்கள் கழித்து

Unknown said...

உண்மை தான் . நன்றி வருகைக்கு

Unknown said...

நான் இப்போதும் என் குழந்தைகளுக்கு கதைகள் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். இது என் பாட்டனார் எனக்கு சொன்ன கதைகள். ஆனாலும் என் பைய்யனுக்கு பழைய கதைகளில் விருப்பம் இல்லை. அதனால் கார், ஏரோப்ளேன், ரயில் என கதைக்களனை மாதரி சொல்கிறேன். ஆனால் கதைசொல்லிகள் செத்துப்போய் நாளாச்சு.. இதனைப்பற்றி எழுத முயல்கிறேன்..

சுந்தரா said...

தாத்தா பாட்டிகளின் சொந்தக்கதை சோகக்கதைக்குக் காதுகொடுக்கவே ஆளில்லை இப்போது. அவங்க எங்கே பேரன் பேத்திக்குக் கதைசொல்வது?

மேலும்,இந்தக்காலக் குழந்தைகளுக்கும் பழைய கதைகளைக் கேட்குமளவுக்குப் பொறுமையில்லையென்றே தோன்றுகிறது. போதும் பாட்டி, புதுசா ஏதாச்சும் சொல்லேன் என்று நெளிய ஆரம்பித்துவிடுகிறார்கள் :)

அன்பரசன் said...

//தனியாய் தனக்குத் தானே கதைச்சொல்லிக் கொண்டு வாழ வேண்டிய சூழ்நிலை நாளைய குழந்தைக்களுக்கு வந்து விடுமோ..//

உண்மைதான்

Unknown said...

sir..dont worry...CHITI will say stories to the children ...probably by 2020 every home ll have a chiti as if we have pc s now...

சைவகொத்துப்பரோட்டா said...

இந்த கால குழந்தைகள் நிறையவே இழக்கிறார்கள்.

suneel krishnan said...

அறிவியல் இரு முனை கொண்ட கத்தி , தொலைக்காட்சி மூலம் நன்மைகள் இருந்தாலும் நாம் அதில் மூழ்கி விடுகிறோம் , இன்று எல்லார் வீட்டிலும் தொலைக்காட்சி தான் தாத்தா பாட்டி மாமா அத்தை எல்லாம் .ஒரு கணவன் மனைவி குழந்தை உள்ள குடும்பத்தில் நான்கவதாக ஒரு நபர் வந்தாலே போதும் ,அதையே நம்மால் சகித்து கொள்ள முடியவில்லை .வருத்தம் தான் :(


பி.கு - உங்கள் வலை பதிவில் கருத்து இடும் இடத்தில் நீங்கள் அளித்திருக்கும் முன்னுரை நன்றாகவும் வித்தியாசமாகவும் உள்ளது

Veena Devi said...

தவறு குழந்தைகள் மீது மட்டும் இல்லை... இப்பொழுது எத்தனை பெற்றோர்களுக்கு நமது இதிகாசங்கள் கதையும், பீர்பால் ,தெனாலி ரமன கதைகளும் தெரியும் ? இதில் இல்லாத சுவாரஸ்யங்கள் வேறு எந்த கதைகளிலும் கிடைத்ததாக தெரியவில்லை

cheena (சீனா) said...

அன்பின் பாரதி

கதைச் சொல்லி - கலைச் சொல்லி - குறைச் சொல்லி : ஒற்றுப் பிழை தவிர்க்கலாமே - பள்ளியில் இருந்து வெளி வரும் இடுகைகள் பிழை தவிர்த்தல் நலம்.

நல்ல சிந்தனை - காலம் மாற மாற, அறிவியல் முன்னேற்றத்தின் விளைவாக, இப்பொழுது கதைகள் - நீதிக்கதைகள் பல்வேறு வழிகளில் மழலைச் செல்வங்களுக்குக் கிடைக்கின்றன. கூட்டுக் குடும்பங்கள் அருகி வரும் நிலையில் மாற்றாக இவை பயன் படுகின்றன. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ மழலைகள் கற்றுக் கொண்டு விட்டனர். கவலைப் படத் தேவையில்லை.

நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்