முஸ்கி:
ரொம்ப நாட்களாக கபில்தேவ் கப் வாங்கிய கறுப்பு வெள்ளை படத்தையே பார்த்துக்கொண்டுருந்த நமக்கு, கலர் படத்தோடு கப்பை பார்க்க வாய்ப்பு அளித்த தோனியின் படைக்கு பாராட்டுக்கள்.
விளையாட்டை, விளையாட்டாய் தான் எடுத்துக்கணும் அப்படினு என்னதான் அறிவு சொன்னாலும், விளையாட்டை சாதாரணமாக எடுத்துக்கொள்ள மனசு விரும்பவில்லை. அதுவும் இலங்கையை ஜெயித்திருக்கும் இந்த தருணத்தில் மனசு கொஞ்சம் அடங்காமலே சந்தோஷிக்கிறது.
காலம் காலமாய், விளையாட்டில் நமக்கு எதிரி என்று ஆகிவிட்ட ஆஸ்திரேலியா, விளையாட்டு மட்டுமல்ல அனைத்திலும் எதிரி என்று நம் மனதில் திணிக்கப்பட்ட பாகிஸ்தான், ரத்தவெறி ராஜபக்சே இருக்கும் இலங்கை என இந்த முறை, இறுதியாய் இந்தியா ஜெயித்த மூன்று நாடுகளும் கொஞ்சம் விஷேசமானவைதான்.
"ஜெயிச்சது முக்கியமில்ல தம்பி, யார ஜெயிச்சோம்- அதுதான் முக்கியம். பைனலில் பாகிஸ்தானை ஜெயித்திருந்தால் கூட இவ்வளவு பட்டாசு வெடிச்சிருக்க மாட்டாங்க" அப்படினு ஒருத்தர் சொன்னாரு. அவருக்கு காங்கிரசை வீழ்த்திய சந்தோஷம்.
அது என்னவோ தெரியல, நமக்கு பழிக்கு பழி வாங்குனா அப்படி ஒரு சந்தோஷம், அது சினிமாவாக இருந்தாலும் சரி, விளையாட்டுயாக இருந்தாலும் சரி.
அடிவாங்கிக்கொண்டே இருந்த ரஜினி, திருப்பி அடிக்க ஆரம்பிச்சா ஒரு சந்தோஷம் வருமே அப்படி ஒரு சந்தோஷம், மலிங்காவிடம் அடி வாங்கிக்கொண்டிருந்த இந்தியா திருப்பி அடிக்க ஆரம்பித்த போது.
சின்னப்பிள்ளைத்தானமாக இருந்த போதும், ஒவ்வொரு அடியும், வில்லன் ராஜபக்சேவை, ஹீரோ ரஜினி அடித்தது போலவே இருந்தது.(அப்படித்தாங்க, மனசு நினைத்தது, வேணும்னா என்ன கொடும சார் அப்படினு சொல்லிக்கோங்கோ)
எப்படியோ காம்பிளியின் கண்ணீருக்கும் சேர்த்து பலி வாங்கியாச்சு...
அப்புறம் சச்சினை பாராட்டினா, அதுக்கு ஒரு கூட்டம், நம்மை திட்ட வருது.
மேட்ச் மட்டுமே பார்த்த ரஜினியும், கஜினியும் வெற்றிக்கு காரணம் அப்படினு சில பேர் சொல்லும் போது, சச்சினை பாராட்டினால் திட்ராங்க சார்...
மேட்ச் கூட பார்க்காமல், அடிக்கொருதரம் ஸ்கோர் மட்டும் பார்த்த என்னை பாராட்டியே குறுஞ்செய்திகளை அனுப்பி இருந்தார்கள் நம்ம நண்பர்கள். இந்தியா ஜெயிச்சா நாம ஜெயிச்ச மாதிரியாம்.
ஒண்ணுமே செய்யாத என்னையே பாராட்டுற மக்களுக்கு 21 வருடமாக இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக இருந்த தெண்டுல்கரை பாரட்ட மனசு வரமாட்டேங்குது. ஏன் அப்படினு தெரியலை.
ஜெயிச்ச மைதானத்தில் சச்சினை தோள்களில் சுமந்து, அவரின் சகாக்கள் வலம் வந்தது, ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது எனக்கு. (உங்களுக்கு ?)
"21 ஆண்டிகளாக இந்தியாவை கிரிக்கெட்டில் சுமந்த சச்சின் தெண்டுல்கரை, கொஞ்ச நேரம் நாங்கள் சுமக்கிறோம்" அப்படினு சொன்ன வீரட் கோஹ்லி தான் நேற்றைய மேன் ஆப் தி பஞ்ச்"
டிஸ்கி :
இந்த வெற்றி நம்மை மிரட்டாமலும் இல்லை, இனி காம்பிரின் நாய் குட்டியை பேட்டி எடுப்பார்கள், தோனி வீட்டு காம்பெண்ட் சுவரை படம் எடுத்து அட்டைப்படத்தில் போடுவார்கள்.
ஜெயிக்கறதுக்கு கொஞ்ச நேரம் முன்னாடியே ஸ்ரீசாந், சிம்பு மாதிரி விரல் வித்தைகள் செய்ய ஆரம்பிச்சுட்டாரு.. (ஈசியா ஜெயிக்க வேண்டிய மேட்சை, திரிலிங்கா ஜெயிக்க வைச்சதுக்கு இந்த தம்பிக்குத்தான் நன்றி சொல்ல வேணும்... ஐயோடா)
சரி விடுங்க, ஒரு வேள இலங்கை ஜெயித்திருந்தா எவ்வளவு கொடுமைகளை அதே மைதானத்தில் பார்த்திருக்க வேண்டும், எவனோ ஜெயிச்சு, எவனோ கொண்டாடுறதுக்கு.... நம்ம பசங்க, துள்ளுறது எவ்வளவோ பரவாயில்லை... என்ன சரிதானே?
அண்மைசெய்தி :
ராஜபக்சே திருப்பதியில் மலிங்காவுக்கு மொட்டை அடித்துக்கொண்டிருக்கிறார்.
19 கருத்துரைகள்:
//ஜெயிச்ச மைதானத்தில் சச்சினை தோள்களில் சுமந்து, அவரின் சகாக்கள் வலம் வந்தது, ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது எனக்கு. (உங்களுக்கு ?)//
நிச்சயமா! மிகச் சந்தோஷமா இருந்தது எனக்கும்! :-)
well done INDIA
//ஜெயிச்ச மைதானத்தில் சச்சினை தோள்களில் சுமந்து, அவரின் சகாக்கள் வலம் வந்தது, ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது எனக்கு.// உண்மை தான்..இந்திய அணிக்கு வாழ்த்துகள்!
Ist time i saw the match. Excellent...
nice post.,
மிகவும் சிறப்பான வெற்றி... காலிறுதி, அரையிறுதி, இறுதி என 3 போட்டிகளிலும் போராடிய இந்திய அணியினை புகழ வார்த்தைகளில்லை...அதே வேளை வெற்றிக்கு சச்சின் பங்களிக்கவில்லை எனக்கூறுவது முட்டாள் தனமானது... அவுஸ்திரேலியா , பாகிஸ்தான் அணிகளுடனான போட்டிகளின் வெற்றி தான் நேற்றைய போட்டிக்கு வித்திட்டது..அப்போட்டிகளில் சச்சினின் பங்கு யாரும் அறியாததல்ல. மேலும் இத்தொடரில் இந்திய அணி குவித்த ஓட்டங்களின் முதுகெலும்பும் அவரே..(482 ஓட்டங்கள்..).. ஆக ஒட்டுமொத்த அணியினரின் பங்களிப்பே இறுதிப்போட்டியின் வெற்றி ஆகும்.
ரொம்ப நாட்களாக கபில்தேவ் கப் வாங்கிய கறுப்பு வெள்ளை படத்தையே பார்த்துக்கொண்டுருந்த நமக்கு, கலர் படத்தோடு கப்பை பார்க்க வாய்ப்பு அளித்த தோனியின் படைக்கு பாராட்டுக்கள்.//
வாழ்த்துக்கள் சகோ....பாவம் நம்ம நாட்டுத் தலைவர்...
அவர் நேரடிப் பார்வையாளராகச் சென்ற இரண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளிலும் இலங்கைக்கு தோல்வி தான் கிடைத்தது..
ராஜப்பக்சே......நிறைய சொல்லலாம் சகோ. வீட்டுக்கு வெள்ளை வான் வந்திடும்.
காலம் காலமாய், விளையாட்டில் நமக்கு எதிரி என்று ஆகிவிட்ட ஆஸ்திரேலியா, விளையாட்டு மட்டுமல்ல அனைத்திலும் எதிரி என்று நம் மனதில் திணிக்கப்பட்ட பாகிஸ்தான், ரத்தவெறி ராஜபக்சே இருக்கும் இலங்கை என இந்த முறை, இறுதியாய் இந்தியா ஜெயித்த மூன்று நாடுகளும் கொஞ்சம் விஷேசமானவைதான்.//
இந்த முறை இந்தியா ஒரே கல்லிலை பல மாங்காய்களை வீழ்தியுள்ளது. வாழ்க இந்தியா.
அடிவாங்கிக்கொண்டே இருந்த ரஜினி, திருப்பி அடிக்க ஆரம்பிச்சா ஒரு சந்தோஷம் வருமே அப்படி ஒரு சந்தோஷம், மலிங்காவிடம் அடி வாங்கிக்கொண்டிருந்த இந்தியா திருப்பி அடிக்க ஆரம்பித்த போது.//
கிறிக்கற் பதிவிலும் ஒரு அழகான வர்ணனை ரசித்தேன்.
சரி விடுங்க, ஒரு வேள இலங்கை ஜெயித்திருந்தா எவ்வளவு கொடுமைகளை அதே மைதானத்தில் பார்த்திருக்க வேண்டும், எவனோ ஜெயிச்சு, எவனோ கொண்டாடுறதுக்கு.... நம்ம பசங்க, துள்ளுறது எவ்வளவோ பரவாயில்லை... என்ன சரிதானே?
அண்மைசெய்தி :
ராஜபக்சே திருப்பதியில் மலிங்காவுக்கு மொட்டை அடித்துக்கொண்டிருக்கிறார்.//
சகோ, சரியாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள்.
இலங்கை ஜெயிச்சிருந்தால், சிங்கள பைலா மேளமும், சிங்கள கூத்தும் தான் மைதானத்தில் இடம் பெற்றிருக்கும். இதையெல்லாம் சகிக்க முடியாமல் ரசிகர்கள் வாந்தியெடுத்திருப்பார்கள்.
ஆனால்... எது நடக்கும் என்று நினைத்தோமோ, அது நடந்திருக்கிறது. இலங்கையை இந்தியா வென்று விட்டது.
என் ஜோய்....
ஹப்பி....கொழுத்துங்க சகோதர்களே வெடிகளை!
ராஜபக்சே திருப்பதியில் மலிங்காவுக்கு மொட்டை அடித்துக்கொண்டிருக்கிறார்
அதுவும் இலங்கையை ஜெயித்திருக்கும் இந்த தருணத்தில் மனசு கொஞ்சம் அடங்காமலே சந்தோஷிக்கிறது.
மிகச் சந்தோஷமா இருந்தது எனக்கும் பாரத் பாரதி... இலங்கை ஜெயிக்க கூடாதென்பது எங்கள் பிரார்த்தனை பலித்ததில் சந்தோஷம்.
அந்தத் தருணங்களை வருணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம்.. பின்னிப் பெடல் எடுத்து விட்டார்கள்..!!!
அண்மை செய்தி சூப்பர் ஹா ஹா ஹா ஹா ஹா...
இந்த விடயத்திலாவது இலங்கையை தோற்கடிச்சீங்களே....அதற்காவது நன்றி கூறியாகத்தான் வேண்டும்.
A Good feeling really!
விளையாட்டை, விளையாட்டாய் தான் எடுத்துக்கணும் அப்படினு என்னதான் அறிவு சொன்னாலும், விளையாட்டை சாதாரணமாக எடுத்துக்கொள்ள மனசு விரும்பவில்லை. அதுவும் இலங்கையை ஜெயித்திருக்கும் இந்த தருணத்தில் ...
:)
\\விளையாட்டை, விளையாட்டாய் தான் எடுத்துக்கணும் அப்படினு என்னதான் அறிவு சொன்னாலும், விளையாட்டை சாதாரணமாக எடுத்துக்கொள்ள மனசு விரும்பவில்லை.\\ அடடே, எனக்கும் இதே பிரச்சினைதான்..ரொன்ப அறியாச் சொன்னீங்க!!
\\ஜெயிச்ச மைதானத்தில் சச்சினை தோள்களில் சுமந்து, அவரின் சகாக்கள் வலம் வந்தது, ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது எனக்கு. (உங்களுக்கு ?)\\ சந்தோஷம்தான்!! \\(ஈசியா ஜெயிக்க வேண்டிய மேட்சை, திரிலிங்கா ஜெயிக்க வைச்சதுக்கு இந்த தம்பிக்குத்தான் நன்றி சொல்ல வேணும்... ஐயோடா)\\ என், ஜாகீர்கானின் கடைசி மூணு ஓவரில் 44 ரன்கள் எடுக்கப் பட்டதே, அதை ஏன் விட்டு விட்டீர்கள்?? \\ராஜபக்சே திருப்பதியில் மலிங்காவுக்கு மொட்டை அடித்துக்கொண்டிருக்கிறார்.\\ இந்தமமதிரி ஆட்க்ஷன் கொண்ட ஆளை பவுலராக வைத்திருப்பதே கேவலம். நான் முரளீதரனைப் பாத்திருக்கேன், சோயப் அக்தரைப் பார்த்திருக்கேன், இவரோட பவுலின் மாதிரி சக்கிங் நான் உலகத்துல பாத்ததே இல்லைடா சாமி!! இவரும் ஒரு பவுலர்.. ஐயோ... ஐயோ...
நாமளே விளையாண்ட மாதிரி அப்படி ஒரு சந்தோசம், ஜெய் ஹோ, கோப்பையை வென்ற இந்திய அணிக்கும், முக்கியமாக சச்சினுக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்
Post a Comment