மாப்பு.. ஆப்பு.. - விஜய் பற்றி விகடனில்...ஒரு விரிவான அலசல்.




எமது முந்தைய பதிவில், ஆட்சி மாறினால் வடிவேலு மண்டையில் மாவிளக்கு என்ற தலைப்பில், தேர்தலுக்கு பின் வடிவேலு என்ன ஆவார் என்று அலசி காயப்போட்டு இருந்தோம். 


அதே போன்று இன்றைய ஆனந்த விகடனில், தேர்தல் பிரச்சார களத்தில் ஸ்டார்களாக ஜொலித்த, திரை நட்சத்திரங்கள் தேர்தலுக்கு பின் என்ன ஆவார்கள் என்று அவர்களுக்கு எதிரான நபர்களைக்கொண்டு எழுதியிருக்கிறார்கள். (ஆகா... நாமும் விகடன் ரேஞ்சுக்கு யோசிக்கிறோம்....)


நடிகர் விஜயை, முன்னாள் விஜய் ரசிகர் மன்றத்தலைவர் ஜெயசீலனை 
விட்டு காய்ச்சி இருக்கிறார்கள். குஷ்பு பற்றி ராதாரவியும், வடிவேலு பற்றி சிங்கமுத்துவும், சரத்குமார் பற்றி பாக்கியராஜும் கலாய்திருக்கிறார்கள்.


நடிகர் விஜய் அதிமுகவுக்கு ஆதரவாக திரும்பிய பின், திமுகவால் வளைக்கப்பட்ட, விஜய் ரசிகர் மன்ற தலைவர் ஜெயசீலனின் பேட்டியை விகடன் கட்டுரையில் போட்டிருக்கிறார்கள்.


"தேர்தலுக்கு முன் விஜய் ரசிகர் மன்றத்தின் 32 மாவட்டத்தலைவர்களை அழைத்த, எஸ்.ஏ, சந்திர சேகர், தேர்தலில்  யாருக்கு ஆதரவு என்பதை அவர்களிடம் கேட்காமல், வெறுமனே 
மாவட்டத்தலைவர்கள் அனைவரும் அதிமுகவுக்கு ஆதரவா இருப்பதாக சொல்லுங்கள். அப்பதான் விஜய் ஜெயலலிதாவுக்கு ஆதரவா வாய்ஸ் கொடுப்பார்'னு அவரோட சொந்த கருத்தை எங்க மேல திணிச்சார்" 


நிச்சயம் தேர்தலுக்கு பின் நிச்சயம் கலைஞர்தான் முதல்வர் ஆவார். அப்போ, விஜய்யும், அவர் அப்பாவும் அடிக்கிற அந்தர் பல்டியைப் பார்க்கத்தானே போகிறோம்" - இது ஜெயசீலன் சொன்ன விஷயங்கள்.


தேர்தலுக்கு அதிமுகவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவளிக்கும் என்று அறிவிக்கப்பட்ட பின், விஜய் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், "இனி, விஜய் அரசியலில் ஈடுபட மாட்டார்!" என்று எஸ்.ஏ, சந்திர சேகர், அறிவித்துள்ளார்.


அரசியலில் இனி விஜய் - நமது பார்வையில்...


விஜய் அரசியலுக்கு வருவார் என்பது ரஜினி அரசியலுக்கு வருவார் என்பதை போலவே குழப்பமான விஷயம் தான். (இந்த இரண்டிலும்  எப்போது தெளிவு இருந்தது..இப்போது தெளிவு வர)


விஜய் தன்னுடைய நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைக்காக கருணாநிதியை முன்பு அடிக்கடி சந்தித்தார் என்பதை யாரும் மறந்திருக்க முடியாது. அப்போதெல்லாம் விஜய் ஆளுங்கட்சிக்கு வேண்டப்பட்டவராகவே இருந்தார் என்பதும் உண்மை. 


விஜய் டெல்லியில் ராகுல் காந்தியை  சந்தித்து வந்த பின்னர்  
தான் காட்சிகள் மாறியது, தன்னுடைய காவலன் பட வெளியீட்டின் போது பிரச்சனை ஏற்பட்ட இடையூறுகளுக்கு திமுக தான் காரணம், திமுகவுக்கு எதிராக திரும்பினார்.


தமிழகத்தை பொறுத்த வரை ,திமுக எதிர்ப்பு என்பது அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பது தான் "பாரம்பரிய வழக்கம்" என்பதால், அடிக்கடி 
ஜெயலலிதாவை சந்தித்த எஸ்.ஏ.சி., இப்போது கடைசியாக, இனி, விஜய் அரசியலில் ஈடுபட மாட்டார் என அறிவித்திருப்பது, விஜய்க்கு எந்த விதத்திலும் மதிப்பை கொடுக்கும் என நம்பமுடியாது. 


எஸ்.ஏ, சந்திரசேகர் ஆரம்பம் முதலே விஜய்க்கு, அரசியலில் தவறான வழியைத்தான் காட்டியிருக்கிறார். காங்கிரஸ் தான் சரியான வழி என்று நம்பி, திமுகவின் "ரெட்ஜெயிண்ட" அரவணைப்பிலிருந்து வெகு தூரம் போனார். 


"விஜய் இளைஞர் காங்கிரஸில் இருக்கும் வயதை தாண்டிவிட்டார்"
என்று தமிழ்நாட்டில் ஆளே இல்லாத கடையில் டீ ஆத்தும் "இளைஞன்"
ராகுல் காந்தி ரொம்ப கிராக்கி செய்ததுதான் மிச்சம். (தமிழ் தவிர வேறு மொழி படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவில் விஜய் இருப்பதால்,  ராகுல் காந்தி நடித்த அந்த " ஏஜ் ஓவர், சீட்  நஹீ..."  படத்தில், விஜய் பஞ்ச் டயலாக் பேசி பதிலளிக்கவில்லை, என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்)


அப்புறம் ஒரு வழியாக அதிமுக பக்கம் சுறுசுறுப்பாக நகர்ந்த போது, விஜய் மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டியிடும் என்று சொன்னார்கள்.
அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களை விட அதிகமாக முறை 
ஜெயலலிதாவை, எஸ்.ஏ.சந்திரசேகர் சந்தித்தும் அரசியல் படிப்பின் எல்.கே.ஜி.யில் சேர விஜய்க்கு சீட் கிடைக்கவில்லை.பின் ஜப்பான் சுனாமி காரணமாக, தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டது.


ஆளுங்கட்சிக்கு எதிரான அலை இருப்பதாக கருதப்பட்ட இந்த தேர்தலில் 
நின்று வென்றிருந்தால் 
கிடைக்கும் வாக்குகளை காட்டி, எங்களுக்கு தமிழக ஓட்டு வங்கியில் அக்கவுண்ட் இருக்கிறது என்று அடுத்த தேர்தலில் சீட் பேரம் பேச முடிந்திருக்கும். 
  



அடுத்ததாக பரப்பப்பட்ட;  அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு விஜய் வருவார் என்பதும் பொய்த்துபோனது.(ஏற்கனவே விஜய்காந்த் செய்யும் ''பிரச்சாரமே' போதும் என்று அம்மா நினைத்திருக்கக்கூடும்)


தேர்தல் களத்தை நோக்கி எல்லோரும் முன்னேறிக்கொண்டிருக்கும் வேளையில், இனி அரசியல் ஆணியே வேண்டாம் ; அரசியலை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடியாய் அறிவித்ததில் புறக்கணிப்பு புகழ் வைகோ-வே ஆடிப்போய்விட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். 


உள்வாங்கிய கடல் மீண்டும் சுனாமியாய் பொங்கியெழும் என்பதை போல இப்போது பின்வாங்கிய விஜய் அரசியலில் பொங்குவார் என அவருடைய ரசிகர்கள் யாரேனும் நம்பினால், அவர்களுக்கு ஒரு வார்த்தை..


"விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார், அல்லது வருவதாக அறிவிப்பார்; தன்னுடைய ஏதேனும் படத்திற்கு மீண்டும் பிரச்சனைகள் வரும் போது"



24 கருத்துரைகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வடை.. வாங்கியாச்சி..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

முத ஆப்பு வடிவேலுக்கு..
மற்ற எல்லாருக்கும் அவங்க லெவலுக்கு இருக்கு...

ஆனா 2016 முதல்வர் கண்டிப்பா விஜய் தான்...

Speed Master said...

//விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார், அல்லது வருவதாக அறிவிப்பார்; தன்னுடைய ஏதேனும் படத்திற்கு மீண்டும் பிரச்சனைகள் வரும் போது"


சரியா சொன்னீல் போங்கோ

MANO நாஞ்சில் மனோ said...

எங்களை கடுப்பேத்த விஜய் பதிவு போட்டீரோன்னு டவுட்டு....

MANO நாஞ்சில் மனோ said...

அரசியல் அரசியல்னு இவனுக கொசு தொல்லை தாங்க முடியலை...

Unknown said...

ஏற்கனவே இந்தாளு படத்த பாத்து பல பேரு நாக்கு தள்ளி கெடக்குறாங்க! இதுல அரசியலுக்கு வந்தா அய்யோ அம்மா சொல்ல வர்த்த இல்ல!

வைகை said...

"இனி, விஜய் அரசியலில் ஈடுபட மாட்டார்!" என்று எஸ்.ஏ, சந்திர சேகர், அறிவித்துள்ளார்.//

ரஜினி மாதிரி ஒவ்வொரு படம் வரும்போதும் ரசிகன உசுப்பேத்த அரசியல் பூச்சாண்டி காட்ட வேண்டியது...படம் ஓடியதும் பம்ம வேண்டியது..இதே வேலையா போச்சு இவங்களுக்கு!

வைகை said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
முத ஆப்பு வடிவேலுக்கு..
மற்ற எல்லாருக்கும் அவங்க லெவலுக்கு இருக்கு...

ஆனா 2016 முதல்வர் கண்டிப்பா விஜய் தான்..//


அப்ப சரத்குமார் இல்லையா? பயபுள்ள பொய் சொல்லியிருக்கு போல?

சக்தி கல்வி மையம் said...

விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார், அல்லது வருவதாக அறிவிப்பார்; தன்னுடைய ஏதேனும் படத்திற்கு மீண்டும் பிரச்சனைகள் வரும் போது ----- சாட்டையடி...

Prabu Krishna said...

ஒரு விஜய் ரசிகனாக என் எண்ணமும் இதுதான். திரை உலகில் நிறைய பேருக்கு இந்த எண்ணம் இருக்கக் கூடும் ஆனால் விஜய் அதை வெளிப்படையாய் செய்தது தவறாகி விட்டது.

இனி நிச்சயமாய் வர வேண்டாம்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

அரசியலில் தவறான வழியைத்தான் காட்டியிருக்கிறார். //
அரசியலில் மட்டுமா?

Anonymous said...

விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார், அல்லது வருவதாக அறிவிப்பார்; தன்னுடைய ஏதேனும் படத்திற்கு மீண்டும் பிரச்சனைகள் வரும் போது"//
சூப்பர்

Anonymous said...

விஜய் இன்னொரு ரஜினி அரசியலில் மட்டும்

Unknown said...

நல்லாவே இல்லை, என்ன பண்றது தலையெழுத்தேனு படிக்க வேண்டியிருக்கிறது.
:)
நன்றி.. பின்னுட்ட உதவி பி . இ .ந

இராஜராஜேஸ்வரி said...

சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ராஜகோபால் said...

//ஜப்பான் சுனாமி காரணமாக, தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டது.//

சுனாமி மட்டுமா காரணம் பல பினாமிங்களும்தான்

அஞ்சா சிங்கம் said...

விஜய் நிச்சயம் அரசியலுக்கு வருவார், அல்லது வருவதாக அறிவிப்பார்; தன்னுடைய ஏதேனும் படத்திற்கு மீண்டும் பிரச்சனைகள் வரும் போது"............/////////////

பின்னாடி புன்னு வந்தாதான் புனுகு போடா சொல்லுது ........
போக்கத்த பயலுக ...................

நிரூபன் said...

நடிகர் விஜய் அதிமுகவுக்கு ஆதரவாக திரும்பிய பின், திமுகவால் வளைக்கப்பட்ட, விஜய் ரசிகர் மன்ற தலைவர் ஜெயசீலனின் பேட்டியை விகடன் கட்டுரையில் போட்டிருக்கிறார்கள்.//

இதென்ன கொடுமை சகோ?
தலைவன் ஒரு கட்சியில்,
தொண்டன் எதிர்க் கட்சியிலா...
ஹி...
பாவம் நம்ம விஜய்..

நிரூபன் said...

விஜய் அரசியலுக்கு வருவார் என்பது ரஜினி அரசியலுக்கு வருவார் என்பதை போலவே குழப்பமான விஷயம் தான். (இந்த இரண்டிலும் எப்போது தெளிவு இருந்தது..இப்போது தெளிவு வர)//

இது தான் தானும் குழம்பி ஏனையோரையும் குழப்புவதோ சகோ..

விஜயினை வைத்து ஒரு காமெடி பண்ணியிருக்கிறீங்க..

விஜயின் அரசியல் பிரவேசமாவது காமெடியாகாது இருந்தால் நல்லது.

காங்கேயம் P.நந்தகுமார் said...

விஜய் ஒரு குஜய். தொடர்ந்து 6 படங்கள் ஓடவில்லை என்பதற்காக ஓப்பாரி வைத்துகொண்டு நான் அ.தி.மு.க வுக்கு ஆதரவு தருகிறேன் என்று சொன்னால் இவர் தான் தமிழ்நாட்டின் சிறந்த கோமாளி. இனி உனது படம் எல்லாம் வெற்றியடைய அ.தி.மு.க வினர் அரும்பாடுபடுவார்கள் என்ற கனவில் மிதக்கும் உங்க அப்பா கணினி யுகத்தில் நாகரீக கோமாளி. நல்ல முறையில் நடித்தால் படம் ஓடும். இல்லையென்றால் நீயும் உங்கப்பனும் ஒவ்வொரு கட்சிக்காக ஓடிக்கொண்டுதான் இருக்க வேனும்.

மாதேவி said...

அரசியல் :)

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அதுனால இனிமே எல்லாருமே ஒழுங்கா டாகுடர் படத்த ரிலிசான உடனே போய் பாத்துடுங்க, அப்போத்தான் இனிமே கட்சி ஆரம்பிக்கிறேன் அது இதுன்னு யாரையும் பயமுறுத்த மாட்டாரு

Anonymous said...

திமுகவால் வளைக்கப்பட்ட, விஜய் ரசிகர் மன்ற தலைவர் ஜெயசீலனின்

இவரை தமிழ் ஈழ தலைவர் பிரபாகரனுடன் இருந்த கருணாவை போன்றவர் இந்த ஜெயசீலன் பணத்திற்கு மயங்கி தன் தலைவரையே காட்டி கொடுக்கிறார்

Unknown said...

வாக்களித்து, கருத்துரை வழங்கிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்..

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்