ரசித்தவைகளும், யோசிக்க வைத்தவைகளும்.

இந்த வார  அரசியல்:
ரஜினியின் துணிச்சலும், அரசியலும்.

ஊருக்குள் சுனாமி வெள்ளம் புகுவது போல, நிருபர்கள், ரசிகர்கள் புடைசூழ, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்கு சாவடிக்குள், ரஜினி நுழைந்த வீடியோ காட்சியை காண நேர்ந்தது. 


வாக்களிக்கும் போது வாக்காளர் எந்த சின்னத்தில் வாக்களிக்கிறார் என்பது ரகசியமாய் பாதுகாக்க வேண்டிய விஷயம், ஆனால் ரஜினி வாக்களிக்கும்போது, எதற்கு அத்தனை பேர் சுற்றி நின்றுக்கொண்டிருக்க, அந்த வாக்குச்சாவடி அதிகாரிகள் எப்படி அனுமதித்தார்கள் என்று தெரியவில்லை.

இரட்டை இலைக்கு ரஜினி வாக்களித்ததாக, ஊடகங்கள் பகிரங்கமாய் தெரிவித்துள்ளனர். (ரஜினி ஒரு ஓட்டு போட்டா, நூறு ஓட்டு போட்ட மாதிரி-னு தேர்தல் ஆணையம் கணக்கில் எடுத்துக்கொள்ளுமா?)

ரஜினி மட்டுமல்ல, மற்ற திரை நட்சத்திரங்களும் கூட அதிமுகவுக்கே வாக்களித்திருப்பார்கள் என்றே  தெரிகிறது.
பாசத்தலைவன் மீண்டும் வந்தால், பாராட்டு விழாக்களில் கலந்துக்கொள்ள வேண்டும் என்பதும் அதற்க்கான முக்கிய காரணம்.

காலையில் இரட்டை இலைக்கு வாக்களித்துவிட்டு, மாலையில் கருணாநிதியுடன் பொன்னர் சங்கர் படம் பார்த்த ரஜினியின் துணிச்சலை பாராட்டியே ஆகவேண்டும். (?????)
இது தான் ரஜினியின் அரசியல் திறமையை காட்டுகிறது. (இப்படியே இருந்தா, அரசியல்ல பெருசா ஒரு ரவுண்ட் வருவீங்க...)
      

இந்த வார கருத்து :

வாரிசு அரசியல் என்பது வேறு. குடும்ப அரசியல் என்பது வேறு.
தன் மகனையோ, மகளையோ அரசியலில் நுழைப்பது வாரிசு அரசியல், தன் குடும்பத்தினர் அனைவரையும அரசியலில் திணிப்பது குடும்ப அரசியல்.

தன்னுடைய மகள் இந்திரா காந்தியை அடுத்து அரசியலுக்கு கொண்டு வந்து குடும்ப அரசியலை ஆரம்பித்து வைத்தவர் நேரு. தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் பதவிக்கு வர வைத்து, குடும்ப அரசியலை இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தியவர் கருணாநிதி.
- தமிழருவி மணியன்.

இந்த வார ஜோக்ஸ்:

"எப்படிங்க உங்க கார் ஆக்சிடெண்ட ஆச்சு"
"அதோ அங்கே ஒரு மரம் தெரியுதா"
"ஆமா,, தெரியுது"
"அது நேத்து ராத்திரி எனக்கு தெரியலை"

டாக்டர் : "இந்த ஆஸ்பத்திரிக்கு நான் தான் தலைவர்!"
அரசியல்வாதி: "நான் கூடத்தான் எங்க கட்சியில் டாக்டர்!!"

இந்த வாரம் ரசித்த  கவிதைகள்:

மற்ற எல்லாத்துளியும்
மண்ணில் விழுந்து கரைந்து விட...
உன் மேல் விழுந்த
மழைத்துளி மட்டும்
கவிதையானது.
(நீ வசிக்கும் தெரு - செஞ்சேரி குணசேகரன்)

தர்மாஸ்பத்திரியில்
இலவச மாத்திரை கொடுத்தும்
நோய் முற்றி இறக்கிறார்கள்.
பிரச்சனை மாத்திரை அல்ல...
சாப்பாட்டுக்குப் பின்
போட வேண்டும் என்பதே...
(தகப்பன் சாமி - சுமதிஸ்ரீ)

இந்த வார செய்தி :

இந்த தேர்தலில் 24591 பேர், 49 ஓ-வின் படி வாக்களித்திருக்கிறார்கள். உண்மையில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்க கூடும்.

பல வாக்குச்சாவடிகளில் கட்சிகளின் ஏஜெண்டுகள், ஏன் ஒரு ஓட்டை வேஸ்டாக்குகிறீர்கள்" என்று கிண்டலடித்திருக்கிறார்கள், "ஓட்டு போடலை" அப்படினு சொல்றதுக்கு இங்க வரணுமா என்று தேர்தல் அலுவலர்களும் சொல்லியிருக்கிறார்கள்.

"யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை" என்று வாக்குச்சாவடி அதிகாரி வைத்திருக்கும் 17-ஏ பதிவேட்டில் கையெழுத்து இட்டால் மட்டுமே போதுமானது என்பது பல வாக்குச்சாவடி அலுவலர்களுக்கே தெரியவில்லை. 49 ஓ-வுக்கான படிவம் இல்லை என்று வாக்காளரை மனது மாற்றியிருக்கிறார்கள். 

49 ஓ-வுக்கு விழுந்த ஓட்டுக்கள் என்பது அரசியல் கட்சிகளுக்கான மிக பெரிய அவமானம் என்பதை கட்சிகள் உணராமல், சாதாரணமாகவே எடுத்துக்கொண்டுள்ளன. ஒரு வேளை மின்ணனு இயந்திரத்தில் 49 ஓ-வுக்கென தனி பட்டன் வைக்கப்பட்டிருந்தால், அதிக வாக்குகள் அதற்கே விழுந்திருக்கும். இப்போது அரசியல் யாவாரம் பார்த்துக்கொண்டிருக்கும் பலரும் வேறு தொழிலை பார்க்க போக வேண்டிருந்திருக்கும்.

யோசிக்க வைத்த வலைப்பதிவு:
              

ஜப்பானிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியிலிருந்து நாம் கற்றுக்
கொள்ள வேண்டிய 10 படிப்பினைகள் பற்றிய ஆஹா பக்கங்கள்


உதிரிப்பூக்கள் :

ரத்தவெறி ராஜபக்ஷ 2011 ஆம் ஆண்டின் உலகின் செல்வாக்கு மிக்க நபர்களுள் ஆறாவது இடத்தில் டைம்ஸ் பத்திரிக்கையால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். (டைம்ஸ் இப்போது காமெடி டைம்ஸ்)
இணையம் வைத்திருக்கும் அத்துணை சிங்களவர்கள் வாக்களித்தால் கூட அவ்வளவு ஓட்டுக்கள் பெற முடியாத நிலையில் முடிவுகள் இருப்பதால், ரொம்ப கடுப்பா இருக்குங்க எசமான்)  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இந்தத் தெரிவில் பெற்றிருப்பது 95வது இடம்.

தேர்தல் முடிவுற்ற நிலையில் ஏன் ஆ.ராசா சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வர முயற்சிக்க வில்லை? திமுக தலைமை மொத்தமாக கைவிட்டு விட்டதா?

15 வருடம் தவமாய் தவமிருந்து பெற்ற மகளை அன்னிய மண்ணில் இழந்த சித்ரா அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

14 வருடங்களுக்கு பின் ஆண் குழந்தையை பெற்றிருக்கும் "செஸ்" விஸ்வநாதன் - அருணா தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் ( பத்திரமா பாத்துக்கோங்க)

தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜயகாந்துக்கு தொண்டை கட்டியிருந்ததே இப்ப நல்லாயிருச்சா? (சீக்கிரம் வந்து, பரபரப்பா பேசுங்க தலைவா..)
வாக்கு எண்ணிக்கையை ஒரு மாதம் தள்ளி வைத்து, அரசியல்வாதிகளின் வயிற்றில் தேர்தல் கமிஷன் புளியை  கரைத்தது போதாது என்று, தேர்தலில் மக்களும் பொங்கி வந்து வாக்களித்து விட, ஆளுக்கொரு விளக்கம் சொல்லி , பீதியாகி கிடக்கிறார்கள் நம்மூரு அரசியல்வாதிகள் (இதுல பெரிய தலைகள் கூட தோற்க போகிறார்கள் என கிளம்பியிருக்கிறது புதிய பீதி) 


கார்டூன் கார்னர்:
மச்சி, ஐ.பி.எல்.லுக்கு அடுத்த ஜே போடலாமா?

14 கருத்துரைகள்:

! சிவகுமார் ! said...

//இப்படியே இருந்தா, அரசியல்ல பெருசா ஒரு ரவுண்ட் வருவீங்க//

அவர் வர மாட்டார். அவர் வர மாட்டார்...

கக்கு - மாணிக்கம் said...

எல்லாம் கலவையாக, கதம்பமாக மணக்கிறது. அந்த "யோசிக்க வைத்த வலைப்பதிவு" படம் ஒருகணம் அதிர்ச்யில் ஆழ்த்தியது.
வெறும் ஆறே நாட்களில் என்னொரு அற்புதம். நமக்கு என்றால் நான்கு ஐந்து வருடங்கலாகிவிடும், குழந்தைகள் வேறு விழுந்து........ சினிமா சூட்டிங் எடுத்து ......:(((

பொ.முருகன் said...

இந்தவார தத்துவம்..

ஏழை,பணக்காரன் என்னவித்தியாசம்?.

பணக்காரன்,அணைத்தும் பெற்றவன்.

ஏழை,அணைத்துச் சிலப்பெற்றவன்.

சி.பி.செந்தில்குமார் said...

கேபிள் சங்கர் கோபிச்சுக்க மாட்டாரா? ஹி ஹி

செங்கோவி said...

//சீக்கிரம் வந்து, பரபரப்பா பேசுங்க தலைவா..)// ஏன் ரொம்பப் போரடிக்குதோ?

Jana said...

அருமையான தொகுப்பு.

"எப்படிங்க உங்க கார் ஆக்சிடெண்ட ஆச்சு"
"அதோ அங்கே ஒரு மரம் தெரியுதா"
"ஆமாஇஇ தெரியுது"
"அது நேத்து ராத்திரி எனக்கு தெரியலை"
:) நைஸ் ஜோக்

தமிழ்வாசி - Prakash said...

கொத்து புரோட்டா இங்கேயுமா... கார் ஜோக் சூப்பர்

விக்கி உலகம் said...

அருமையான தொகுப்பு

# கவிதை வீதி # சௌந்தர் said...

அனைத்து அருமை....

அறுசுவை படையல் வாழ்த்துக்கள்..

A.L.Raja said...

How to download flying twitter bird image?

A.L.Raja said...

How to Download Flying twitter bird icon?

Speed Master said...

கடைசி படம் அருமை

யாதவன் said...

அருமையான கலவை கலகலா இருக்கு

போளூர் தயாநிதி said...

அருமையான தொகுப்பு.

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்