வணக்கம் நேயர்களே, இன்றைய நமது நிகழ்ச்சியில் பதிவுலக தாதாவாக மாறத்துடிக்கும் ஒரு சாதா என்ன அறிகுறிகளை கொண்டிருக்கக்கூடும் என்பது பற்றிய மருத்துவக் குறிப்புக்களை பார்க்கப்போகிறோம்.
இது வலைப்பதிவு மேனியா - பதிவர்களை தாக்கும் நோய், இதன் அறிகுறிகளை நீங்களும் கடந்து வந்திருக்கக்கூடும், அல்லது இப்போதும் இந்த அறிகுறிகள் உங்களுக்குள் இருக்கக்கூடும்.
எப்போதும் Stats பார்த்துக்கொண்டே இருப்பது.
பின்தொடருபவர்கள் அதிகரிக்கும் போது, புது சொத்து வாங்கின மாதிரி சந்தோஷப்படுவது.
ஆன்- லைனில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என ஆராய்வது, தான் மட்டும் தான் என்ற உண்மை தெரிந்தவுடன் விரக்தியாவது.
பிரபல பதிவர்களின் பதிவுகளை ஆராய்ந்து, நம்மள விட கேவலமா எழுதியிருக்கிறான் (கவனிக்க அன் விகுதி) ஆனா இவ்வளவு பேர் வந்து பாக்குறாங்களே என கலங்குவது.
அரசியல் கூட்டமா இருந்தா, பிரியாணி குடுத்து ஆள் தேத்தலாம் இப்ப என்ன பண்றது என மருகுவது.
பின்னூட்டமே இல்லாமல் இருப்பதால், தானே மச்சம் வைத்து, மாறு வேடத்தில் வந்து, வேறு வேறு பெயர்களில் பின்னூட்டமிடுவது.
கம்பியூட்டர் தெரியாதுனு சொல்லி, எஸ்கேப் ஆகுற சொந்தகாரங்ககிட்ட, நீங்க தாங்க சின்ன பில்கேட்ஸ் அப்படினு புளுகி ஃப்ளாக் ஆரம்பிக்க மார்க்கெட்டிங் செய்வது-- அட ஓட்டுப்போட ஆள் கிடைக்குமில்ல.
யாரும் ரிஸ்க் எடுக்க விரும்பாததால், தானே கள்ள ஓட்டு போட களமிறங்குவது. ஆனா பாருங்க இப்பவெல்லாம் திரட்டிகள் ரொம்ப உஷாராயிட்டாங்க.(அப்படினா முன்னாடி கள்ள ஓட்டு போட்டிங்களானு கேட்டா..ஹி ஹி ஹி, நமக்கு தற்பெருமை புடிக்காதுங்க)
புதிய பதிவர்களின் பதிவுகளை தேடிப்போய் நீளநீளமாய் பின்னுட்டுவது, (நம்ம இனமில்ல.)பிரபல பதிவர்களுக்கு ஒற்றை வரியில், ஒற்றை வார்த்தைகளில் பின்னூட்டமிட்டு கடுப்படிப்பது.
நல்ல டெரர் பதிவரா பாத்து, அவர்களுடன் சண்டையிடுவது. அடுத்த கட்டமா பஞ்சாயித்த கூட்டுனா "என்ன கைய புடிச்சு இழுத்தாங்க" ரேஞ்சுக்கு என்ன என்ன என கூத்தடிப்பது.
போட்டி வைப்பது, தொடர் பதிவுக்கு வெத்தல பாக்கு தட்டுடன் தடபுடலா கிளம்பி, நான் பொன்னுரங்கம் வந்திருக்கேன் என பீதிய கிளப்புவது.
பதிவிட விஷயம் கிடைக்காத போது விஜய், விஜயகாந்த்,தங்கபாலு, இவர்களின் வயிற்றெரிச்சலை கிண்டுவது.
கும்மியடிக்கும் கூட்டத்தாரோடு சேர்ந்து, "நானும் பெரிய ரௌடிதாங்க" வாலண்டிரியா ஜீப் ஏறுவது.
சமயத்தில் கும்மி கூட்டத்தாரின் போதைக்கு ஊறுகாயாக மாறி தவிப்பது.
கொஞ்ச நாள் பதிவு போடாமல் இருந்து விட்டு, தமிழர்களே தமிழர்களே என ஆரம்பித்து, ரொம்ப ஆணீ அதனால.. என இழுவை போடுவது.
சில பதிவர்கள் தங்களுக்குள் கூட்டணி வைத்துக்கொண்டு,ஓட்டுப்போட்டு ஹிட்டடிப்பதாக, பார்லிமெண்டை கலங்கடித்து, லோக்பால் விசாரணையை கோருவது.
ஆன் லைன் ஆனந்த விகடனில் உறுப்பினராகி, எல்லா வகை விகடன் களின் கட்டுரைகளையும் வலைப்பூவில் போட்டுத்தாக்குவது. (யார் கண்ணுக்கும் தெரியாமல் நன்றி: விகடன் குழுமம் என்று போட்டுக்கொள்வது)
வணக்கங்களும், வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும் என்று டெம்பிளேட் கமெண்ட் போட்டு, பதிவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்வது. (உனக்கு நான் மொய் வைத்திருக்கிறேன், பதிலுக்கு எனக்கு மொய் வைக்க வேணாமா?)
கருணாநிதியின் வியாபார ஆலோசகர் போலவும், கோட நாடு தோட்டத்தின் ஆஸ்தான வித்துவான் போலவும், தலைவர்களுக்கே தெரியாத விஷயங்களை, "எனக்கு எல்லாம் தெரியும்" என்ற ரீதியில், வலைப்பூவில் எழுதுவது.
வாரத்திற்கு ஒரு நாள் "பிரபல பதிவரின்...." என தொடங்கும் தலைப்பினை வைத்து, பதிவெழுதுவது. (மற்ற நாள்களில் இருக்கவே இருக்கு கட், காபி & பேஸ்ட் டெக்னாலஜி)
கூச்சமே இல்லாமல் சுஜாதா விருதுக்கு தங்கள் வலைப்பூ விபரங்களை அனுப்புவது.(தகுதியுடையவர்க்கு அது கிடைக்கும் போது, நடுவர் குழுவை திட்டுவது) இந்த வருட இணையதளத்திற்க்கான விருது பெற்ற யுவகிருஷ்ணா அவர்களுக்கு எம் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துக்கள்)
நேரமில்லாத போது, தனது பழைய பதிவையை, பில்லா 2011 ரேஞ்சில் ரீமேக் செய்வது (இந்த பதிவு, அந்த வகையைச் சேர்ந்தது தான் யுவர் ஆனார்) இது மாற்றங்களுடன் கூடிய மீள்பதிவு.
விளம்பர இடைவேளைக்கு பிறகு நிகழ்ச்சி தொடரும்.
இந்த பதிவை படித்துவிட்டு, கொதிப்பாகி, கண்டன தீர்மானம் போட்டு விட்டு ஆட்டோ அனுப்ப தயாராகும் பதிவர்களை எதிர்கொள்ள 108 ஆம்புலன்ஸ்களுடன் நாங்களும் தயார்.
இப்ப சொல்லுங்க நாயக்கரே நீங்க நல்லவரா, கெட்டவரா?
42 கருத்துரைகள்:
மொத ஹிட்டு
இந்தப்பதிவு இதுவரை நீங்க பெற்ற ஹிட்ஸ்களை எல்லாம் தூக்கி சாப்பிட்ரும்.. வாழ்த்துக்கள். இன்று இரவு 11.45 வரை விழித்திருந்து செக் பண்ணூங்க .. ஹி ஹி
:))))
எப்டி கமெண்ட்ஸ் போட்டாலும் வம்பு.
வேற என்னத்த பண்றது!
>>
ஆன் லைன் ஆனந்த விகடனில் உறுப்பினராகி, எல்லா வகை விகடன் களின் கட்டுரைகளையும் வலைப்பூவில் போட்டுத்தாக்குவது. (யார் கண்ணுக்கும் தெரியாமல் நன்றி: விகடன் குழுமம் என்று போட்டுக்கொள்வது)
ஹி ஹி ஹி
இந்த பதிவுக்கு ஓட்டு போடணுமா வேணாமா.........ஹிஹி!
யாரும் யோக்கியங்கள் அல்ல..........இது எப்படி ஹிஹி!
இந்தப் பதிவில் நிறைய உள்குத்து இருக்கு .. நான் இந்த விளையாட்டுக்கு வரல.
நீங்க நல்லவரா, கெட்டவரா?
நீங்க என்னவெல்லாம் செய்தீகளோ அதை அப்படியே எழுதியது பாராட்டுக்குரியது..???
என்ன கமென்ட் போடலாம் ?????????????/
ஆள விடுங்க சாமி நான் இந்த விளையாட்டுக்கு வரல.
அடபாவி மொத்த பதிவுலக அண்ணாச்சிகளையும் இப்பிடி காலை வாரி விட்டுட்டீங்களே ஹா ஹா ஹா ஹா....
ஏற்கனவே போட்ட பதிவ பெயிண்ட் அடிச்சு டிங்கரிங் பண்ணி இருக்கீங்க, ஆனாலும் நல்லா இருக்கு
எல்லா பக்கமும் அணை கட்டிட்டீங்களே அப்பு..
//யாரும் ரிஸ்க் எடுக்க விரும்பாததால், தானே கள்ள ஓட்டு போட களமிறங்குவது. ஆனா பாருங்க இப்பவெல்லாம் திரட்டிகள் ரொம்ப உஷாராயிட்டாங்க.(அப்படினா முன்னாடி கள்ள ஓட்டு போட்டிங்களானு கேட்டா..ஹி ஹி ஹி, நமக்கு தற்பெருமை புடிக்காதுங்க)//
உங்க நேர்மை எனக்குப் பிடிச்சிருக்கு!
//பதிவிட விஷயம் கிடைக்காத போது விஜய், விஜயகாந்த்,தங்கபாலு, இவர்களின் வயிற்றெரிச்சலை கிண்டுவது//
ஆகா நேற்று நம்ம பதிவப் படிச்சிடீங்களா? அவ்வ்வ்வ்!
பதிவிட நிறைய நல்ல விஷயம் இருக்குங்க. ஆனா அதுக்கு ரொம்ப மெனக்கெடணும் இதுன்னா சும்மா... ஹி ஹி! :-)
புதிய பதிவர்களின் பதிவுகளை தேடிப்போய் நீளநீளமாய் பின்னுட்டுவது, (நம்ம இனமில்ல.)பிரபல பதிவர்களுக்கு ஒற்றை வரியில், ஒற்றை வார்த்தைகளில் பின்னூட்டமிட்டு கடுப்படிப்பது.//
பயங்கரமா டென்சன் ஆகிட்டீங்க போல இருக்கே...
ஹி..ஹி....
ஏனய்யா, ஏனு இந்தக் கொலை வெறி...
பிழைச்சுப் போயிடுவமில்ல. விடுங்க சார்.
எல்லாப்பாக்கமும் நீங்க இப்பிடி Gate போட்டா அப்புறம் என்னதாங்க பண்றது?
ஆமா நீங்க பிரபல பதிவர்தானே?.....இல்ல கமெண்ட்ல நிறையப் பேசிட்டமோ அப்புறம் அதுக்கும்.... என்னமோ போங்க! :-)
இன்றைக்கு இராத்திரி வரை நீங்க விழித்திருப்பீங்களா....
ஹா..ஹா...
இந்த அறிகுறியெல்லாம் எனக்கும் இருக்குதுங்க....
யார் மூலமாவது தெரிஞ்சிகிட்டிங்களா..
My God, we are in a force to find more new techniques.
எனக்கு ஒரு மார்க் கூட கிடைக்கல:)
நல்ல பதிவு, பாராட்டுக்கள்.
இன்னும் நன்றாக... தொடருங்கள்.
:))))))))))))))
ஆஹா...இதுல எதோ உள்குத்து இருக்க மாதிரி இருக்கே....ஓடுற கஸாலி...ஓடிரு...எஸ்கேப்.....
வேட்டியை அவுத்து விட்டுட்டாங்கய்யா ...
நீங்க..எப்படி துரத்தினாலும் சிக்க மாட்டமில்ல
நல்ல நகைச்சுவை பதிவு ..அப்பாடி
என்ன ஒரு வில்லத்தனம்...
இதுல அஞ்சு கிசுகிசு கேட்ட நேரம் பத்தி போல ..மிதி எல்லாமே அருமை அண்ணன் சக்க பதிவரை பத்தி போல...இதுல அவங்க அசரமாட்டாய்ங்க அப்பு
haaaa haa ulkuththu thilakam!
சரமாரியா அடி பின்னியிருக்கீங்களே..தூள்!
ப்ளாக் எழுதுவதை நிறுத்த இவர்கள் மாதிரி எழுத்தர்கள் முக்கிய காரணம்.இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளுங்கள் .
வீட்டில் வளர்க்கும் நாய் முதற்கொண்டு வைக்கும் குழம்பு வரைக்கும் பெருமையை பேச முயல்வது .
கம்பீரமான ப்லாகர்களைக் காண்பது அரிதாகி விட்டது.
ப்ளாக் அட்சயப் பாத்திரமாய் மாறியது எப்போது என்று தெரியவில்லை.
//ஆர்.கே.சதீஷ்குமார் said...
வேட்டியை அவுத்து விட்டுட்டாங்கய்யா ...//
பட்டாபட்டி போட்டுருக்கீரா இல்லையா....
//ஆன் லைன் ஆனந்த விகடனில் உறுப்பினராகி, எல்லா வகை விகடன் களின் கட்டுரைகளையும் வலைப்பூவில் போட்டுத்தாக்குவது. (யார் கண்ணுக்கும் தெரியாமல் நன்றி: விகடன் குழுமம் என்று போட்டுக்கொள்வது//
யாரையோ மறைமுகமாக குத்தி காண்பிப்பது போல இருக்கே? ஹீ...ஹீ...
சிரிக்க வைத்த பதிவு...
நல்லா கீது பா!
நல்லா இருக்குப்பு,
இப்படிக்கு வலைப்பதிவு - மேனியாவால் அவதிப்படும் சாதா பதிவர்.
பாயாசம் செய்வது எப்படின்னு பதிவு போட்டக்கூட 15 ஓட்டு விழுகுதே இப்படித்தானா?
Interesting!
இதுல நான் எந்த வகைன்னு யோசிச்சுட்டு இருக்கேன் பாஸ்...
இப்படி உள்குத்துக்குத்தினால் எங்களைப்போன்ற புதியவர்கள் எப்படி முன்னேறுவது.!
ஹா ஹா ஹா.. எல்லாம் கரெக்டுதான்..
புதுசா ஆரம்பிக்கற எல்லாரும் செய்ற வேலைதான் இது.. :-)
Really great work. congratulations! Happy Easter!
ஏனுப்பு,இம்புட்டு அனுவமா உங்களுக்கு,
எல்லாத்தையும் நீங்களா வச்சுகிட்டா
எப்படி மத்தவங்களுக்கும் பகுந்து கொடுக்கலாம்ல
Post a Comment