சாய்பாபா போல ஸ்பெக்ட்ரத்திற்கும் காஸ்ட்லி சவப்பெட்டி...


இருபத்தி நாலாம் தேதி இறந்த சாய்பாபாவுக்கு, நாலாம் தேதியே சவப்பெட்டி ஆர்டர் செய்யப்பட்ட விஷயம் ஊடகங்களை உலுக்கிக்கொண்டிருக்கிறது.

ரூ1.07 லட்சம் செலவில் செய்யப்பட்ட சவப்பெட்டியில் ஓய்வெடுத்த சாய்பாபா இப்போது நவரத்தினங்களுடன் சமாதியான பின்னரும் சர்ச்சைகள் ஓயாததால், அறக்கட்டளை நிர்வாகிகள் "பிரஸ் மீட்"  வைத்து விளக்கம் சொல்லும் அளவிற்கு, பிரச்சனைகள் உயிர்தெழுந்திருக்கிறது.

பணம், சொத்துக்கள் என்று வந்துவிட்டால், சர்ச்சைகள் வந்து விடும் போல... பத்தும் செய்யும் பணம் இறக்கும் போதாவது சாய்பாபாவை நிம்மதியா இறக்க வழிவிட்டதா என்று தெரியவில்லை.
                              இந்த சந்தடி சாக்கில், நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவை முடக்கும் விஷயத்தில் மத்திய அரசின் கூட்டாளிகள் காங்கிரசும், திமுகவும் வெற்றிக்கோட்டை கடந்திருக்கின்றன.

மக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்ட பாராளுமன்ற பொதுக்கணக்கு குழு என்ற பெயரில் , கணக்கு வழக்கில்லாமல் நாட்களை தின்று விட்டு, வரும் சனிக்கிழமை இறுதிநாள் என்ற நிலையில் பிரதமரையும், முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவையும் குற்றம் சாட்டி வரைவு அறிக்கை தாக்கல் செய்தார் அந்த குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி.

270 பக்கமுள்ள வரைவு அறிக்கையில் மன்மோகன் சிங், ஆ.ராசா,
ப.சிதம்பரம், ரத்தன் டாடா, கபில் சிபல் ஆகியோரை குற்றம் சாட்டும் வார்த்தைகள் இருந்த நிலையில், ஒரு ஓட்டு வித்தியாசத்தில் அந்த வரைவு அறிக்கை வீழ்த்தப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் பற்றி விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு தேவையே இல்லை, பொதுக்கணக்கு குழுவே போதும் என்று முன்பு கூவிய ஜோஷிக்கு இப்போது காங்கிரஸ் -திமுகவின் கூட்டணி வலு நிச்சயம் புரிந்திருக்கும்.

ஒரு காலிடம் தவிர்த்து, 21 உறுப்பினர்கள் இருந்த பொதுக்கணக்கு குழுவின் புதிய தலைவரை தேர்தெடுக்க முன்மொழிந்தவர் காங்கிரஸ் உறுப்பினர் அருண்குமார், வழிமொழிந்தவர் திமுகவின் திருச்சி சிவா, தலைவராக தேர்வாகியவர் காங்கிரஸின் சைபுதீன் சோஸ்.

என்ன கொடுமை என்று பாருங்கள், காங்கிரஸ்- திமுக மீது வைக்கப்பட்ட ஸ்பெக்ட்ரம் ஊழல் புகாரை, இனி காங்கிரஸ் - திமுக கூட்டணியே விசாரிக்கப்போகிறது. என்ன ஒரு ஜனநாயகம் நமக்கு கிடைத்திருக்கிறது பாருங்கள்.

பொதுக்கணக்கு குழுவை, மிக சாதாரணமாக கைப்பற்றிய காங்கிரஸ்- திமுக கூட்டணிக்கு, நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கை குழுவை கலகலக்க வைக்க எவ்வளவு நேரமாகும்?

இப்படியொரு குழுவை அமைக்கத்தான் எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தை பல நாட்கள்  முடக்கி, பல கோடிகளை வீணடித்து கூத்து அடித்தார்களா?

போபால் விஷவாயு வழக்கில் ஆண்டர்சனை நழுவவிட்டது போல, போர்பஸ் பீரங்கி வழக்கில் குவாத்ரோட்சியை நழுவவிட்டது போல, ஸ்பெட்ரம் வழக்கிலும் இனி "தப்பவிடும்" படலம் நடைபெறும். என்ன இந்த முறை தப்பபோவது ஒரு பெருங்கொண்ட கூட்டம்.

இது பற்றியெல்லாம் கவலைப்பட்டு ஒண்ணும் ஆகப்போவதில்லை என்கிறீர்களா, வாங்க வாழ்க ஜனநாயகம் என்று கத்திவிட்டு, ரானா பற்றி பேசலாம்.    

ரஜினி, ரவிக்குமார், ரஹ்மான், ரத்னவேலு , ரானா என்று ஒரே "ர" மயமாக இருக்கும் படத்தின் பெயர் ராணா இல்லை ரானா என்று B.H.அப்துல் ஹமீது மாதிரி சொன்ன ரவிக்குமார் இப்போது படவிளம்பரத்தில் ராணா என்று தான் போட்டிருக்கிறார்.

ராணா படம் பற்றிய கவலை எந்த "ரா" என்பது இல்லை, படத்தின் கதையை ரஜினி எழுதியிருக்கிறார் என்னும் தகவல் தான் சற்று பீதியை கிளப்புகிறது. வள்ளி, பாபா என ரஜினி கதை இலகாவுக்கு வந்தாலே சற்று பயமாக இருக்கிறது.                                          
 

தயாரிப்பது ஐஸ்வர்யாவின் ஆக்கர் மூவிஸ் என்பதும் பயத்தை கிளப்புகிறது. இது வரை ஆக்கர் மூவிஸ் ஆக்கபூர்வமாக வெற்றியை தந்ததில்லை என்பது தான் அதற்கான காரணம்.

பார்க்கலாம் "ர" கூட்டணி என்னவாக போகிறது என்று...

12 கருத்துரைகள்:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

காலையிலே தலைவர் செய்தியா.. வாழ்த்துக்கள்..

பாலா said...

நல்ல கலவையான செய்திகளை தந்திருக்கிறீர்கள். பொதுக்கணக்கு குழு இரண்டாக உடைந்தது என்ற செய்தியை கேட்டே கடுப்பாகிவிட்டது.

சசிகுமார் said...

படிக்க சுவாரஸ்யமாக இருந்தது.

விக்கி உலகம் said...

ரைட்டு!

Speed Master said...

வந்தேன்

இராஜராஜேஸ்வரி said...

நிறைய தகவல்கள் அறிந்துகொள்ளக் கொடுத்திருகிறீர்கள்.நன்றி.

hamaragana said...

அன்புடன் வணக்கம்
பதிவு அருமை..... ஸ்பெக்ட்ரம் கூட்டு குழு.:- பாலுக்கு காவல் பூனை நம்ம எல்லாரும் ..............
வாழ்க ஜனநாயகம் (பணநாயகம்.)

MANO நாஞ்சில் மனோ said...

கலக்கல் செய்திகள் மக்கா...

MANO நாஞ்சில் மனோ said...

பணம் பத்தும் மட்டும் இல்லை பதினோன்னும் செய்யும்...

பலே பிரபு said...

நாடாளுமன்ற பொது கணக்கு குழு முடிவுக்கு வந்தது. # எங்கம்மா அப்பவே சொன்னுச்சு இவிங்கலாம் எங்க சோறாக்கி கொழம்பு வைக்கப் போறானுங்கன்னு.

ட்விட்டர்ல நான் போட்டது.

ஜீ... said...

//கதையை ரஜினி எழுதியிருக்கிறார் என்னும் தகவல் தான் சற்று பீதியை கிளப்புகிறது//
ha ha :-)

NKS.ஹாஜா மைதீன் said...

க"லந்து" கட்டி அடித்து இருக்குறீர்கள்....

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்