என் கர்வம் அழிந்ததடி...

சூரியன் வந்து வெளிச்சம் வீசாத அளவு, அடர்ந்து கிடந்த மனக்காட்டில், ஒற்றை சொல்லெறிதலில் கலவரம் பூக்க வைத்த நிகழ்வு நிகழக்கூடுமென்று கனவிலும் நினைத்ததில்லை அவன். கிரீடம் சுமந்து, கம்பீர வலம் வந்தவன், மகுடம் சரிய மயங்கி கிடக்கிறான்.
  
*அதெல்லாம் முன்பு...
கொஞ்ச நேரம்
நிலவு, நட்சத்திரம்
பார்த்து
பதிலுக்கு கண்சிமிட்டி..
கொஞ்ச நேரம்
கவிதைக்கான வரிகளை
செய்நேர்த்தியுடன் கோர்த்து...
பின் அசந்து தூங்கி
அலாரமடித்ததும்
பதறி எழுந்து.....

*இப்போதெல்லாம்
அலாரம் அடிக்கும் வரை
விழித்திருக்கிறேன்.,
பின்பு சிரமமாய்
புரண்டு...

*எங்கே போயிற்று
என் தூக்கம்
என் நிலவு.

எங்கே போய் தொலைந்தது
என் கவிதைகள்?


*"நீர் தான்
காதல் என்பவரோ"
என் கர்வம் கட்டபொம்மனாய்
கேள்வி கேட்டது.
பின் தூக்கிலிடப்பட்டது.

*எப்படி இது
எனக்குத்தான்
காதலில் உடன்பாடு இல்லையே?

எப்படி
என் மரணம் சம்பவித்தது?

மரணித்த பின் வலிக்கிறதே
இது என்ன?

*கேள்வி கேட்டவள்
கனவுகளோடு
உறங்கிக்கொண்டிருக்க...
பதில் சொல்ல வேண்டிய
நான்
இங்கே சிம்மாசனத்தின் ஓரம்
ஒருக்களித்து
இருக்கிறேனே

இது என்ன நியாயம்?

*சரி...
நாளை வருகிறேன்.

கனவுகளும், களவுகளும்
இல்லாத என் தேசத்தில்
நானே களவாடப்பட்டதை
உறுதி செய்ய...


10 கருத்துரைகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

படித்து விட்டு வருகிறேன்..

sathishsangkavi.blogspot.com said...

//கனவுகளும், களவுகளும்
இல்லாத என் தேசத்தில்
நானே களவாடப்பட்டதை
உறுதி செய்ய...//

அருமையான வரிகள்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இதற்கு உடனே ஓகே சொல்ல வேண்டியதுதானே..

அப்படி சொன்னா எல்லாம் சரியாயிடும்...

இந்த இம்சையில் தொடர்ந்து இருக்க வாழ்த்துக்கள்..

அப்பத்தான் எங்களுக்கு நல்ல கவிதை கிடைக்கும்..

எப்பூடி....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சின்ன சின்ன பரிசுகளில்
சிலிர்க்க முடியுமே…
அதற்காகவேனும்

புலன்களை வருத்திப்
புதுப்பிக்க முடியுமே…
அதற்காகவேனும்…

ஆண் என்ற சொல்லுக்கும்
பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத
அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்…

வாழ்ந்துகொண்டே
சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே
வாழவும் முடியுமே…
அதற்காக வேணும்…

காதலித்துப் பார்///////

இது வைரமுத்து...

சசிகுமார் said...

கவிதை அருமை வாழ்த்துக்கள்.

பாலா said...

கவிதை நல்ல இருக்குங்க. ஆனால் இதிலெல்லாம் நான் ரொம்ப வீக்கு.

தமிழ்வாசி பிரகாஷ் said...

கவித....கவித...கவித...

செங்கோவி said...

பரவாயில்லையே, நான் கவிதை எழுதுவது பற்றி பதிவு போட்டது வீண் போகலை..ஹி..ஹி!

டக்கால்டி said...

நல்லா இருக்குங்க

arasan said...

வரிகள் அனைத்தும் செழிப்பா இருக்குங்க ,.

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்