ஆட்சி மாறினால் வடிவேலு மண்டையில் மாவிளக்கு???


தீபாவளி போன்று ஏதேனும் விஷேச நாட்களில் சிறப்பு நிகழ்ச்சிகளை வெளியிட விஜய் டி.வி. ரொம்ப மெனக்கெடுவார்கள். 


சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ், கமல்,சிவக்குமார், கோபிநாத் என பெரிய பட்டாளமே ரொம்ப யோசித்து நிகழ்ச்சிகள் தருவார்கள். ஆனால் தீபாவளி தினத்தன்று இந்த தரமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் அதே நேரத்தில், சன் டிவி அவர்களை எளிதில் வீழ்த்தி விடும்.


சன் டிவி; "இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக"-னு விளம்பரத்தை போட்டுத் தாக்கி, எவனோ உழைத்து உருவாக்கிய புத்தம்புதிய திரைப்படத்தை ஒளிபரப்பி மக்களை ஈர்த்துவிடுவார்கள்.


தரம், தன்மானம் அப்படினு எதிர்பார்க்கிறவங்க மட்டும் விஜய் டிவியோடு தீபாவளி கொண்டாடுவார்கள். மற்றபடி அலுங்கமல் பெரும்பான்மை மக்களை அள்ளிக்கொண்டு போய்விடும் சன் டிவி.


அந்த மாதிரியான சன் டிவி பார்முலாவை தான் தேர்தல் களத்தில்  வடிவேலுவை பேச விட்டு, மக்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறது திமுக.


தன்னுடைய சொந்த பிரச்சனைக்காக விஜயகாந்தை எதிர்க்க மேடையேறிய வடிவேலுவை, தன்னுடைய சொந்த அரசியல் லாபத்திற்காக திமுக பயன்படுத்தியிருக்கிறது.(அது சரியா தவறா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்)


அடுத்து அம்மா ஆட்சி வந்து விட்டால், வடிவேலு மண்டையில் மாவிளக்கு வைத்து விடுவார்கள் என்று சொல்கிறார்கள். அப்படி சொல்பவர்கள் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். வடிவேலு எந்த மேடையிலும் ஜெயலலிதாவை தாக்கவில்லை. 


விஜயகாந்தை மட்டும் கர்ணகொடூரமாக சாடியுள்ளார். ஒரு வேளை விஜயகாந்த் அரசியல் களத்தில், காமெடியனாக ஆக்கப்படுவதை ஜெயலலிதா கூட ரசித்திருக்கலாம், யார் கண்டது. எனவே அம்மா விஷயத்தில் வடிவேலு ரொம்ப சேப்டியாகத்தான் இருக்கிறார்.


ஒருவேளை அதிமுக ஆட்சியில் வடிவேலு அடித்து, துவைக்கப்பட்டால், "அவரு அடி வாங்காத இடமே இல்லைங்க" அப்படினு மக்கள் அதையும் காமெடியாக கருதக்கூடும்.


பிரச்சாரக்களத்தில் விஜய டி.ஆர்., எஸ்.எஸ். சந்திரன், வெற்றிக்கொண்டான் இல்லாத சூழ்நிலையில் அத்துணை பேரின் இழப்பையும் ஈடு செய்யும் பொறுப்பு (????) தன்னிடம் இருப்பதை உணர்ந்தே வடிவேலு, தில்லாலங்கடி பேச்சுக்களை எதிர்பார்க்கும் மக்களை திருப்தி படுத்தியிருக்கிறார்.


அடுத்து கருணாநிதியின் ஆட்சியே வரும் பட்சத்தில், வடிவேலுவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுத்து திமுக தலைமை அழகு பார்க்கலாம். ஏற்கனவே வடிவேலுவுக்கு, அவரது அண்ணன் அழகிரி "பிக் செட்டில்மெண்ட்"கொடுத்திருப்பார் என்பது வேறுகதை.


ராஜ்யசபா எம்.பி. பதவி இல்லாத பட்சத்தில் வடிவேலுவுக்கு, தமிழ்நாடு சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழு துணைத்தலைவர் பதவி வழங்கப்படலாம். (இதற்கு முன்பு திமுகவின்  பிரச்சார பீரங்கியாக இருந்த டி. ராஜேந்தருக்கு இந்த பரிசு தான் வழங்கப்பட்டது)


வடிவேலு பிரச்சாரம் செய்த போது, ஒரு தேசிய கட்சியினுடைய,  மாநில தலைவரான தங்கபாலு கைகூப்பி நின்றுக்கொண்டே இருந்ததெல்லாம் காலக்கொடுமை என்பதைத்தவிர என்னச்சொல்ல.


திருவாரூர் திமுக பிரச்சாரக்கூட்டத்தில் வடிவேலு, கலைஞர் முன்னிலையில், முதல் முறையாக, விஜயகாந்தை தனிப்பட்ட வகையில் தாக்கி பேசிய போது, அனைவரும் முகம் சுளித்தனர் என்பது உண்மைதான், ஆனால் பிற்பாடு திமுக ஆதரவு தொலைக்காட்சிகளால் மாறிப்போனது. (நம்ம ரசனை அப்படி)  


ஸ்ரீரங்கம் - திருவாணைக்கோவிலில் வடிவேலு (வேன்) மீது செருப்பு வீசப்பட்டது, கமுதியில் கல் வீசப்பட்டது, டிவிட்டர்களில் அதிக கிண்டலடிக்கப்பட்டது, சன் டிவியில் சிறப்பு பேட்டி அளித்தது, இரு பாகங்களாக வடிவேலுவின் பேட்டி ஒளிபரப்பப்பட்டது, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது என்பதெல்ல்லாம் பிரச்சாரக்களம் வடிவேலுவை சுற்றி சுழன்றதற்க்கான ஆதாரங்கள்.


ஒரு கட்டத்தில் வடிவேலுவை, வெடிகுண்டு வீசி கொன்று விட்டு, அதன் மூலம் திமுக அனுதாப ஓட்டு பெற முயற்சிக்கிறது என்று திரைப்பட டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், ஜெயா டிவியில் சொன்னது கூட நிகழ்ந்தது.


வடிவேலுவை "ஆப்" செய்வதற்காக சிங்க முத்துவை அதிமுக இறக்கிவிட்டது சரியான தெரிவு தான் என்றாலும் கூட, சிங்க முத்து எடுபடவில்லை என்பது தான் உண்மை. சிங்க முத்து "மிக அதிக" நாகரீகத்துடன் பேசியதும் ஒரு காரணமாக இருக்கலாம்.


வடிவேலு ஒரு பக்கம் விஜயகாந்தை தாக்கிக்கொண்டிருக்க, விஜயகாந்த் நாகரீகமாய் அமைதி காக்க, அதிமுக பக்கத்திலிருந்து சிங்க முத்து, விந்தியா, ஆனந்தராஜ், ராதா ரவி வடிவேலுவை கலாய்க்க, சுவாரசியாமாய் பொழுது போனது "இந்த மாதிரி" சண்டைகளை ரசிக்கும் மக்களுக்கு.


ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் முதிர்ச்சியான பிரச்சாரத்தில் ஈடுபட, த.பாண்டியன், சீமான் ஆகியோர் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட, அதிக மக்கள் கவர்வதாக பேச்சை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்டாலின், குஷ்பு, விஜயகாந்த், வடிவேலு ஆகியோரில் இந்த தேர்தல் களத்தில் மேன் ஆப் த மேட்ச் பெறுபவர் வடிவேலு தான். (கலைஞர் காப்பீட்டு திட்டம் அப்போது இருந்திருந்தால் என் தந்தையை காப்பாற்றியிருக்கலாம், என ரிஷிவந்தியத்தில் குணச்சித்திர நடிப்புக்காக கண்ணீர் விட்டது தனி கணக்கு)


வடிவேலுவின் பேச்சுக்கள் திமுக கூட்டணிக்கு வரமா சாபமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


தேர்தல் களத்தில்அதிகம் ரசிக்கப்பட்ட வடிவேலுவின் பஞ்ச் டயலாக்குகள்: 


நான் சினிமாவில் காமெடி செய்தேன், விஜயகாந்த் அரசியலில் காமெடி செய்கிறார். 


41 சீட் வாங்கி எப்படி முதல்வராக முடியும், எங்கிட்டாவது அஞ்சு பத்து கோடி கொடுத்து சினிமா எடுத்து அது முதல்வர் ஆகலாம்.


ண்ணில போற கப்பல் இருக்கறவனுக்கு பேரு கேப்டன்-னு பேரு..
எந்நேரமும் தண்ணில இருக்கிறவனுக்கு பேரு கேப்டனா?


எம்ஜியாரால் ஆரம்பிக்கப்பட்ட அதிமுக, விஜயகாந்த் கறுப்பு எம்ஜியார் சொல்லித்திரிவதை ஒத்துக்கொள்கிறதா?


விஜயகாந்த் ஒரு வேட்பாளரை மக்கள் முன் அடிப்பது சரிதானா? “ஆரம்பமெல்லாம் நல்லாதான் இருக்கு… பினிஷிங் சரியில்லையேப்பா’ தன் கட்சி தலைவரை நினைத்துப் புலம்புகிறாராம் அந்த வேட்பாளர் இப்போது”.


ந்த நேரம் கிரிக்கெட் கேப்டன் தோனி ஜனாதிபதி கூட விருந்து சாப்பிட்டு இருப்பாரு; ஆனா இவுங்க கேப்டன் மருந்து சாப்பிட்டு இருப்பாரு..


28 வருசம் கழிச்சு உலககோப்பை வாங்கிக்கொடுத்த தோனி தான் உண்மையான கேப்டன்.. 


வடிவேலு டங் சிலிப்பான இடம் :


திண்டுக்கல்  மாவட்டம், நத்தம் - கோபால்பட்டியில் திமுக வேட்பாளர் பெயரை சொல்வதற்கு பதிலாக, அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் பெயரைச்சொல்லி  வாக்கு கேட்டது.


***************************************************************************   


கலைஞர், ஜெயலலிதா ஆகியோரின் பிரச்சாரம் பற்றிய அலசல்:

பாசத்தலைவனும், தங்கத்தாரகையும் -தேர்தல் களத்திலிருந்து ஒரு சூடான அலசல்.



26 கருத்துரைகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
This comment has been removed by the author.
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கைப்புள்ளைக்கு கால்(விஜயகாந்த் லெக்)அடி உண்டான்னு பொறுத்திருந்து பாக்கலாம்

rajamelaiyur said...

Vadivelu ku aapu katheruku.

Unknown said...

அவங்க மறந்தாலும் நீங்க எடுத்து கொடுப்பீங்க போல இருக்கே, ஆனாலும் வடிவேல் சொல்வதிலும் நீங்கள் சொல்வதிலும் உண்மை இல்லாமல் இல்லை

MANO நாஞ்சில் மனோ said...

//அடுத்து அம்மா ஆட்சி வந்து விட்டால், வடிவேலு மண்டையில் மாவிளக்கு வைத்து விடுவார்கள் என்று சொல்கிறார்கள். அப்படி சொல்பவர்கள் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். வடிவேலு எந்த மேடையிலும் ஜெயலலிதாவை தாக்கவில்லை. //

ஹை அப்பிடி ஒரு ஆங்கிள் இருக்கு இல்லையா...!!!!

MANO நாஞ்சில் மனோ said...

//விஜயகாந்தை மட்டும் கர்ணகொடூரமாக சாடியுள்ளார். ஒரு வேளை விஜயகாந்த் அரசியல் களத்தில், காமெடியனாக ஆக்கப்படுவதை ஜெயலலிதா கூட ரசித்திருக்கலாம், யார் கண்டது. எனவே அம்மா விஷயத்தில் வடிவேலு ரொம்ப சேப்டியாகத்தான் இருக்கிறார்.//

அடடடடா அரசியல் சிலம்பாட்டத்தை பாருங்கய்யா...

MANO நாஞ்சில் மனோ said...

///ஒருவேளை அதிமுக ஆட்சியில் வடிவேலு அடித்து, துவைக்கப்பட்டால், "அவரு அடி வாங்காத இடமே இல்லைங்க" அப்படினு மக்கள் அதையும் காமெடியாக கருதக்கூடும்.//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

MANO நாஞ்சில் மனோ said...

//அடுத்து கருணாநிதியின் ஆட்சியே வரும் பட்சத்தில், வடிவேலுவுக்கு ராஜ்யசபா எம்.பி. பதவி கொடுத்து திமுக தலைமை அழகு பார்க்கலாம். ஏற்கனவே வடிவேலுவுக்கு, அவரது அண்ணன் அழகிரி "பிக் செட்டில்மெண்ட்"கொடுத்திருப்பார் என்பது வேறுகதை.//

அதுலதான் அஞ்சாநெஞ்சன் கெட்டிக்காரர் ஆச்சே....

MANO நாஞ்சில் மனோ said...

//வடிவேலு பிரச்சாரம் செய்த போது, ஒரு தேசிய கட்சியினுடைய, மாநில தலைவரான தங்கபாலு கைகூப்பி நின்றுக்கொண்டே இருந்ததெல்லாம் காலக்கொடுமை என்பதைத்தவிர என்னச்சொல்ல//

வெக்கம், மானம், சூடு, சொரணை இல்லாதவங்க'தானே காங்கிரஸ் காரனுங்க...

MANO நாஞ்சில் மனோ said...

//ஒரு கட்டத்தில் வடிவேலுவை, வெடிகுண்டு வீசி கொன்று விட்டு, அதன் மூலம் திமுக அனுதாப ஓட்டு பெற முயற்சிக்கிறது என்று திரைப்பட டைரக்டர் ஆர்.வி. உதயகுமார், ஜெயா டிவியில் சொன்னது கூட நிகழ்ந்தது.//

அட அப்பிடியா....!!!!???

MANO நாஞ்சில் மனோ said...

//வடிவேலு டங் சிலிப்பான இடம் :


திண்டுக்கல் மாவட்டம், நத்தம் - கோபால்பட்டியில் திமுக வேட்பாளர் பெயரை சொல்வதற்கு பதிலாக, அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் பெயரைச்சொல்லி வாக்கு கேட்டது.//

பெக்கு அளவு கூடி போச்சி போல ஹா ஹா ஹா ஹா....

பாலா said...

ஆனால் வடிவேலுவின் பிரச்சாரத்தை மக்கள் பொழுதுபோக்காகத்தான் எடுத்துக்கொள்வார்கள் என்று தோன்றுகிறது. பேச்சுக்கு கைதட்டுபவர்கள் எல்லாம் வோட்டு போடுவார்கள் என்றால் வைகோ எப்போதோ முதல்வர் ஆகி இருப்பார்.

ராஜ நடராஜன் said...

வடிவேலுதான் தி.மு.கவின் வெற்றிக்கு காரணம் என்றால் எஸ்.எஸ்.சந்திரன்,வெற்றிகொண்டான்,தீப்பொறி ஆறுமுகம் கூட அந்த அந்த கட்சியின் வெற்றிக்கு காரணமானவர்கள் என்று சொல்லலாமா!

வடிவேலுவின் த்னி மனித காழ்ப்புணர்ச்சியில் மட்டுமே தி.மு.க வெற்றியென்றால் தமிழர்கள் பரிதாபத்துக்குரியவர்கள்.

Jana said...

"ஆட்சி மாறினால் வடிவேலு மண்டையில் மாவிளக்கு???
hi..hii...hiii...

அருள் said...

பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html

பனித்துளி சங்கர் said...

/////திண்டுக்கல் மாவட்டம், நத்தம் - கோபால்பட்டியில் திமுக வேட்பாளர் பெயரை சொல்வதற்கு பதிலாக, அதிமுக வேட்பாளர் விஸ்வநாதன் பெயரைச்சொல்லி வாக்கு கேட்டது.

///////////

ஆர்வக் கோளாறுல இப்படி ஏதாவது ஒன்றை செய்துவிட்டாரோ !!??

செங்கோவி said...

வடிவேலு சேஃப்பா த் தான் விளையாடி இருக்காரு!

thulirgal said...

பயோடேட்டா - பா.ம.க: சாதிவெறியின் வெளிப்பாடு

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_12.html

Jayadev Das said...

அரசியலில் நிரந்தர நம்பர்களோ, எதிரிகளோ இல்லை. எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போய் ஒட்டிக் கொள்ளலாம். ஜெயலலிதாவை, காளிமுத்து மாதிரி த்வக்கிரமாகத் திட்டிப் பேசியவர்கள் யாரும் இல்லை, ஆனால் அவரையே அழித்து சபாநாயகராகினார் அவர். ஜெ. ஆட்சியின் போது அவரை அம்மா.. தாயே... என்று புகழ்ந்து பேசிய வடிவேலு, அவர் திரும்ப வந்தால் நிமிஷத்தில் காலில் விழுந்து, தாவிவிட மாட்டாரா? அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா.

Anonymous said...

தெரிந்தோ தெரியாமலோ அரசியல் சாயம் பூசிக்கொண்டார் வடிவேலு..அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் 5 வருடங்களும் வடிவேலுக்கு அவமானம்தான்.96 ல் மனோரமா வுக்கு ஏறொபட்ட அதே சோதனைகள் இவருக்கும் கிடைக்கும்...அ.தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டால் விஜயகாந்த் கட்சியினர் வீடு புகுந்து தாக்கினாலும் ஆச்சர்யம் இல்லை..வடிவேலு எதற்கு கோபப்பட்டு விஜயகாந்தை எதிர்த்தாரோ அது தினசரி நடக்கும்

Anonymous said...

வடிவேலு தன் சொந்த பகைக்காகத்தான் தி.மு.கவை ஆதரிக்கிறார்..தி.மு.க ஆட்சியை பிடித்துப்போய் அல்ல..இது கலைஞருக்கும் தெரியும்

Anonymous said...

வடிவேலுவுக்கு கலைஞர் மீது அவ்வளவு பாசம் இருந்தால் ஏன் தி.மு.க வில் சேரவில்லை..?

Anonymous said...

விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த சின்னகவுண்டர் படத்தில் வடிவேலு கோவணம் கட்டியபடி அவருக்கு கால்நகம் வெட்டும் காட்சி இருக்கிறது...அதற்குள் விஜயகாந்தை எதிர்க்கும் அளவு மக்கள் செல்வாக்கு அடைந்துவிட்டாரா

Anonymous said...

சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ், கமல்,சிவக்குமார், கோபிநாத் என பெரிய பட்டாளமே ரொம்ப யோசித்து நிகழ்ச்சிகள் தருவார்கள்///
.
.
விஜய் டிவி வேஸ்டு.எப்போபாத்தாலும் எவளா(நா)வது மைக்க புடிசிகினு கத்திகினு இருப்பாங்க(பாட்ரான்கலாம்)இல்லன்னா அரகொரை ட்றேச்சொட ஆட்டம் இல்லன்னா கோழிபீநாத் சாரி கோபிநாத்தின் மொக்க விவாதம்.எவன் பாப்பான் விஜய் டிவியா?அதே போல சன் டிவியும்.டிஸ்கவரி அல்லது பாக்ஸ் ஹிஸ்டரி பாக்கலாம்.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

வடிவேலுவை தேர்தல் களம் பெரிய மனிதன் ஆக்கி விட்டது.

அன்புடன் மலிக்கா said...

கடைசிபடம் சூப்பர்.
என்மா யோசிகிறாங்கப்பா.

வடிவேலுக்கு மாவிளக்கா.
அப்படின்னா என்னாப்பு..

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்