பிரபல பதிவர்க்கு கடும் கண்டனம் - நையாண்டி தர்பார் உயர்நிலை செயல் திட்டக்குழு தீர்மானங்கள் விபரம்.

 பதிவர்களுக்கு பதிவெழுத விஷய தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ள,
மிக பரபரப்பான சூழ்நிலையில் நேற்று கூடிய ரோஜாப்பூந்தோட்டம் வலைப்பூவின் நையாண்டி தர்பார் உயர் மட்ட செயல் திட்டக்குழு கீழ்காணும் தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளது.                      
சாய்பாபாவின் புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்திலிருந்து லாரி, லாரியாக தங்கமும், வெள்ளியும் இடம்மாற்றப்படுவதையும், தமிழக அரசு தலைமைசெயலகத்திலிருந்து ஆவணங்கள் மாற்றப்படுவதையும் இணைத்து எழுதி மக்களை பீதிக்கு உள்ளாக்கும் ஊடகங்களை இந்த உயர்நிலை செயல் திட்டக் குழு வன்மையாக கண்டிக்கும் அதே நேரத்தில், தேவைப்பட்டால் அவதூறு வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம் என்றும் எச்சரிக்கிறோம்.

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு பற்றி விசாரிக்கும் பாராளுமன்ற பொதுக்கணக்கு குழு தலைவராக இருக்கும் பரளி பனோகர் ஜோஷி, எட்டாம் வகுப்பு கணக்கு பாடத்தில் பெயிலானவர் என்ற ஆதாரம் எங்களுக்கு கிடைத்திருப்பதால் அவர் தனது கணக்கு குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இந்த தீர்மானத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.(எங்கள குத்தம் சொன்னா விட்ருவோமா?)

எப்படியும் அடுத்த ஆட்சி எங்களுடையது தான் என்பது தேர்தல் கமிஷன் மூலம் உறுதி படுத்தப்பட்டுள்ளதால், சட்டசபை கொடநாட்டு எஸ்டேட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது என்பதையும், முதல் அமைச்சரவை கூட்டம் மட்டும் சென்னையில் நடைப்பெறும் என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்த இந்த உயர்மட்ட திட்டக்குழு உறுதி பூணுகிறது.
        

முதலில் வருவோர்க்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், நாடாளுமன்ற கூட்டுக்குழு எனப்படும் ஜே.பி.சி.யிலும் எங்கள் அண்ணன் ஆ.அரசன் அவர்களுக்கு விசாரணைக்குழு தலைவர் பதவியை வழங்க வேண்டுமாறு இந்த தீர்மானத்தின் மூலம் பரிந்துரைக்கிறோம். (இல்லையென்றால் லோக்பால் கமிட்டி மீது சேற்றை வாரி இறைத்தது போல அனைவர் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டு, ஊழல் மோட்சம் அளிக்கப்படும்)  


தன்னுடைய வலைப்பூவை யாரும் காப்பி செய்யாதவாறு தடுத்துள்ள நம்பர் 1 பதிவர் சி.பி.செந்தில் குமாரை இந்த உயர்மட்ட திட்டக்குழு கடுமையாக திட்டுகிறது. ஒரு குடும்பத்தில் வேலையில் இருப்பவர்கள், வேலையில்லாதவர்களுக்கு உதவுவது போல, பதிவெழுத விஷயம் இல்லாதவர்களுக்கு, விஷயம் இருப்பவர்கள் உதவுவது தானே முறை.

ஒண்ணு காபி செய்யப்படுவதை தடுக்கும் டெக்னிக்கை சொல்லிக்கொடுங்கள், இல்லையெனில் காபி செய்ய விடுங்கள், நீங்கள் படித்த சிறந்த கருத்துக்களை உங்களை தொடர்ந்து, நாங்களும் பகிர்கிறோம். டீலா நோ டீலா..
(இங்கே கண்டனம் தெரிவித்து விட்டு, தனி மின்னஞ்சலில் ஹி ஹி ஹி சொல்ல மாட்டோம்..)
                                                

காமன்வெல்த் கமிட்டி கலக்கல் கதாநாயகன் கல்மாடியை செருப்பால் அடித்ததை இந்த உயர்நிலை செயல் திட்டக் குழு வன்மையாக கண்டிக்கிறது. ஊழல் மூலம் கொள்ளை அடிப்பது நாட்டிற்கு நல்லதல்ல என்ற தவறான எண்ணத்தை மக்கள் மனதில் விதைக்கும் இது போன்ற செயலை பார்த்துக்கொண்டு நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்றும் இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.
      
ஐ.பி.எல்லில் சிக்ஸர் அடிக்கும் போதெல்லாம் சியர்ஸ் கேர்ள்ஸ் உற்சாகப் படுத்துவதை போல,, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது, ஒவ்வொரு ரவுண்டிலும் முன்னிலை அறிவிக்கப்படும் போது, வேட்பாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மகளிர் அணியினர்  நடனமிட
அனுமதி அளிக்க தேர்தல் கமிசனை இந்த தீர்மானத்தின் மூலம் வேண்டி, விரும்பி, கெஞ்சி, கொஞ்சி கேட்டுக்கொள்கிறோம். (எங்களுக்கு கொள்கை தான் முக்கியம் என்பதையும் இங்கே, இந்த நேரத்திலே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்) 

தமிழ்மணத்தில் நெகட்டிவ் ஓட்டு போடுபவர்களுக்கு, உடனடியா சில பல வைரஸ்களை அனுப்பும் வகையில் சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கி அளிக்குமாறு தொழில்நுட்ப பதிவர் "வலையுலக பில்கேட்ஸ்" சசிக்குமார் அவர்களை இந்த உயர்மட்ட திட்டக்குழு கேட்டுக்கொள்கிறது.
  

டிஸ்கி:
இந்த பதிவிற்கு ஹி..ஹி...ஹி... என பின்னூட்டம் இட தடை விதிக்கப்படுகிறது.

ஐ...!  எங்களுக்கும் விருது கிடைச்சிருக்கு.


"ஓவரா பேசுனது போதுங்கப்பா...பூட்டு போடணும் உங்க வாய்க்கு" விருது வழங்கி கௌரவித்த பிரபல பதிவர் அண்ணன் மகுடி மாவீரன் அவர்களுக்கு மிக்க நன்றி.

26 கருத்துரைகள்:

ராஜகோபால் said...

//ஒண்ணு காபி செய்யப்படுவதை தடுக்கும் டெக்னிக்கை சொல்லிக்கொடுங்கள், இல்லையெனில் காபி செய்ய விடுங்கள்,//

இதுக்கு எதுக்குயா அவர்கிட்ட கேக்கர அவர் பதிவ save as பண்ணி கம்ப்யூட்டர்ல போட்டு அத ms word ல ஓபன் பண்ணி உள்ள இருக்கறத copy பண்ணிக்குயா

நிரூபன் said...

ரோஜாப்பூந்தோட்டம் வலைப்பூவின் நையாண்டி தர்பார் உயர் மட்ட செயல் திட்டக்குழு //

அடி ஆத்தி, இது அப்போ தனி ஒராளின் வலைப் பூ இல்லையா? எத்தினை பேரு சேர்ந்து பண்ணுறீங்க?
தொகுதி வாரியமா?
இல்லே கட்சி ரீதியாகவா;-)))
அவ்.............

நிரூபன் said...

பதிவெழுத விஷயம் இல்லாதவர்களுக்கு, விஷயம் இருப்பவர்கள் உதவுவது தானே முறை.//

என்னம்மா யோசிக்கிறாங்க, பாருங்க...

சிபி காப்பி பண்ண வாய்ப்பளித்தால்,
முத ஆளா தான் தான் காப்பி பண்ணி பதிவெழுதுவேன் என்று சொல்லுற மாதிரி எல்லே இருக்கு;-))

நிரூபன் said...

ஒண்ணு காபி செய்யப்படுவதை தடுக்கும் டெக்னிக்கை சொல்லிக்கொடுங்கள், இல்லையெனில் காபி செய்ய விடுங்கள், நீங்கள் படித்த சிறந்த கருத்துக்களை உங்களை தொடர்ந்து, நாங்களும் பகிர்கிறோம். டீலா நோ டீலா..
(இங்கே கண்டனம் தெரிவித்து விட்டு, தனி மின்னஞ்சலில் ஹி ஹி ஹி சொல்ல மாட்டோம்..) //

நல்லாத் தானே போய்க் கொண்டிருக்கிறது, ஏனு, ஏன் இந்தக் கொல வெறி.

நிரூபன் said...

அவதூறு வழக்கு தொடரவும் தயங்க மாட்டோம் என்றும் எச்சரிக்கிறோம்.//

மவனே... கையில கிடைச்சாய், பிச்சுப் புடுவன், பிச்சு;-))

அவதூறு வழக்குத் தொடருவதென்றால் என்ன மார்கெட்டில காய் கறி வாங்குகிற வேலையா/

நிரூபன் said...

ஐ.பி.எல்லில் சிக்ஸர் அடிக்கும் போதெல்லாம் சியர்ஸ் கேர்ள்ஸ் ஆடுவதை போல,//

அப்பிடீன்னா, உங்க ஒவ்வோர் பதிவும் ஹிட் ஆகும் போதும், வலைப் பூவில் யாராவது பிகருங்க நாட்டியம் ஆடுவாங்களா.
அவ்.................

நிரூபன் said...

தமிழ்மணத்தில் நெகட்டிவ் ஓட்டு போடுபவர்களுக்கு, உடனடியா சில பல வைரஸ்களை அனுப்பும் வகையில் சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கி அளிக்குமாறு தொழில்நுட்ப பதிவர் "வலையுலக பில்கேட்ஸ்" சசிக்குமார் அவர்களை இந்த உயர்மட்ட திட்டக்குழு கேட்டுக்கொள்கிறது.//

அடிங்....இதெற்கெல்லாம் நாம ஏற்கனவே சாப்ட்வேர் கண்டு பிடிச்சுட்டோம். தெரியல...

சங்கவி said...

He He He he

பாலா said...

//ஹி..ஹி...ஹி... என பின்னூட்டம் இட தடை விதிக்கப்படுகிறது.


ஹா.. ஹா.. ஹா..

சசிகுமார் said...

சாப்ட்வேர் ரெடியாயிடுச்சி 2 இலட்சத்த என் அக்கௌன்ட்டுல போட்டுடுங்க நான் சிடி அனுப்புறேன் ஹா ஹா.......

வானம் said...

ஹி ஹி ஹி......

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த பதிவிற்கு ஹி..ஹி...ஹி... என பின்னூட்டம் இட தடை விதிக்கப்படுகிறது.//

ஹி..ஹி...ஹி...ஹி

நல்லா பாருங்க நீங்க மூணு ஹி தான் போட கூடாதுன்னு சொன்னீங்க. நான் நாலு ஹி போட்டேன். ஹிஹிஹிஹி

MANO நாஞ்சில் மனோ said...

//பரளி பனோகர் ஜோஷி, எட்டாம் வகுப்பு கணக்கு பாடத்தில் பெயிலானவர் என்ற ஆதாரம் எங்களுக்கு கிடைத்திருப்பதால் அவர் தனது கணக்கு குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இந்த தீர்மானத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறோம்.(எங்கள குத்தம் சொன்னா விட்ருவோமா?)
///


அட்ரா அட்ரா அட்ரா சக்கை......

MANO நாஞ்சில் மனோ said...

//தமிழ்மணத்தில் நெகட்டிவ் ஓட்டு போடுபவர்களுக்கு, உடனடியா சில பல வைரஸ்களை அனுப்பும் வகையில் சாப்ட்வேர் ஒன்றை உருவாக்கி அளிக்குமாறு தொழில்நுட்ப பதிவர் "வலையுலக பில்கேட்ஸ்" சசிக்குமார் அவர்களை இந்த உயர்மட்ட திட்டக்குழு கேட்டுக்கொள்கிறது.//


அடடடடா ஆரம்பிச்சிட்டாங்கய்யா அடுத்த ஆட்டத்தை....

middleclassmadhavi said...

இவ்வளவு விஷயம் இருக்கா...!!
ஹி ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

நான் இன்னும் பதிவை படிக்கலை.. ஆனா பொது விதிப்படி நான் எங்கே போனாலும் முதல்ல மன்னிப்பு கேட்டு பழக்கம் ஆகிடுச்சு. அதனால முதல்ல அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ( எதுக்கு கேட்கறேன்னு எனக்கே தெரில )

Jana said...

ஹா..ஹா..ஹா..
ஹி..ஹி..ஹி.. என்று பின்னூட்டத்தானே இங்கே தடை!

விக்கி உலகம் said...

புதிய க்ரூபுக்கு வாழ்த்துக்கள் ஓஹோ!

டக்கால்டி said...

ஹி ஹி ஹி

டக்கால்டி said...

நான் இன்னும் பதிவை படிக்கலை.. ஆனா பொது விதிப்படி நான் எங்கே போனாலும் முதல்ல மன்னிப்பு கேட்டு பழக்கம் ஆகிடுச்சு. அதனால முதல்ல அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ( எதுக்கு கேட்கறேன்னு எனக்கே தெரில )

ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

வலிபோக்கன் said...

எனக்கு ஓட்டே இல்லங்கன்னா,இருந்தா
உங்களுக்கே ஓட்டு போடுவேங்ன்னா.

Nesan said...

இப்படி வலைப்பதிவை நீங்க குத்தகை எடுத்தால் புதியவர்கள் வட்டாரத்திடம் மனுக்கொடுப்பம்!

Nesan said...

மனோவிடம் குறையைச் சொல்லும்விதமாக தந்தி யடிக்கப்போறன் !அவர்தானே கட்சித்தலைவர்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வணக்கங்களும்,வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்..

நல்ல பதிவு, பாராட்டுக்கள்.

பகிர்வுக்கு நன்றிகள், தொடருங்கள்.

இன்னும் நன்றாக எழுதியிருக்கலாம்.

நல்லாவே இல்லை, என்ன பண்றது தலையெழுத்தேனு படிக்க வேண்டியிருக்கிறது.

சூஸ் தி பெஸ்ட் பின்னூட்டம்....!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///////சி.பி.செந்தில்குமார் said...
நான் இன்னும் பதிவை படிக்கலை.. ஆனா பொது விதிப்படி நான் எங்கே போனாலும் முதல்ல மன்னிப்பு கேட்டு பழக்கம் ஆகிடுச்சு. அதனால முதல்ல அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ( எதுக்கு கேட்கறேன்னு எனக்கே தெரில )///////

கிழிஞ்சது... இப்போ தெரிஞ்சு மட்டும் என்ன ஆகிட போகுது....?

சிநேகிதி said...

உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்

என்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி

http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்