கலைஞராக இருந்தாலும் சரி, ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி இன்று ஊர் ஊராக பயணப்பட்டு பிரச்சாரம் என்று சளைக்காமல் பேசிக்கொண்டு இருப்பதெல்லாம் வாக்களார்களை கவருவதற்காக தானே...(கதாநாயகன்களும், கதாநாயகிகளும் அதற்காகத்தானே தேர்தல் அறிக்கை என்ற பெயரில் அவிழ்த்து விடப்பட்டார்கள்)
அவர்கள் மட்டுமல்லாது, அனைத்து அரசியல்வாதிகளும்(சரிங்கப்பா, அரசியல்வியாதிகளும்) இப்போது மக்களை நோக்கி, ஆரவாரமாய் வந்து கொண்டிருக்கிறார்கள்.
எல்லாம் மக்கள் போடும் மதிப்பெண்களுக்காக.
அவர்களின் இந்த நேர பேச்சுக்களை மட்டும் பார்த்து ஏமாந்து விடாமல், கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள், அவர்களின் கட்சியின் செயல்பாடு எப்படி இருந்தது என்பதை கவனத்தில் கொண்டு வாக்களிப்பது தான் சரியான விஷயமாக இருக்கும்.
யோசித்து வாக்களிக்க வேண்டும் என்பது இந்த பதிவின் கோரிக்கை...
யோசித்தால் வாக்களிக்க முடியாதே என்று நீங்கள் சொன்னால் அது விதண்டாவாதமாகவே இருக்கும்.
அரசியல் என்பது ஒரு சாக்கடை என்று சொல்லி, அரசியல்வாதிகளை சளைக்காமல் திட்டும் நமக்கு, அந்த சாக்கடையை இறங்கி சுத்தம் செய்யும் தைரியமில்லை. குறைந்த பட்சம் வாக்களிக்கும் கடமையையாவது தவறாது செய்யலாமே.
ஒரு நாட்டின் பிரஜையாய் வாக்களிக்கும் கடமையை செய்யாதவர்க்கு,
உரிமைகளை கேட்க என்ன தகுதியிருக்கிறது?
வாக்களிக்காத ஒருவருக்கு, இந்த அரசியல்வாதிகளே மோசம் என கரித்துக்கொட்ட என்ன உரிமையிருக்கிறது?
இங்கே யாருமே உத்தமனில்லை, எதுவும் சரியில்லை என்றாலும் கூட, 49 ஓ என்பதன் படி குறைந்த பட்சம் வாக்களிக்க விருப்பமில்லை என்றாவது நம் கருத்தை பதிவு செய்ய வேண்டும். (சும்மா வாக்குபதிவு மையத்துக்கு முன்னாடி 49 தடவை "ஓ போடு" அப்படினு கத்தணும் நனைச்சுட்டு வீட்டுல டீவி பாத்துட்டு இருப்பது எப்படி நல்ல குடிமகனுக்கு அடையாளமாகும்?)
49 ஓ படி வாக்களிப்பது மிக சுலபம். வாக்காளருக்குரிய அடையாள ஆவணத்தோடு, வாக்குச்சாவடிக்கு சென்று, அங்குள்ள வாக்குபதிவு அலுவலரிடம் இருக்கும் 17-ஏ என்பதில் வாக்களிக்க விருப்பமில்லை என கையெழுத்திட்டாலே போதும்.
"ரொம்ப வக்கணையாய் வலைப்பூக்களில், தெருவோர டீக்கடை பெஞ்சுக்களில், திண்னைகளில், பேருந்து நிறுத்தங்களில் அரசியல்வாதிகளை பற்றி வாய்கிழிய பேசினால். மட்டும் பேசினால் மட்டும் போதாது, வாக்களிக்கவும் வேணும்" இது நம்ம பக்கத்து வீட்டு பெரியவரின் அருளுரை.. (வலைப்பூக்களில் என்பது நாம் சேர்த்துக்கொண்டது..ஹா...ஹா... ரொம்ப படிச்சவங்க தான், தங்களின் ஜனநாயக கடமையிலிருந்து தவறுகிறார்கள்)
ஆதலால் மக்களே வாக்களிப்போம்... நம்ம வேலையை எப்போதும் சரியாக செய்வோம்.
நாட்டிற்காக உழைத்தல் என்பது கார்கில் சென்று துப்பாக்கி சுமப்பது மட்டுமல்ல... நம்முடைய வேலையை சரியாக செய்வது தான்.
டிஸ்கி :
சென்ற தேர்தல்களில் நான் வாக்களித்த கட்சி தோற்றுவிடும்...நம்ம ராசி அப்படி. அதனால் இந்த முறை யாருக்கு வாக்களித்து தோற்கடிக்கலாம் என்ற யோசனையோடு குழம்பிக்கொண்டு இருக்கிறேன்.. உங்கள் ஆலோசனைகளை அள்ளிவிடுங்களே... (என்னோட ராசி நல்ல ராசி... அது எப்போதும் உங்கள போல நல்லவங்க ஆசி...)
16 கருத்துரைகள்:
யோசித்து வாக்களிக்க வேண்டும் என்பது இந்த பதிவின் கோரிக்கை...
யோசிக்க ஆரம்பித்தாகிவிட்டது.
/நான் வாக்களித்த கட்சி தோற்றுவிடும்...நம்ம ராசி அப்படி.// அய்யா, இது தமிழ்மணம்/இண்ட்லிக்கும் பொருந்துமா......
அழகாக நம் கடமையை விளக்கிச் சொல்லி இருக்கிறீர்கள். நன்றி..என் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லையாம்..ஓவரா தேர்தல் ஸ்பெஷல் தொடர் எழுதும்போதே நினைத்தேன், இப்படித்தான் புஸ்ஸுன்னு போகும்னு!
//
சென்ற தேர்தல்களில் நான் வாக்களித்த கட்சி தோற்றுவிடும்...நம்ம ராசி அப்படி. அதனால் இந்த முறை யாருக்கு வாக்களித்து தோற்கடிக்கலாம் என்ற யோசனையோடு குழம்பிக்கொண்டு இருக்கிறேன்.. உங்கள் ஆலோசனைகளை அள்ளிவிடுங்களே... (என்னோட ராசி நல்ல ராசி... அது எப்போதும் உங்கள போல நல்லவங்க ஆசி...)//
யாருக்கு ஓட்டுபோட்டு தோற்கடிக்கணும்னு ஏற்கனவே பிளான் பண்ணிட்டு இப்போ எங்ககிட்டே நூல் விடுகிறீராக்கும் பிச்சிபுடுவேன் பிச்சி ஹே ஹே ஹே ஹே....
கண்டிப்பாக நம் கடமையை செய்ய தவற கூடாது....
அப்போ தோத்து போற கட்சி, நீர் ஒட்டு போட்ட கட்சி சரி சரி மக்கா....
இங்கு மட்டும் என்ன ? அதேதான்.!
நானும் யோசிச்சு தாங்க ஒட்டுப் போடுறேன்...அட இந்த இடுகைக்குங்க..ஹி ஹி
//பேசிக்கொண்டு இருப்பதெல்லாம் வாக்களார்களை கவருவதற்காக தானே...//
”அந்த மொழி எனக்கு மட்டும் சொந்தமல்லவே?அவர்கள் அதைப் பேசக்கூடாது என்று நான் தடை போட்டது கிடையாதே”
நாப்பறை கொட்டத் தெரிந்தவர்கள்
இந்த பதிவின் தலைப்பும்
//வலைப்பூக்களில் என்பது நாம் சேர்த்துக்கொண்டது..ஹா...ஹா...//
என்பதற்கும் எனக்கு அர்த்தம் புரிந்துவிட்டது.
இந்த ஓட்ட போடுறதுக்கும்,பெறுவதற்கும் என்னா பாடு பட வேண்டியதாயிருக்கு.(வலைப்பூவிலும்தான்)
இந்த முறை ஓட்டு போட விடுவாங்க என்று நினைக்கிறேன்.......கள்ள ஓட்டு கம்மியாகும் ஹிஹி!
present
யோசித்தால் வாக்களிக்க முடியாதே என்று நீங்கள் சொன்னால் அது விதண்டாவாதமாகவே இருக்கும்.
வாக்களிக்காமல் விதண்டாவாதம் செய்பவர்கள் வாசிக்கவேண்டிய வரிகள்
அரசியல் என்பது ஒரு சாக்கடை என்று சொல்லி, அரசியல்வாதிகளை சளைக்காமல் திட்டும் நமக்கு, அந்த சாக்கடையை இறங்கி சுத்தம் செய்யும் தைரியமில்லை.
ஒவொரு குடிமகனும் வெக்கப்படவேண்ட்டும்
இங்கே யாருமே உத்தமனில்லை
கடுமையாக சுட்டெரிக்கும் வரிகள் ,
உங்கள் மின் அஞ்சல் முகவரியை தந்தாள் அனுப்புவேன் அல்லது எனது ப்லோக்கேரை பின்தொடர்ந்தாள் கிடைக்கும் அல்லது எனது ப்லோக்கேரில் மினஞ்சலில் பெறுவதற்கான Subscribe via email அதில் உங்கள் மினஞ்சல் முகவரியை கொடுத்து பெற்றுகொள்ளலாம்
நன்றி உங்கள் அதரவுக்கு
கண்டிபாக தாத்தாவிற்கு ஓட்டுப்போடுங்க பூட்டபிள்ளைகளுக்கும் சொத்து சேர்கனும் மக்களுக்காக சக்கரநாற்காளியில் வலம் வருகிறார்.
Post a Comment