காங்கிரஸ் குள்ளர்களின் சாம்ராஜ்யம் -ஒரு சூடான கலாய்ப்பு ஆதாரம்.
தேர்தலுக்கு முன்பு அதிரடி அரசியல் நடத்திய கட்சிகள் எல்லாம் இப்போது அடங்கி அமைதி காத்து வருகின்றன. ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் மட்டும் தேர்தலுக்கு முன்பு அதிரடி செய்தது போலவே இப்போதும் அதிரடியாய் காமெடி செய்து கொண்டு இருக்கிறார்கள்.


நூற்றாண்டினை தாண்டிய ஒரு தேசிய கட்சியின் மாநில தலைவராக இருந்து கொண்டு, எஸ்.வி.சேகரை வைத்து ஊர் அரசியல், மனைவியை வைத்து வீட்டு அரசியல் என அரசியலின் சகல பரிமாணங்களையும் காட்டிக்கொண்டிருக்கும் எங்கள் தானை தலைவர் "இடிவழுக்கி" தங்கபாலு தான் இந்த "தேர்தலுக்கு பிந்தைய" சிறப்பு பரபரப்புக்கு காரணம்.ரொம்ப சாதுர்யமாக மாஸ்டர் பிளான் போட்டு, மயிலாப்பூர் காங்கிரஸ் வேட்பாளராக ஆனார் அண்ணன் தங்கபாலு. ஜெயித்து எம்.எல்.ஏ. ஆகி, அப்புறம் துணை முதல்வராக ஆகலாம் என்று ஏகப்பட்ட சாணக்கிய திறமையோடு மூவ் செய்து கொண்டிருக்கும் போது, இடைஞ்சல் பண்ணினால் யாரால் பொறுத்துக்கொள்ள முடியும். (ஏற்கனவே போட்டுவைத்த பிளான் படி தன், எங்கள் அண்ணன் தங்கபாலுவால் நடந்து கொள்ள முடியும்.புதுசா பிளான் போட மாட்டோம், போடவும் தெரியாது)


தங்கத்தலைவன் தங்கபாலுவுக்கு, கேட் போட்டு; கரச்சல் குடுக்குற ஆளுகள் யாருனு கணக்கெடுத்தா, முக்கியமா இருக்கிறது கராத்தே தியாகராஜன், எஸ்.வி.சேகர்..


பேருல மட்டும் தியாகம் இருந்தா போதுமா, இந்த கராத்தே தியாகராஜனுக்கு.. கட்சியின் சிந்தனைச் சிற்பி, சயனைடு குப்பி, பேச்சு புலி, செயல் சிங்கம் அண்ணன் தங்கபாலுவுக்கு, பழசை மறந்து, ஜெயிக்க உதவி செய்தால் என்ன தவறு (இதையும் அவருக்காகத்தான் சொன்னோம், ஓடியாடி வேலைச்செய்தால் உடம்பு குறையுமல்லவா?)


அப்புறம் இந்த எஸ்.வி.சேகர். 
அஞ்சு வருசம் தான் மயிலாப்பூர் எம்.எல்,ஏ.வாக இருந்தாச்சுல, அப்புறம் என்ன திரும்பவும், மயிலாப்பூர் மேல கண்ணு.


நீக்கப்பட்டவர்கள், சத்திய மூர்த்தி பவனுக்குள்  நுழையக்கூடாதுனு தங்கபாலு சொன்னதால, இவுங்க ரெண்டு பேரும் அடைக்கலம் தேடி வந்துடுவாங்களோனு, அண்ணா அறிவாலயத்தின் முன்பகுதி பூட்டப்பட்டு, கலைஞர் முதல் தளபதி வரை அனைவரும் பின்வாசல் வழியாக வந்து போய் கொண்டிருக்கிறார்கள்.


இந்த கொடுமையெல்லாம் பார்க்க முடியாமல் பிரதமர் கஜகஸ்தான் போய்விட்டார். (இந்த "பசி சாரி பிசி மேனுக்கு" அசாம் போய் ஓட்டு போட நேரமில்லை, சோறு போடுறாங்கனு சொன்னவுடன் கஜகஸ்தான் போக மட்டும் நேரம் கெடைச்சிருச்சி)


தங்கபாலு இருக்குற கொலைவெறியில, எங்க அன்னை சோனியாவையும் நீக்கியிடுவாரோ அப்படினு அந்த அம்மாவும், தன் தவப்புதல்வருடன் தலைமறைவாகி விட்டார்.


எது எப்படியோ, தங்கபாலுவுக்கு எதிராக இளங்கோவன், யுவராஜ், எஸ்.வி.சேகர்.,கராத்தே தியாகராஜன் எல்லாம் ஒற்றுமையாகி விட்டார்கள். 


எனினும் இப்போதைக்கு தங்கபாலு முன்னிலையில் இருக்கிறார்.
இனி என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


டிஸ்கி:


தமிழ்நாடு காங்கிரஸ் என்பது குள்ளர்களின் சாம்ராஜ்யம். இந்தக் குள்ளர்கள் ஒரு போதும், தம்மை விட ஓர் அங்குலம் கூட உயரமானவர்களைக்கூட உடன் இருக்க விடுவதில்லை என்று தமிழருவி மணியன் எந்த வாய் முகூர்த்தத்தில்  சொன்னாரோ அது உடனடியாக நிரூபணமாகி விட்டது.


சமர்ப்பணம் : 


அதிக முறை கொடும்பாவி எரிக்கப்பட்ட ஒரே "தலை"வன் என்ற பெருமையை பெற்றுள்ள வெங்கல, தகர, தங்க பாலு அவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். (தேர்தல் முடிஞ்சாச்சு இனி அரசியல் பதிவு எழுத முடியாது என்று கையறு நிலை பாடிய பதிவர்களுக்கு வாழ்வு கொடுத்தவரல்லவா?) 10 கருத்துரைகள்:

MANO நாஞ்சில் மனோ said...

காங்கிரஸ்'காரன்தான் காறி துப்பினான்னா பதிவுலகமும் காறி துப்புது டகரபாலு'வை....

ராஜ நடராஜன் said...

வடை சூடா இல்லையே:)

அது யாரு அங்கே!நாஞ்சில் மனோவா?பதிவுலகம் கட்டம் கட்டி அடிச்ச மிச்சம்தான் காங்கிரசுக்கு:)

செங்கோவி said...

அட, பாவம் சார்..செத்த பாம்பை அடிச்சிக்கிட்டு இருக்கீங்களே..

யாதவன் said...

பிச்சு பிடல் எடுதிடின்க்க போங்க

சி.பி.செந்தில்குமார் said...

ஹி ஹி

கலாநேசன் said...

துப்பரகுதுக்குக் கூட போஸ்டர் அடிக்கராங்களா.....ஒளிமயமான எதிர்காலம் நம் உள்ளத்தில் தெரிகிறது.

கக்கு - மாணிக்கம் said...

நீண்ட வருடங்களாக தமிழ் நாட்டில் ஆட்சியில் இல்லாத போதே இந்த கதியில் இருக்கே, ஒரு வேலை ஆட்சியில் இருந்திருந்தால் என்ன கதியாகியிருக்கும்?
வலையில் எல்லோரும் அவரவர்களால் முடிந்த அளவுக்கு இந்த கூட்டத்தாரை பற்றி எழுதியாகிவிட்டது. அங்குதான் சூடு ,சொரணை என்ற நல்ல விஷயங்களை எல்லாம் டெல்லியில் மொத்தமாக காலடியில் போட்டுவிட்டுதானே சென்னை வந்தார்கள். எப்படியோ பதிவர்களுக்கு தீனி.

Jana said...

கை கெடுக்கும் கை!

! சிவகுமார் ! said...

//அசாம் போய் ஓட்டு போட நேரமில்லை, சோறு போடுறாங்கனு சொன்னவுடன் கஜகஸ்தான் போக மட்டும் நேரம் கெடைச்சிருச்சி//

டெய்லி ஒரு வெளிநாட்டு தலைவரோட கைகுலுக்கிகிட்டு போஸ் குடுக்கறதே வேலையா போச்சி இவருக்கு!

நிரூபன் said...

இந்த கொடுமை எல்லாம் பார்க்க முடியாமல் பிரதம் கஜகஸ்தான் போயிட்டாராம்.......

அவ்.......டங்கபாலு.....டங்குவாரு கிழிஞ்சிடுச்சு..

ஹி...ஹி...

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்