சித்திக்கு மீசை முளைத்தால், தங்கபாலு துணைமுதல்வர்...


எஸ்.வி.சேகருக்கும், தங்கபாலுவுக்கும் என்ன வித்தியாசம்:

எஸ்.வி.சேகர் (எம்.எல்.ஏ இன் சிட்டிங்) காமெடியனாக இருந்தாலும், நல்லாவே அரசியல் பண்ணுகிறார். 
தங்கபாலு (எம்.எல்.ஏ இன் வெயிட்டிங்)  அரசியல்வாதியாக இருந்தாலும், பயங்கரமா காமெடி பண்ணுகிறார்.
(இன்றைய அரசியலின் மில்லியன் டாலர் கேள்வி: மயிலாப்பூர் சிட்டிங் எம்.எல்.ஏ. வாக இருக்கும் எஸ்.வி.சேகர், தங்கபாலுவுக்கு ஓட்டுப்போடுவாரா?)


குற்றம் நடந்தது என்ன?


தனது வேட்புமனு வேட்புமனு நிராகரிக்கப்பட்ட ரகசியத்தை, திருமதி. ஜெயந்தி தங்கபாலு வெளியிட்டது  தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கணவனுடைய வேட்பு மனுவை மனைவியும், மனைவியின் மனுவை கணவனும் தான் பூர்த்தி செய்ய வேண்டும் என்று மனுதர்மத்தின் நான்காம் அத்தியாயத்தில் கூறியுள்ளதாக தங்கபாலு தன்னை நம்பவைத்ததால், 
தங்கபாலுவின் மனுவை தாம் நிரப்பியதாகவும், தன் மனுவை தங்கபாலுவும் நிரப்பியதாகவும், ஜெயந்தி அவர்கள் கூறியுள்ளார்.
(தங்கபாலுவை இனிமேல் மனுநீதிச்சோழன் என அழைக்கவேண்டுமென அவரே அரசாணை வெளியிடுள்ளார்)தங்கபாலு ஜோக்ஸ்:


ங்கபாலு (நிருபர்களிடம்): விஜயகாந்த் பிரச்சாரத்தை முறியடிப்பதற்காக நாளை முதல் பாகிஸ்தானை சேர்ந்த வாசிம்கானை களமிறக்க உள்ளோம். (எங்களுக்கும் அரசியல் சூது வாது தெரியும்)


ல்லா கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்டுவிட்ட நிலையில், மே 13 தேதிக்குள் வெளியிட தமிழக காங்கிரசின் தேர்தல் அறிக்கையை வெளியிட தங்கபாலு மும்முர நடவடிக்கையில் இறங்கியுள்ளார். (சீட்டு வாங்கிறதுல இருந்த பரபரப்பு இதுல இல்லையே?)


த்திய மூர்த்தி பவனில் நடைபெற்ற நள்ளிரவு ரகசிய பூஜையில், இரவு முழுவதும் கண்விழிக்க நேர்ந்ததாலேயே, சேலம் பொதுக்கூட்டத்தில் அவர் சற்று கண்ணயர்ந்ததாக உளவுத்துறை வட்டாரங்கள் தகவல்.
பிரேக்கிங் நியூஸ்:


மற்ற கட்சிகளின் மாநில தலைவர்கள் எல்லாம் சுழன்றாடி, தமிழ் நாடு 
முழுவதும் பயணம் செய்து கொண்டிருக்கையில் தனது, ஓய்வு இடைவெளியில் மட்டும்,  பிரச்சாரத்திற்கு தங்கபாலு வருவதாக, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மேலிடத்தில் போட்டுக்கொடுத்துள்ளதால், சோனியா தமிழம் வரும் போது "ஹெல்மட்" அணிய தங்கபாலு திட்டம். 
(கொட்டு வாங்கலையோ கொட்டு....)


ஒரு வேளை சித்திக்கு மீசை முளைத்தால்...
அதாவது ஒருவேளை காங்கிரஸ் 63 தொகுதிகளிலும் வென்றால்...


1) தங்கபாலு தன்னுடைய அரசியல் சாணக்கியத்தால் துணை முதல்வராகி விடுவார். (அதுக்காக தான் மயிலாப்பூர் மாஸ்டர் பிளான் எல்லாம்)


2) எந்திரன்-2 இல் தங்கபாலு ஹீரோவாக நடிப்பார். (பத்து கதாநாயகிகளுடன்)


3)அடுத்த உலக கோப்பையில், தோனியுடன் இணைந்து ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார் தங்கபாலு.


5) உங்கள் கருத்துக்காக காலியாக விடப்படுகிறது. (ஏதாச்சும் 
 நீங்களும் சொல்லலாம்)


சித்திக்கு மீசை முளைக்காவிட்டால்..


1)குறைந்த பட்சம் தன்னுடைய வீட்டிலாவது துணை முதல்வராக முயற்சிக்கலாம்.


2)தனது பொறியியல் கல்லூரியின் கேன்டீன் - ஆம்லேட்க்கு விளம்பரதூதுவராக மாறலாம்.


3)திமுகவின் கொ.ப.செ.வாக மாறிவிடலாம்.


4)காலியிடம் (உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது)உங்கள் ரசனைக்காக... அருள்மிகு கூகுள் ஆண்டவர் தந்தவைகள்:


18 கருத்துரைகள்:

# கவிதை வீதி # சௌந்தர் said...

கலக்கல்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

தளம் விச்சியாசமாவும் அழகாகவும் இருக்கிறது..
மாற்றங்கள் உங்களை மகிமைப்படுத்தும்..
வாழ்த்துக்கள்..

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

Nice.,

கக்கு - மாணிக்கம் said...

//.//சித்திக்கு மீசை முளைக்காவிட்டால்..///
///2)தனது பொறியியல் கல்லூரியின் கேன்டீன் - ஆம்லேட்க்கு விளம்பரதூதுவராக மாறலாம்.///


என்ன ஒரு கற்பனை வளமைய்யா? உண்மையில் ஒடம்பு புல்லரிச்சித்தான் போச்சி.:)))))

ஆளுகொரு ஆசை.

Speed Master said...

வந்தேன்


நாங்களும் கவிதை எழுதுவோம்

http://speedsays.blogspot.com/2011/04/blog-post_04.html

சசிகுமார் said...

கார்டூன்கள் கலக்கல் பாரதி.

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

:-) வாழ்த்துக்கள்!

MANO நாஞ்சில் மனோ said...

//ஒரு வேளை சித்திக்கு மீசை முளைத்தால்...
அதாவது ஒருவேளை காங்கிரஸ் 63 தொகுதிகளிலும் வென்றால்...//

தொங்கபாலு மொட்டையில் முடி முளைத்தால்....

விக்கி உலகம் said...

என்னே ஒரு தர்மபத்தினி.........
நாட்டுக்கு இப்படிப்பட்டவங்க தான் தேவை!

கொட்டு வாங்கலியோ கேட்டு ஹிஹி!

Jana said...

தங்கபாலுவை ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க.. நம்ம ஜெகதீஸ், டோன்டு போன்றவர்களுனுக்கு கடும் கோபம் வந்திடும் ஆமா....!

வைகை said...

புதிய மாற்றங்கள் நல்லாயிருக்கு!

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா செம

வைகை said...

/////சித்திக்கு மீசை முளைக்காவிட்டால்.////

தலைப்பு செய்தி - தங்கபாலு மனைவி புது துடைப்பம் வாங்கினார்! காரணம்....ஹி ஹி..அவசியம் சொல்லனுமா?

யாதவன் said...

அருமையான தொடக்கம்

startsystems said...

சிரிச்சு வாய்த்த வலிக்குதுப்பா

startsystems said...

சிரிச்சு வாய்த்த வலிக்குதுப்பா

www.kingraja.co.nr

இராஜராஜேஸ்வரி said...

அருள்மிகு கூகுள் ஆண்டர்வர் தந்தவைகள்: super!

யோவ் said...

தேர்தல் முடிகிறவைக்கும் கைபுள்ளையே சங்கத்தை கலைச்சா கூட நீங்க விட மாட்டிங்க போலிருக்கே! கலக்கல் பதிவு..

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்