ரஜினிகாந்த் & தமிழருவிமணியனுக்கு ஒரு பகிரங்க கடிதம்..
தமிழருவி மணியன் அவர்களுக்கு வணக்கம், வளர்க உங்கள் நலம்.


தமிழ்நாட்டில் வெள்ளைவேட்டி கட்டிக்கொண்டு எத்தனையோ பேர் திரிந்தாலும், அந்த வெண்மையை உடுத்தக்கூடிய அளவு கண்ணியம் உடைய மிகச்சிலரில் நீங்களும் ஒருவர்.


உங்கள் மனதில் வரித்துக்கொண்ட காமராஜரை போல, இன்னமும் மாசு படியாத மனிதராக எங்கள் முன்பு வலம் வருகிறீர்கள்.


ஈழத்தமிழர்களுக்காக மத்திய,மாநில அரசுக்கள் ஒன்றும் செய்யவில்லை என்பதற்காக, நீங்கள் இருந்த காங்கிரஸ் கட்சியை தூக்கி வீசிவிட்டு வந்தீர்கள். கலைஞர் தந்த திட்டக்குழு துணைத்தலைவர் பதவியையும் துறந்தீர்கள்.


இதற்க்கு பின்னர் நீங்கள் சந்தித்த எதிர்ப்புக்களும், வஞ்சமும் ஏராளம் இருக்கும் என்பதை எம்மால் உணர்ந்துக்கொள்ள முடிகிறது. தியாகம் நிறைந்த , தூய்மையான உங்கள் பொது வாழ்க்கை, உங்கள் மனதில் உள்ள காந்தியை நினைவூட்டுகிறது.


அய்யா, இப்போது தேசமெங்கும் ஊழலுக்கு எதிராக நல்லதொரு விழிப்புணர்வு உண்டாகியிருக்கிறது. கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் ஊழலை ஒழிப்போம் என்று ஒரு பேரலை பரவிவருகிறது. 


தூய்மைக்கு ஆதரவான தேசம் தழுவிய அனலை தாங்க முடியாமல் மத்திய அரசும் ,ஜன்லோக்பால் மசோதா கொண்டுவர ஒப்புதல் தந்து விட்டது. 


ஜன்லோக்பால் என்பது வெறும் ஆரம்பம் மட்டுமே, இதன் எழுச்சியை, தொடர்ச்சியை வழிநடத்த, இப்போது உள்ள சூழலை நீங்கள் கையில் எடுக்கலாமே. 


ஏற்கனவே நீங்கள் செல்லும் பாதை இதுதான் என்பதால், இதனை தொடர்தல் ஒன்றும் புதியதாய் இருக்காது என்பது 


தமிழ்நாட்டின் அன்னாஹசாரே-வாக மாற உங்களை அழைக்கிறோம். 
அதற்கான தகுதியும், கண்ணியமும் உங்களிடம் (மட்டும்) இருப்பதாகவே தோன்றுகிறது. உங்களுக்கு நாங்கள்  நிச்சயம் துணை நிற்போம்.


அன்புள்ள ரஜினிகாந்த் அவர்களே...


உங்கள் உழைப்புக்கு, ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்ககாசு தந்த எங்கள் தமிழ்மண்ணுக்கு மட்டுமில்லாது, ஒட்டு மொத்த இந்தியாவுக்கு சாதகம் செய்ய உங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.


1996இல் தமிழகத்தை ஆள உங்களுக்கு, தங்க தட்டில் வைத்து தமிழ்நாட்டு மக்கள் தந்த வாய்ப்பை தவ விட்டீர்கள்., அது உங்கள் விருப்பம்.


இன்னமும் இந்த மக்களுக்கு ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கும் என்று நம்புகிறோம்.


கடமையை மீற லஞ்சம் கொடுத்த காலம் மாறி, இப்போது கடமையை செய்வதற்கே லஞ்சம் கொடுக்க வேண்டிய அளவுக்கு, இந்த தேசத்தின் வேர் வரை, வேரடி மண் வரை அசுத்தம் பரவிவிட்டது. 


இது உங்களுக்கான நேரம். வந்து எம் மக்களுக்காக களம் இறங்குங்கள்.


அந்த அளவு நேர்மை என்னிடம் இல்லை, என்றெல்லாம் மனச்சாட்சி பேசாதீர்கள். உங்களின் எளிமை மட்டும் போதும் எங்களுக்கு. 


ஊழலுக்கான போராட்டத்திற்கு கூட, ஒரு வசீகர முகம் தேவைப்படுகிறது. அந்த முகம் உங்களுக்கு இருக்கிறது. 


திரையுலகில் இருப்பவர்கள் சொன்னால் கேட்கும் பழக்கம், எமக்கு தொட்டில் பழக்கமாய் வந்துவிட்டதால் தான் உங்களை அழைக்கிறோம்.


அன்னா ஹசாரேவுக்கு இந்தி திரையுலகம் திரண்டு வந்து ஆதரவு தந்தது போல, நீங்கள் வர தமிழ்திரையுலம் கட்டாயம் முகம் காட்டும். 
தமிழ்திரையுலம் வர, ஊடகங்கள் அடையாளம் காட்ட, தேசம் முழுவதும், ஏன் தேசம் தாண்டியும் இது சாமானியமக்களின் இயக்கமாய் விரியும்.


முன்பு ஒரு முறை நதிநீர் இணைப்பிற்காக குரல் கொடுத்தீர்கள், ஒரு கோடி முதல் ஆளாய் தருவதாய் சொன்னீர்கள், அது போன்று தான் இதுவும். நல்லதொரு சமுதாய பணி.


எதுவும் செய்யாமல் இருந்து வருத்தப்படுவதை விட, சின்னதொரு முயற்சி செய்து, அதற்காக வருத்தப்படுவது மேல். ஆதலால் மீண்டும் ஒரு முறை விரல்களை, கடவுளை நோக்கி காட்டாமல், ஊழலை நோக்கி நீட்டுங்கள். இல்லையென்றால் எம் மக்களை நீங்கள் வெறும் வியாபார பயனுக்காக மட்டுமே கவர்ந்திருப்பதாக சொல்லப்படுவது உண்மையாக தோன்றக்கூடும்.


தொழில், புகழ், பணம், இல்லம், மனைவி, குழந்தைகள், அவர்தம் குழந்தைகள் என எல்லா வகையிலும் நிறைவான வாழ்க்கை வாழும் நீங்கள், எங்கள் எதிர்கால வாழ்க்கைக்கும் கொஞ்சம் ஒளியூட்டலாமே.
இப்படிக்கு, 
இந்த தேசத்தின் தெருவோர மனிதன்.

33 கருத்துரைகள்:

அஞ்சா சிங்கம் said...

நல்ல கடிதம் இதை உண்மையாகவே இருவருக்கும் அனுப்பலாமே ..................

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வணக்கங்களும்,வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்..

தமிழ்வாசி - Prakash said...

களத்துல இறக்கி விடுங்க நம்ம தலைவர் ரஜினியை...

EZRA said...
This comment has been removed by the author.
நண்டு @நொரண்டு -ஈரோடு said...

முன்னவருக்கு எனது ஆதரவு

Thameez said...

Interesting!

கே.ஆர்.பி.செந்தில் said...

தமிழருவி மணியன் சரி..

ரஜினி???????

அந்நியன் 2 said...

நண்பர்களே.

தயவுசெய்து இந்த காவல்துறை அதிகாரி துவங்கி இருக்கும் இந்த தளத்தில் இணைந்து உங்கள் ஆதரவை தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

http://cpolicing.blogspot.com/2011/02/blog-post_10.html

யாதவன் said...

அனைவரும் வாசிக்க வேண்டிய கடிதம்

இளங்கோ said...

இருவரும் பின்பற்றினால் பெரியதொரு மாற்றம் வருமென நினைக்கிறேன்.

N.H.பிரசாத் said...

நல்ல கடிதம். ஆனால் இந்த மாதிரி கடிதங்களுக்கு ரஜினி செவி சாய்க்க மாட்டேன்கிறாரே?

இராஜராஜேஸ்வரி said...

ஜன்லோக்பால் என்பது வெறும் ஆரம்பம் மட்டுமே, இதன் எழுச்சியை, தொடர்ச்சியை வழிநடத்த, இப்போது உள்ள சூழலை நீங்கள் கையில் எடுக்கலாமே. //
நல்ல கடிதம்.

middleclassmadhavi said...

இருவருக்கும் கடிதத்தை அனுப்பி விட்டீர்களா?

ராஜ நடராஜன் said...

//எதுவும் செய்யாமல் இருந்து வருத்தப்படுவதை விட, சின்னதொரு முயற்சி செய்து, அதற்காக வருத்தப்படுவது மேல்.//

ரஜனிக்கு மட்டுமல்ல!எல்லோருக்கும் பொருந்தும் பொன்மொழி.

MANO நாஞ்சில் மனோ said...

நல்லா சூப்பரா யோசிச்சி எழுதி இருக்கீங்க....

MANO நாஞ்சில் மனோ said...

சூப்பர் சாய்ஸ் தமிழருவி மணியன் ஓகே ஆனால் ரஜினி அதுக்கு சரிபடுவாரா...???

MANO நாஞ்சில் மனோ said...

//ராஜ நடராஜன் said...
//எதுவும் செய்யாமல் இருந்து வருத்தப்படுவதை விட, சின்னதொரு முயற்சி செய்து, அதற்காக வருத்தப்படுவது மேல்.//

ரஜனிக்கு மட்டுமல்ல!எல்லோருக்கும் பொருந்தும் பொன்மொழி.//

கரெக்டா சொன்னீங்க மக்கா...

Anonymous said...

super idea!!!!!!!
subbu

chakra said...

I don't trust a person who is in Antonio Maino's party and accepting her as his leader.

We all know about selfish drunkard Rajini

chakra said...

I don't trust a person who is in Antonio Maino's party and accepting her as his leader.

We all know about selfish drunkard Rajini

Jana said...

மிகப்பொருத்தமான கடிதங்கள்.

கானகம் said...

Good..well written Letters.. You can forward these letters to respective personnel..

வந்தியத்தேவன் said...

தமிழருவி மணியன் சரியான தெரிவு
ஆனால் ரஜனி வரமாட்டார், அவருக்கு உண்மையாகவே தமிழக மக்கள் மேல் அன்பு இருக்குமானால் ஏன் கருணாநிதிக்கு ஜால்ரா அடிக்கின்றார்.

ஆனந்தி.. said...

தமிழருவி மணியன்...ஹ ஹ...நல்லா காமடி...சமீபத்தில் அவரின் பேட்டி யூ tube இல் பார்த்தேன்...அம்மா புராணம் பாடும் அவரை......:))) இப்போ கூட ஜெயா டிவி யில் ஐயா மணியன் அவர்களின் நேரலை பேட்டி...;))) மன்னிச்சுக்கோங்க பாரதி, மணியன் இப்போ நல்ல சாய்ஸ் அல்ல...:((
http://www.youtube.com/watch?v=Zj-RhVovBqs

Rajini sir...:))) No comments..;))

Jayadev Das said...

ஹிந்தி திரையுலகம் உள்ள இடத்தில் ஊழல் இருக்கலாம். ஆனால் தமிழகத்தில்தான் ஊழலே இல்லையே, அப்புறம் எப்படி தமிழ் சினிமாக் காரர்கள் போராடுவார்கள். அவர்கள் மாதத்துக்கு பத்து பாராட்டு விழாக்களை முதலமைச்சருக்கு எடுக்கிறார்களே, அப்போதே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், ஊழல் தமிழகத்துக்கு வெளியில் தான் உள்ளே இல்லை என்று அவர்கள் மனதார நம்புகிறார்கள் என்று. [ஹிந்தி காரனுங்க மாதிரி இங்க எதாச்சும் பண்ணிட்டு அடுத்த பாராட்டு விழாவுக்கு வந்து மூஞ்சியைக் காமிக்க முடியுமா? ஹா...ஹா...ஹா... நெருப்பையா...நெருப்பு.... எதுக்கு? ஊழலுக்கு நெருப்பாக நான் இருப்பேன்....அதாவது ஊழல் பண்றவனெல்லாம் வந்து குளிர் காய்ஞ்சுக்கலாம் ..ஹா...ஹா..ஹா...]

ponnusamy said...

naanum varukiren.

Anonymous said...

1 ok 2nd .....???????

நிரூபன் said...

இவர்கள் உள்ளங்களை உங்கள் கடிதம் தொட வேண்டும் எனும் நோக்கில் வார்த்தைகளைக் கோர்த்திருக்கிறீங்கள். நிச்சயமாக இந்தக் கடிதம் இவ் இருவரையும் சென்று சேர வேண்டும், பத்திரிகைக்காரங்க யாராவது இங்கே இருந்தால், இதற்கு ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Reggie J. said...

தமிழருவி மணியன் - I am sure he will consider.

ரஜினி - Why even try?

மிகவும் நல்ல பதிவு. Let's support Anna Hazare for a much needed cause indeed.

விக்கி உலகம் said...

இந்த விஷயத்துக்கு முதல் மனிதர் ஒத்து வருவார்.......ரெண்டாமவர் always having doubt!

ponnusamy said...

vandhal avarum ippadithan iruppar

Manion said...

போங்கடா முட்டா தமிழ் பசங்களா போய் அடுத்த படத்துக்கு பேனர் கட்டுங்கடா

A D said...

vetru mozhi nadiganai( rajani) C M aga parkka thudikuum tamilanai enna solla vetru mozhi nadigarkal meethu namaku irukkum mogam endru thaniyumo

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்