எல்லா தொகுதிகளிலும் தொடங்கியது பணமழை - மாறும் தேர்தல் முடிவுகள்..
தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் அமைய வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்புக்கள் வெளிவந்துள்ள நிலையில், மக்களின் மனதை இறுதியாய் ஒரு முறை குழப்ப, கட்சிகள் தயாராகி விட்டன.

கிட்டத்தட்ட வாழ்வா சாவா என்ற நிலையில் இரண்டு கூட்டணிகளும் இருப்பதால், வைட்டமின் "ப",  எல்லா தொகுதிகளிலும் முழுவீச்சில் பாயத்தொடங்கிவிட்டது. 


தேர்தல் கமிஷன், பறக்கும் படைகள் மூலம் கெடுபிடிகள் செய்வதால், கோடிகளில் பணப்பரிவர்த்தனை நடைபெறும் பெறும் போது சம்பந்தப்பட்டவரே, ஒருவரை அனுப்பி, ஒரு சில லட்சங்களோடு சென்று , தேர்தல் அலுவலர்களிடம் மாட்டிக்கொண்டு பரபரப்பை ஏற்படுத்துவார். அந்த சைக்கிள் கேப்பில் பல கோடிகள் கைமாறி விடும்.


இது வரை சிக்கியுள்ள பணம், கிட்டத்தட்ட ஐம்பது கோடியை தாண்டி விட்டது. இந்த இரண்டு நாளில் மிக அதிகமான பணம் வெளியே வரும்.


யார் வந்தாலும் நமக்கு நல்லது பண்ண போவது இல்லை, வந்த வரை லாபம் என்று கிடைக்கும் பணத்தை வாங்கிக்கொள்வோம் என்ற மனநிலைக்கு மக்களும் வந்து விட்டது தான் வருத்தம். 


எங்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை தேர்தல் கமின் தடுக்கிறது என்று அவர்கள் மீது கோபம் வேறு. (பணம் வாங்கிகொண்டு வாக்களித்தவர்கள் எப்படி அரசியல்வாதிகள் பணம் வாங்குவதை, ஊழல் செய்வதை குற்றம் சொல்லமுடியும்?) 

இன்று மாலையோடு தலைவர்களின் பிரச்சாரம் ஓய்கிறது, ஆனால் தொண்டர்களின் "வித்தைள்" இனிதான் ஆரம்பிக்க உள்ளன.


வழக்கமாய் வீடுவீடாக பூத் சிலிப் வழங்கும் போதுதான், பணப் பட்டுவாடா நடைப்பெறும். இந்த முறை பூத் சிலிப் நாங்களே தருகிறோம் என்று தேர்தல் கமிஷன் என்று சொன்னவுடன் கழகங்கள் அதிர்ச்சியடைந்து விட்டது. ஒரு வழியாக கட்சிகளும் தரலாம் என்று சொன்ன பின் தான் அப்பாடா என்று பெருமூச்சு விட்டனர். 


பூத் சிலிப் தருகிறேன் என்ற பெயரில் இப்போதே வீடு வீடாக பணம் கொடுக்கும் வேலையும் இப்போது தொடங்கிவிட்டது. முதல் கட்டமாக சொந்த கட்சியினருக்கு பணம் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். 


நாளை இரவுக்குள் வைட்டமின் "ப", எல்லா வீடுகளுக்கும் பாய்ச்சப்படும். இந்த நோட்டுக்கள் எல்லாம், ஓட்டுக்களாக மாறுமா என்பதை பொறுத்தே தேர்தல் முடிவுகள் இருக்கும் என்பது தான் தொண்டர்களின் நம்பிக்கை.


பணத்திற்கு அடுத்த படியாக கட்சிகள் நம்புவது தொலைக்காட்சி வழி பிரச்சாரத்தை தான். 


எந்த தொலைக்காட்சியை பார்த்தாலும், ஒரு சார்பாய் செய்திகளும், விளம்பரங்களும் இடைவெளிவிடாமல் போட்டுத்தாக்குகின்றன.(அளவுக்கு மீறினால் அதுவே எதிராக திரும்பி விடும் என்பதையும் மீறி, வரம்பு கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது விளம்பரங்கள்)


சன், கலைஞர், ஜெயா தொலைக்காட்சிகள் ஒரு பக்கம், "ஞாபகம் வருதே" என்று மக்களுக்கு துன்பத்தைக் கொடுக்க ஆரம்பித்து விட்டன. 


தொலைக்கட்சி விளம்பரங்கள், பணமழை உச்சக்கட்டத்தை எட்டியிருக்கும் வேளையில் மக்களும் மதி மயங்க ஆரம்பித்து இருக்கிறார்கள். 

பார்க்கலாம், ஜெயிப்பது யார் என்று?26 கருத்துரைகள்:

Speed Master said...

என்க்கு இன்னும் வரல

middleclassmadhavi said...

வணக்கங்களும்,வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்..

Anonymous said...

என்னுடைய அரசியல் பார்வை. அலசல் மூலம் சொல்கிறேன்.. தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள ஜெயலலிதா தவறிவிட்டார்.. எளிதில் வெற்றிக்கோட்டை தொட்டிருக்க வேண்டியவர் , தன் செயல்களாலேயே போட்டியை கடுமையாக்கி கொண்டு.. இன்றைய நிலையில்.. திமுகவிற்கு வழி விட்டு விட்டார் என்பதே நிதர்சனம்.. அவருக்கு கடந்த இரண்டு மாதத்தில் பக்கபலமாக நின்ற பத்திரிககள் பல ஓவர் கான்பிடன்ட் டோஸ் கொடுத்து விட்டது .. அதை தாமதமாகவே புரிந்துக்கொண்டு , இப்போது என்னனென்னமோ செய்து பார்கிறது.. ஆனால் டூ லேட்..
மற்றொரு முக்கிய காரணி , முகவின் பிரசார வியுகம் .. ஊடகத்தை பயன்படுத்திய முறை.. வடிவேலு முதல் லியோனி, நெப்போலியன், குஷ்பு வரை கடினமாக உழைத்தது ... கலைஞ்சரின் மேடை பேச்சு.. எங்குமே அம்மையாரை திட்டாமல், அர்ச்சிகாமல் .. பழைய தலைவர்களை நினைவு கூர்ந்து பேசியது மக்களை கவர்ந்துள்ளது.. ஸ்டாலின் சூறாவளி சுற்றுபயணனும் பெரிய பிளஸ்.

ஜெயா டிவியிலேயே வடிவேலுவையும், அவர் கலைஞரை "இவர் தான் தலைவர் " என்று சொன்னதை திரும்ப திரும்ப காண்பிக்க வைத்திருகிறது என்றால் வடிவேலின் பிரசாரம் பற்றி புரிந்துக்கொள்ளலாம் ..

மொத்தத்தில் பிரசார வியுகத்தில் திமுக பல்கலை கழகம் என்றால் அமரர் எம்ஜியார் உருவாக்கி வைத்த அதிமுக கோட்டை இன்னும் 6 ஆம் வக்குப்பு கூட தேறவில்லை..

என் கணிப்பு

திமுக - 128 - 148
அதிமுக - 85 - 105
மற்றவர்கள் - 1 - 3

பார்க்கலாம்

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

வணக்கங்களும்,வாழ்த்துக்களும் , வாக்குகளும்..

கக்கு - மாணிக்கம் said...

சரி, நீங்க ஓட்டு போடுவீங்களா?

MANO நாஞ்சில் மனோ said...

பொருத்திருந்து பார்ப்போம் மக்கா...

தமிழ்வாசி - Prakash said...

naan vaangitten kavar.

வைகை said...

பணம் வாங்கினாலும்.. இந்தமுறை வாங்கிய கட்சிக்கே போடுவார்கள் என்பது சந்தேகமே..!

தமிழ்வாசி - Prakash said...

naan vaangitten kavar.

சென்னை பித்தன் said...

பணநாயகம் வெல்லும்;ஜனநாயகம் தோற்கும்!

Raja=Theking said...

1. எங்கள் சாதனைகளை பார்த்து விட்டு ஒட்டு போடுங்கள் என மேடையில் சொல்லிவிட்டு வீடு வீடாக பணம் தரும் அரசியல்வாதிகளை என்ன செய்ய போகிறோம் ?

2. ஒட்டு பதிவு அன்று சம்பளத்துடன் விடுமுறை அளிக்க சொல்லி ஆணை , ஆனால் சரவணா ஸ்டோர் போன்ற பல நிறுவனங்கள் விடுமுறை அளிபதில்லை அவர்களை என்ன செய்ய போகிறோம் ?

3. வடிவேலு , குஷ்பு , சிங்கம் முது சொன்னால்தான் நாம் கேட்போம் என நினைக்கும் அறிவில்லாத அரசியல்வாதியை என்ன செய்ய போகிறோம் ?

4. இலவச கல்வி அளிக்க முடியாத அரசு மற்றவற்றை இலவசமாக தருகிறேன் என கூறி காதில் பூ சுற்றுகிறதே அதை என்ன செய்ய போகிறோம் ?

5. தமிழக மினவர்கள் காக்க படுவார்கள் என உறுதியளித்தனர் சோனியா , கருணாநிதி. இன்று ஒருவர் பலி . இப்பவும் நம்மை ஏமாற்றும் இவர்களை என்ன செய்ய போகிறோம் ?

6. மேற்கு வங்கத்தில் ௮௭ வயதானவர் ஏன் முதலமைச்சர் ஆகவேண்டும் என ராகுல் கேட்டார் , அப்பா கருணாநிதிக்கு
15 வயசா ஆகுது

7. வக்கனையா அரசியல் பேசிவிட்டு , அரசியல் பதிவு போட்டுவிட்டு ஒட்டு போடாமல் இருப்பவரை என்ன செய்ய போகிறோம் ?

தமிழ்வாசி - Prakash said...

naan kavar vaangittennu sonnathu intha month sallary'ya sonnen. hi...hi...hi....

இரவு வானம் said...

ம்ம்ம் பார்போம் என்ன நடக்கப்போகிறது என்று

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

வணக்கங்களும்,வாழ்த்துக்களும் பின்னே வாக்குகளும்..

sponsored by

பின்னூட்டம் இடுவோர் நலவாரியம்

ராஜ நடராஜன் said...

//
என் கணிப்பு

திமுக - 128 - 148
அதிமுக - 85 - 105
மற்றவர்கள் - 1 - 3 //

அனானி பெயரில் பதிவர் கொக்கரக்கோ என நினைக்கிறேன்.இப்பத்தான் உங்க கடைல வடை சாப்பிட்டு வந்தேன்.உங்களுடைய பின்னூட்டமாக இருந்தால் நேராகவே சொல்லலாமே!

கருணாநிதிக்கே இது தொங்குதான் என்று தெரிந்து விட்டது.அவரது கூட்டணி ஆட்சியில் தவறில்லை அறிக்கையே இதற்கு சான்று.

பாலா said...

மதுரையில் அதிகாலை நாலு மணிக்கு கதவுகள் தட்டப்படுகின்றதாம். திறந்து பார்த்தால் நியூஸ் பேப்பெரில் பணம் இருக்காம்.

ராஜேஷ், திருச்சி said...

அம்மா ஜெயிபாங்கனு இவ்ளோ நாள் கெத்தா இருந்தாங்க.. இப்போ தோல்வினு தெரிஞ்ச ஒடனே இப்படி பொலம்ப ஆரம்பிச்சிடாங்க ட..
எங்கே போனாங்க பிரபல ஜோசியகரங்க? அம்மா தானான்னு அடிச்சு சொன்னங்கலே.. ! வெய்ட் அண்ட் சி

ராஜேஷ், திருச்சி said...

//கருணாநிதிக்கே இது தொங்குதான் என்று தெரிந்து விட்டது.அவரது கூட்டணி //


Raja natarajan - heheheh. same blood?

amma dhan sweep nu karuththellam poteenga.. konjam sruthi koranja madhiri iruku ..

Sadhasivam, Karoor said...

raja natarajan sir, its me Anony who put that comment and not kokkarakko..
i put the same comment in his post too..

when he is very opening writing a post , then why should he comment as anony..

idhu kooda yosikka theiryala ungaluku.. aiyo aiyoo

சி.பி.செந்தில்குமார் said...

அம்மா வர்றதுக்கு வாய்ப்பு அதிகம்..

ஆகாயமனிதன்.. said...

அய்யா போறதுக்கான நேரம்தான்னு தோணுது !

sammil said...

வெயில் பட்டா கறுத்துடுவோம்ணு அந்த அம்மா குளு குளு கூண்டை விட்டு வெளியே வர மாட்டேங்குது..ஸ்டாலினும், கருணாநிதியும் கஷ்டபட்டு பிரச்சாரம் பண்ணுறாங்க..இந்த அம்மா ஹெலிகாப்டருல சுத்தி வந்து நோகாம நொங்கு தின்ன பாக்குது, விடுவோமா நாங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அதிமுக ஆட்சி அமைக்க அதிகம் வாய்ப்பு இருப்பதா தோணுது.....!

கே.ஆர்.பி.செந்தில் said...

உறுதியான தகவல்களின்படி பணபட்டுவாடா தி.மு.க கூட்டணி அதன் கட்சிகாரர்களுக்கு மட்டும் நூறு ரூபாயில் இருந்து ஐநூறு ரூபாய்( திருவாரூர்)வரை தங்கள் கட்சியின் உறுப்பினர்கள் மாறிவிடாமல் இருக்க கொடுத்து வருகிறார்கள். ஆனால் இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு அ.தி.மு.க கூட்டணிக்குதான்...

செங்கோவி said...

உண்மை தான், ஜெ. நல்ல வாய்ப்பைத் தவற விட்டுவிட்டாரோ என்று தோன்றுகிறது!

பலே பிரபு said...

யார் பணம் கொடுத்தாலும் எண் ஓட்டு நான் நினைப்பவர்க்கே.

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்