வேஷத்தலைவன் மன்மோகனுக்கு ஒரு "டெரர் கும்மி" வரவேற்பு...

எதை கேட்டாலும் தெரியாது என்று சொல்லகூடிய நம்முடைய பிர்ர்ர்தமர், யாரோ எழுதிக்கொடுக்கும் பிரச்சார வாசகங்களை வாசித்துவிட்டு போவதற்காக, ஏப்ரல் 9,  நம்ம கோவைக்கு வருகிறார். என்னதான் நமக்கும் அவருக்கும் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் அவரை வரவேற்பது தானே நம்ம பண்பாடு. அதற்காகவே இந்த சிறப்பு "கும்மி" வரவேற்பு நிகழ்ச்சி... 

இது தான் கொள்கை கூட்டணி...  

கிரிக்கெட் பார்க்கும் நேரத்தில், எள்ளளவு கூட எம் மீனவர்களை ஒதுக்க நேரமில்லாத பிஸிமேன் மன்மோகன் அவர்களே வருக...

யாருமில்லா தனியறையில் "நான் பிரதமர், நானே பிரதமர்" என்று சந்தோஷ கூச்சலிட்டபின், ஆனந்த கண்ணீரை துடைத்தவாறே, சத்தம் இல்லாது வெளியே வரும் மாவீரனே வருக...

எம் தமிழரின் ஆவேசக்குரல் கேட்கக்கூடாது என்பதற்காக தலைப்பாகையை இறுக்க கட்டிக்கொண்டு வரும் கோமானே வருக...

மடியில் கனத்தோடு, வழியில் பயத்தோடு, பாரளுமன்றம் நுழையும் தன்மான"சிங்"கே வருக....

ஒரு வேளை தங்கபாலு பேசிட்டு இருக்கிறதை பார்த்து, ஷாக் ஆய்ட்டாங்களோ?

ரத்தம் குடித்த ராஜபக்சேவின் வாய் துடைக்க, தமிழகத்து கோரிக்கை மனுவை நிருபமா ராவிடம் கொடுத்தனுப்பிய சிந்தனை சிற்பியே வருக.. சயனைடு குப்பியே வருக..

எந்த வகை மானஸ்தன் என்பதை கண்டறிய முடியா அண்ணலே வருக..

இந்தியாவிற்கு உலக அரங்கில் நோயாளி பட்டம் கிடைக்க காரணமாக இருந்த சீரியஸ் முகத்துக்காரரே வருக...

சிங்கள வலைகளில் நாங்கள் சிக்கி, கிழிந்த போது வராமல், இப்போது பெரியதாய் சாதித்து கிழித்த தோரணையோடு வரும் வள்ளலே வருக...

வாம்மா துரையம்மா... இது வங்க கரையம்மா...'

தீவுத்திடலில் சோனியா கத்திவிட்டு போன உரையை, ஜெராக்ஸ் எடுத்து, கோவையில் ஒப்பித்துவிட்டு போக வந்த காங்கிரஸ் வாந்தியே வருக...

பள்ளிக்குழந்தைகளுக்கு கூட தெரிந்த ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ், காமன்வெல்த் ஊழல்கள் பற்றி ஒன்றும் தெரியாது என்று சொன்ன கருத்தில்லா கந்தசாமியே வருக..

அரசியல் வியாபாரத்தில் ஈழத்தமிழர்களை, ஏலத்தில் ஒரு கோப்பை தேநீருக்காக விற்று விட்ட   பிரணாப் முகர்ஜி அவர்களின்  
அண்ணனே வருக..

இன்னுமா உன் ரத்த வெறி அடங்கவில்லை..

சோனியா கும்பலின் முகமூடியே வருக..

விட்டால் பின்னங்கால் பிடரில் அடிக்க ஓடி விடுவேன் என கண்ணீர் விட்ட கண்ணாளா வருக...

பீஹாரில் ஒற்றை இலக்கத்திற்கு காங்கிரஸை உயர்த்திய ராகுல் காந்தியின் விளையாட்டு பொருளே வருக...

எந்த வித உணர்ச்சி மாற்றமும் இல்லாத எந்திரன்- பார்ட் 2 வே வருக...
நீ கலக்கு சித்தப்பூ...

ஊழலை தன் தாடிக்குள் ஒளித்துக்கொண்ட தங்கமே வருக... சிங்கமே வருக...ஒண்டிப்புலியே வருக...

அடிக்கடி வெளிநாடு சென்று உள்ளூர் பிரச்சனைகளை தீர்க்கும் அப்பாவியே வருக..

கலைஞரின் கதை வசனத்தில், வீர உளறல் நிகழ்த்த வரும் ரப்பர் ஸ்டாம்பே வருக..

இழவு வீட்டில் வந்து வெட்கமில்லாமல் கையேந்தி, ஓட்டுப்பிச்சை கேட்டு நிற்கும் நவயுகநாய்கனே வருக...

காங்கிரசின் புதைக்குழிக்கு 
பால் ஊற்ற 
வந்த மண்ணுமோகனே வருக...

அகில இந்திய வருத்தமில்லா வாலிபர் சங்கத்தின் நிரந்தர தலைவராகிய "கை"ப்புள்ளையே வருக.

63 நாயன்மார்களுக்கு துறவற கோலம்  கொடுக்கவிருக்கும் தமிழக மக்களை தரிசிக்க வரும் "தொங்கமே" வருக...பித்தளையே வருக...

இந்தியாவின் தங்கபாலுவே வருக...

மன்மோகன் அவர்களுக்கு வரவேற்பு அளிக்க உங்கள் பங்களிப்பையும் எதிர்நோக்குகிறொம்..

**************************************************************************
முந்தைய பதிவு:

வந்த சோனியாவும், வராமல் போன சுனாமியும்.

**************************************************************************

உங்கள் ரசனைக்காக அருள்மிகு கூகுள் நாச்சியார் உடனுறை கூகுள் ஆண்டவர் தந்தது :

21 கருத்துரைகள்:

Unknown said...

வருக...வருக...

Prabu Krishna said...

இப்போது மட்டும்தான் இந்த நாய்களுக்கு தமிழனை தெரிகிறது போலும்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

வேஷத் தலைவருக்கு செம வரவேற்ப்பு போங்க...

எனது வலைப்பூவில்: கேப்டனையே ரீமிக்ஸ் செய்த கேப்டன் டிவி! வீடியோ!!

வைகை said...

ஆமா மன்மோகன் சிங்க்னா யாரு?..ஓ..சோபாவுல உக்காந்தாகூட டாய்லட் பவுல்ல உக்காந்த மாதிரியே உக்காந்திருப்பாரே அவரா?

சக்தி கல்வி மையம் said...

ஒரு வேண்டுகோள்...

இந்தத் தேர்தலில் நாம் காங்கிரஸைத் தோற்கடித்தால் மட்டுமே, காங்கிரஸின் தவறு இந்திய அளவில் எல்லொராலும் கவனிக்கப்படும். இல்லையெனில் காங்கிரஸ் செய்தது சரிதான் என்றே நாம் தீர்ப்பு அளித்ததாக ஆகும். தமிழினக் கொலையைக் கொண்டாடிய வட இந்திய ஊடகங்களும் அதை அங்கீகாரமாகவே எடுத்துக் கொள்ளும்.

காலமெல்லாம் நம் முதுகில் சவாரி செய்தே பிழைத்து வரும் காங்கிரஸ், தன் தகுதிக்கு மீறிய ஆட்டத்தை கடந்த ஐந்தாண்டுகளில் போட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தமிழர்கள், இனியும் காங்கிரஸைச் சுமக்க வேண்டுமா?

ஈழப்போரை நிறுத்தச் சொல்லி தெருவுக்கு வந்து போராடினோம். சட்டமன்றத்தில் எல்லாக்கட்சியினரும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பினோம். அதை மதித்ததா காங்கிரஸ்? அந்தத் தீர்மானம் ஒட்டுமொத்த தமிழர்களின் குரல். அதைக் குப்பைக்கூடையில் போட்ட காங்கிரஸ், இன்று வெட்கங்கெட்டு நம்முன் வாக்கு கேட்டு நிற்கிறது.

ஒரு இனத்தையே முள்வேலிக்குள் அடைத்தவர்களுக்கு, மனிதாபிமானமுள்ள நீங்கள் தரப்போகும் பதில் என்ன? உங்கள் கட்சி அபிமானத்தை இந்தத் தேர்தலில் ஒதுக்கி வைத்துவிட்டு, காங்கிரசைத் தோற்கடிக்க கை கொடுங்கள்.

உங்கள் உடலில் ஓடும் தமிழ் ரத்ததில் இன்னும் கொஞ்சமாவது இன உணர்வும் மனிதாபிமானமும் இருந்தால், காங்கிரசைத் தோற்கடிக்க உதவுங்கள். அதுவே ஈழப்போரில் உயிர்நீத்த 20,000க்கும் மேற்பட்ட ஈழச்சொந்தங்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!

Unknown said...

புதிய டெம்ப்ளேட், பதிவு இரண்டுமே பிரமாதம்..

செல்ல நாய்க்குட்டி மனசு said...

பதிவை கருப்பு சிவப்பில் போட்டதில் ஏதாவது உள்குத்து உண்டா? இல்ல ச்சும்மா கேட்டேன்

சி.பி.செந்தில்குமார் said...

பிளாக்ல ஒரு மாற்றம் தெரியுது.. இதே போல் மக்களிடம் மாற்றம் ஏற்பட்டால் நல்லது

சி.பி.செந்தில்குமார் said...

தமிழ்மணம் ஓட்டு விழலை.. எதிர்க்கட்சிகள் சதியா?

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஆஹா என்ன ஒரு அழகான வரவேற்பு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nice

செங்கோவி said...

தொடர்ந்து இந்த நாசகார காங்கிரசுக்கு எதிராக நீங்கள் பதிவிடுவதில் மகிழ்ச்சி.பாராட்டுகள்!..காங்கிரஸை ஒழிப்போம்!

Athiban said...

உங்கள் அரசியல் பதிவுகள் பிரமாதம்.

http://tn-tourguide.blogspot.com/2011/04/kodaikanal.html

இராஜராஜேஸ்வரி said...

வரவேற்புரைக்கு வாழ்த்துக்கள்.

middleclassmadhavi said...

பொம்மைக்கு கும்மி புரியுமா?!!

மாலதி said...

இப்போது மட்டும்தான் இந்த நாய்களுக்கு தமிழனை தெரிகிறது போலும்.

மாலதி said...

இந்தத் தேர்தலில் நாம் காங்கிரஸைத் தோற்கடித்தால் மட்டுமே, காங்கிரஸின் தவறு இந்திய அளவில் எல்லொராலும் கவனிக்கப்படும். இல்லையெனில் காங்கிரஸ் செய்தது சரிதான் என்றே நாம் தீர்ப்பு அளித்ததாக ஆகும். தமிழினக் கொலையைக் கொண்டாடிய வட இந்திய ஊடகங்களும் அதை அங்கீகாரமாகவே எடுத்துக் கொள்ளும்.

காலமெல்லாம் நம் முதுகில் சவாரி செய்தே பிழைத்து வரும் காங்கிரஸ், தன் தகுதிக்கு மீறிய ஆட்டத்தை கடந்த ஐந்தாண்டுகளில் போட்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தமிழர்கள், இனியும் காங்கிரஸைச் சுமக்க வேண்டுமா?

ஈழப்போரை நிறுத்தச் சொல்லி தெருவுக்கு வந்து போராடினோம். சட்டமன்றத்தில் எல்லாக்கட்சியினரும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றி டெல்லிக்கு அனுப்பினோம். அதை மதித்ததா காங்கிரஸ்? அந்தத் தீர்மானம் ஒட்டுமொத்த தமிழர்களின் குரல். அதைக் குப்பைக்கூடையில் போட்ட காங்கிரஸ், இன்று வெட்கங்கெட்டு நம்முன் வாக்கு கேட்டு நிற்கிறது.

ஒரு இனத்தையே முள்வேலிக்குள் அடைத்தவர்களுக்கு, மனிதாபிமானமுள்ள நீங்கள் தரப்போகும் பதில் என்ன? உங்கள் கட்சி அபிமானத்தை இந்தத் தேர்தலில் ஒதுக்கி வைத்துவிட்டு, காங்கிரசைத் தோற்கடிக்க கை கொடுங்கள்.

உங்கள் உடலில் ஓடும் தமிழ் ரத்ததில் இன்னும் கொஞ்சமாவது இன உணர்வும் மனிதாபிமானமும் இருந்தால், காங்கிரசைத் தோற்கடிக்க உதவுங்கள். அதுவே ஈழப்போரில் உயிர்நீத்த 20,000க்கும் மேற்பட்ட ஈழச்சொந்தங்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி!naanum

MANO நாஞ்சில் மனோ said...

//ஊழலை தன் தாடிக்குள் ஒளித்துக்கொண்ட தங்கமே வருக... சிங்கமே வருக...ஒண்டிப்புலியே வருக...//

ஹா ஹா ஹா செமையான வரவேற்ப்பு.....
மண்ணாங்கட்டி சிங்....

Jana said...

ம்.....(இது வெறும் பெருமூச்சு மட்டுமல்ல)

சசிகுமார் said...

இது போல பாராட்டை அவர் பார்த்திருக்கவே முடியாது. கார்டூன்கள் மிக அருமை

பாண்டியன் said...

நல்ல பதிவு, தொடருங்கள்.

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்