முஸ்கி: தலைப்பை மட்டும் பார்த்துட்டு, மைனஸ் ஓட்டு போட்டு தாக்கீறாதீங்க மக்களே..
"எனக்கு மட்டும் ஏன் சார் இப்படியெல்லாம் நடக்குது" இந்த மாதிரி சிலபேரு அடிக்கடி பொலம்பறதை பாத்திருக்கேன், ஆனா நானே இப்ப அந்த மாதிரி பொலம்பற மாதிரி நடந்திருச்சு...
ஒரு வழியா நம்ம தோனியின் படைக்கு, உலகக்கோப்பை ஜெயிக்க பசி, தூக்கம் மறந்து, பாடுபட்டு வெற்றிகரமா நாட்டை ஜெயிக்க வைச்ச திருப்தியோடு, அடுத்த கடமையா நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ்-ஐ
ஜெயிக்க வைக்க தயாராகின நிலையில...
இந்த கேப்புல, அன்னா ஹசாரா திடுதிப்பு உண்ணாவிரதம் இருக்க ஆரம்பிச்சுட்டாரு....ஊழலை ஒழிக்க வேண்டும் என்று ஊர் முழுக்க, பஞ்ச் பேசிக்கொண்டு திரிந்ததால், ஊழலில் இருந்து நாட்டை மீட்க மக்களை சேர்க்க போராடும் அவரின் போராட்டமும் முக்கியமானதாகவே பட்டது.
ஆனாலும் பாண்டிய மன்னனின் நிலைமை போல ஒரு பெருத்த குழப்பமே மிஞ்சியது. ஊழலுக்கு ஆதரவா இருக்கிறது, லலித்மோடி இல்லாத நிலைமையில் நம்மளை மட்டுமே நம்பியிருக்கும் ஐ.பி.எல்.க்கு ஆதரவா இருக்கிறதா என்பதில் கொஞ்ச நேரம் தொங்கு சட்டமன்றமாய், ஊசலாடினேன்.
அப்புறம் தோனி டாஸ் ஜெயித்ததால் பிறகு அன்னா ஹசாரா தோற்றுப்போனார், நல்லவேளை மேட்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் த்ரிலாக ஜெயித்ததில், மனச்சாட்சி அடங்கிப்போனது.
இப்போது மீண்டும் மனச்சாட்சி தூக்கம் கலைந்து கண்விழித்து விட்டது.
ஏழாம் வகுப்பு படிக்கும் மாஹாராஷ்டிரா மாணவன் கூட பொங்கியெழ இப்படி ஆகி விட்டதே ஒரு வீரத்தமிழனின் நிலைமை. ஏற்கனவே எந்திரன் பார்க்கும் மும்முரத்தில் ஈழத்தமிழர்களை கைவிட்ட வரலாற்று கவலை வேறு முள்ளாய் உறுத்துகிறது.
ஜெயிலில் இருக்கும் ராசா தவிர அனைவரும் அவருக்கு ஆதரவு சொல்லியிருக்கும் நிலையில், எதற்காய் அந்த மனிதரை கண்டு இத்தனை பெரிய அரசாங்கம் பயப்படுகிறது, கேள்விகள் தொடர, தொடங்கியது ஒரு சாமானியனின் தேடல். தேடலில் சிக்கிய விஷயங்கள் இங்கே உங்களுடன்...
எதற்க்காக போராடுகிறார் அன்னா ஹசாரே:
நாட்டில் பெருகி விட்ட ஊழலை எல்லோரையும் விசாரிக்க முடியாத சூழலில் இன்றைய சூழலை மாற்றி, தேர்தல் கமிசன் போல சுயேச்சையானதொரு அமைப்பாக ஜன்லோக்பால் என்பதை உருவாக்கி, அதன் மூலம் எந்தவொரு ஊழல் புகாரையும் விசாரிக்க வேண்டும் என்பது தான் அன்னா ஹசாரேவின் பின் நிற்கும் ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பின் விருப்பம்.
ஜன்லோக்பால் மசோதா அதிகாரம் அளிக்கும் அமைப்பு, அரசியல் தலைவர்களை மாத்திரமல்லாமல் அரசு உயரதிகாரிகளையும் விசாரிக்கும் உரிமையோடு இருக்க வேண்டும்.
ஜன்லோக்பால் அமைப்பு,பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை ஏற்று விசாரித்தல், ஊழல் புகார்களின் பேரில் முதல் தகவல் அறிக்கை (FIR) தாக்கல் செய்தல். ஊழல் புகார்களை சுயேச்சையாய் விசாரித்தல் ஆகியவற்றை செய்யும்.
அன்னா ஹசாரே போராட்டத்தின் பிளஸ் பாயிண்டுகள் :
மாவோயிஸ்டுகள் போல் அல்லாமல் அகிம்சை வழியில், உண்ணாவிரதம் மூலம் மக்களை இணைக்க முயற்சி செய்தது.
எகிப்து, லிபியா புரட்சி போல, இந்தியாவிலும் ஒரு மக்கள் புரட்சி ஏற்படுத்த துவக்கமாய் இருந்தது.
சாதி, மதம் தாண்டி மக்களை சத்தியாகிரகம் மூலம் இணைக்க முடியும் என்பதை நிரூபித்துக்காட்டியது. அவர் மூலம் ஊழலுக்கு எதிராக நாடு முழுவதும் பேரலை கிளம்பியுள்ளது பாராட்டிற்குரியது.
"எனக்கு வங்கியில் பணம் ஏதும் கிடையாது. நான் பக்கத்தில் வைத்திருக்கும் ஜோல்னா பையில், ஏதாவது ஐந்து அல்லது 10 ரூபாயை போடச் சொல்லி மக்களிடம் கேட்பேன். அது தான் என் செலவுக்கு பணம்" என்று சொல்லும் அன்னாவின் நேர்மை.
ஊடகங்களின் பார்வையை ஈர்த்து, அதன் மூலம் தன் செய்தியை பிரதமர் முதல் சாமானியரகள் வரை கொண்டு சென்றது.
அரசியல் என்பது சாக்கடை என்று வெறுமனே சொல்லிக்கொள்ளாமல், அதனை சுத்தம் செய்ய, முன்முயற்சியாக களம் இறங்கியது.
காங்கிரஸ் அல்லது பா.ஜ.,வுடன் எனக்கு என்ன வேலை? அவர்கள் இந்த நாட்டுக்கு அதிகம் பணியாற்றியதாக கூறினால், ஏன் நாட்டில் இன்று இவ்வளவு பிரச்னை? என்று அன்னா எழுப்பும் நியாயமான கேள்வி.
"லோக்பால் மசோதா தயாரிக்கும் குழுவில் அரசு தரப்பில் 50 சதவீதம் பேர் இருந்தால், பொதுமக்கள் பிரதிநிதிகளாக 50 சதவீதம் பேர் இருக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருப்பதால், உயர்மட்டத்திலிருந்து ஊழல் பெருச்சாளிகளை அப்புறப்படுத்த கிடைக்கும் வாய்ப்பு.
அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு எதிராக வைக்கப்படும் கருத்துக்கள்:
மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராகவே, ஊழல் புகாரில் சிக்கிய பி.ஜே. தாமஸ் போல இன்னும் ஒரு ஊழல்வாதி, ஜன்லோக்பால் அமைப்பிலும் ஊடுருவி விடமாட்டர் என்பது என்ன நிச்சயம்.
ஐரோம் சர்மிளும், மேத பட்கரும், ஹிமாச்சு குமாரும் பெறாத ஊடகங்களின் ஈர்ப்பை, அன்னா ஹசாரே பெற்றியிருப்பது சிலருக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.
லலித் மோடி போன்ற ஊழல்வாதிகள் கூட போராட்டத்திற்கு ஆதரவு தருகிறேன் என்று பில்டப் கொடுத்து,. போராட்டத்தை நீர்த்துப்போக செய்திருப்பது.
ஒரு வேளை உலகக்கோப்பை நடக்கும் நேரத்தில், அன்னா களமிறங்கினால், இப்படி ஒரு ஆதரவு வழங்கியிருப்பார்களா நம் மக்கள்? இப்போதும் கூட அவரின் போராட்டம் தொடர்ந்திருந்தால் ஐ.பி.எல். தாண்டி மக்கள் வந்திருப்பார்களா என்பது விவாதத்திற்குரிய விஷயமே.
11 கருத்துரைகள்:
நடுநிலைப்பதிவு..
இன்னும் கொஞ்சம் படித்து விட்டு வருகிறேன்..
மறதி.. இந்திய ஜனநாயகத்தின் பரம்பரை வியாதி...
ஒரு விஷயம் பற்றி பரபரப்பாக பேசுவோம்..
அடுத்தது வந்தால் இதை மறப்போம்..
நாட்டில் அஹிம்சை இறந்துப் போக வில்லை என்று காட்டியிருக்கிறார் அன்னா அவர்கள்..
காங்கிரஸ் இதை மூடி மறைக்ககண்டிப்பாக பாடுபடும்...
மக்கள் அனைவரும் கிரிக்கெட் மட்டும் இல்லாமல் இது போன்ற வற்றிற்கும் மக்கள் ஒன்றிணைய வேண்டும்..
ஏழாம் வகுப்பு படிக்கும் மாஹாராஷ்டிரா மாணவன் கூட பொங்கியெழ இப்படி ஆகி விட்டதே ஒரு வீரத்தமிழனின் நிலைமை//
வருத்தப்பட வேண்டிய நிலைமை.
உமக்கு விசில் ஊத வேண்டும்...
ஹஸாரேவுக்கு ஊம்மா... கொடுக்கவேண்டும்
@vikatan
ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா: மக்கள் எழுச்சிக்கு பணிந்தது அரசு... உண்ணாவிரதத்தை கைவிட்டார் அன்னா ஹசாரே! http://bit.ly/i2GFR0
@naiyandi
அரசியல்வாதிகளே! மக்கள் விளக்குகளை ஏந்தும் போதே இறங்கி வாருங்கள்; இல்லையெனில் விளக்குமாறு ஏந்தி வரவேண்டியிருக்கும்.
@vedhalam
அன்று அண்ணல் காந்தி போராடினார் 'வெள்ளையனே வெளியேறு'என்று நாட்டுக்காக இன்று அன்னா ஹசாரே போராடுகிறார் 'கொள்ளையனே வெளியேறு'என்று மக்களுக்காக
@rparthiepan இரவிலே வாங்கியதால் இன்னும் விடியாமலே இருந்த நமது சுதந்திரம், இன்று காலை கொஞ்சமாய் வெளிச்சம் கண்டது அண்ணா ஹஸாரே மூலம்!
@rparthiepan
நேற்று தமிழ்நாடு கொண்டது ஒரு அண்ணா, இன்று இந்திய கொண்டாடுது ஒரு அண்ணா, பத்தாது 121 கோடிக்கு! நாளை, நீங்களும் நானுமே மாறுவோம் அண்ணா'வாக!
@minimeens
ஆளாளுக்கு போராட கிளம்பிட்டா என்னாவறது -ஹசாரே பிரச்னையில் காங் கேள்வி # ஊழல் டூட்டிய பாக்க விடமாட்டேங்கறாங்க யுவர் ஆனர்
@ kathirerode
ஊழல்தடுப்புக்கு- உண்ணாவிரதம் மூலம் ஜனநாயகம்- #Annahazare-க்கு மன்மோகன் வாழ்த்து # சார் இதுதான் உங்க டக்கா!? 100மணி நேரம் பட்டினி போட்டு!
@arasu1691
ஊழலை ஒழிக்க அமைக்கப்படும் குழுவில் காங்கிரஸ் அமைச்சர்கள் இடம்பெறுவது வீட்டுச்சாவியை திருடன் கையில் தந்துவிட்டு வெளியூர் செல்வதைப்போன்றது
@zoogleton
இளைஞர்கள் கிரிக்கெட் பார்க்க மட்டும்தான் லாயக்கு என இனி ஒரு பயலும் சொல்லமுடியாது.#annahazare போராட்டத்துக்கு இளைஞர்கள் ஆதரவு
@selvu
ஸ்வீட் எடு கொண்டாடு. போன வாரம் சனிக்கிழமை உலகக்கோப்பை. இந்த வாரம் சனிக்கிழமை லோக்பால் சட்டம் # #Annahazare. Go India Go.
@minimeens
கலாம் ஏன் அன்னாவின் உண்ணாவிரதத்துக்கு சப்போர்ட் பண்ணல #இது எங்க போயி முடியும்னு அவருக்கு தெரியும். பழக்கம் இருக்குல்ல.!
@njganesh
அன்னா ஹசாரே புதுசு.. அதான் 4 நாள் உண்ணாவிரதம் இருக்காரு. தமிழ்நாட்டுல ஒருத்தரு 4 மணி இருந்துட்டு வெற்றினு சாப்பிட போயிடுவாரு.
@athisha
ஐபிஎல் தொடங்கிவிட்டதால் அந்த நேரத்தில் அன்னாவின் உண்ணாவிரதம் நாட்டின் நலனுக்கு பங்கம் விளைவிக்கும் என கருதி அரசு பணிந்தது! #fakingnews
பாராட்டுக்கள்..
அட்டகாசமாக விவரித்து சொல்லி இருக்குறீர்கள் சூப்பர் வாழ்த்துகள்..
உண்மை உண்மை
நேற்றும் ஒரு முறை தோனி.. விசிலடிக்க வச்சிட்டாரே....
மனசாட்சிப்படி பதிவிட்டு இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்!
Post a Comment