தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!




பணப்புழக்கம் அதிகமாக இருந்த இந்த தேர்தலில் கிட்டத்தட்ட 40 கோடிக்கும் அதிகமான பணமும், தங்க, வெள்ளி நகைளும் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.


அட.. வடை போச்சே அப்படினு தான் சொல்லத்தோணுகிறது. இது நமக்கு வர வேண்டிய பணம் என சாமானிய வாக்காளர்களை நினைக்க வைத்ததுதான் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் வெற்றி. வாக்காளர்கள் யோக்கியமாக இருந்தால் தான், ஊழலை தட்டிக்கேட்பார்கள் என்பதால் அரசியல்வாதிகள் அவர்களின் வியாதியை நமக்கும் பரப்புகிறார்கள் போல.(எல்லோரும் தப்பு செய்தவர்கள் என்றால் யார் யாரை கேள்வி கேட்க முடியும்?)


ஒரு கருத்து கணிப்பின் படி கடந்த தேர்தலில், 48 சதவீதம் பேர் பணம் பெற்றுக்கொண்டு வாக்களித்ததாகவும், 31.5 சதவீதம் பேர் பணம் வாங்கிக்கொண்டு தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களுக்கு வாக்களித்ததாக ஒப்புதல் அளித்து உள்ளனர்.    


ஓட்டுக்கு பணம் என்பது தமிழ்நாட்டை பொறுத்தவரை இனி நிரந்தரமாகி விடுமோ என்று தோணுகிறது. திருமங்கலம் பார்முலா, இப்போது தமிழ்நாடு பார்முலாவாக மாறிவிட்டது. இனி இது விரைவில் இந்திய பார்முலாவாக மாறிவிடும் போல.


இலவசங்களை தருகிறேன் என்று சொல்லி தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன்கார மாநிலமாக மாற்றிவிட்டார்கள் என்று கருணாநிதியை குற்றம் சாட்டுகிறார்கள். குற்றச்சாட்டும் நியாயமாகவே தெரிகிறது. ஆனால் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த கடன் தொகை இன்னும் அதிகம் தானே ஆகும்?


கருணாநிதி, ஜெயலலிதா இருவருமே ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக்கொண்டு இலவசங்களை அறிவித்துள்ளதால், அதை நிறைவேற்ற வேண்டிய அவசியம் இருக்கிறது. எனவே யார் வந்தாலும் கடன் இன்னும் இருமடங்காக போகிறது. இப்படியே போனால் விலைவாசி உயராமல் என்ன செய்யும்?


சமீபத்தில் நடந்த குஜராத்,தேர்தலில், இலவச மின்சாரம், வண்ணத்தொலைக்காட்சி தருவதாக என குஜராத் காங்கிரஸ் அறிவித்தது, ஆனால் குஜராத் மக்கள் காங்கிரசுக்கு வாக்களிக்க வில்லை. 


பீஹார் தேர்தலில், லாலு ஏராளமான கவர்ச்சித்திட்டங்களை அறிவித்தார். ஆனால் லாலு தோற்கடிக்கப்பட்டார். 


குஜராத், பிஹார் மக்கள் இலவசங்களை எதிர்பார்த்து வாக்களிக்காமல், வளர்ச்சிக்கு வாக்களித்தார்கள். அந்த மக்கள் தன்மானம் மிக்கவர்கள், அவர்கள் இலவசங்களை வாங்கும் பிச்சைக்காரர்களாக மாறவில்லை என ஒரு பத்திரிக்கை கட்டுரையில் படித்தேன். அப்படியெனில் தமிழ்நாட்டு மக்கள் தான் இலவசங்களை நம்பும் ஏமாளிகளா?


குஜராத் என்றாலே நமக்கு மோடியின் முகம் தான் ஞாபகம் வந்து எரிச்சலூட்டுகிறது, உண்மையிலே குஜராத் மாநிலம் போற்றுதலுக்கு உரியதா? 


டாஸ்மார்க் வருமானம் இல்லாமலே, கடனில் இருந்த குஜராத்தை, ஒரு லட்சம் கோடி உபரி நிதியிலுள்ள மாநிலமாக மாற்ற முடியுமென்றால், தமிழக அரசின் மற்ற வருமானமும், அதிக அளவில் கிடைக்கும் டாஸ்மார்க் வருவாய் முழுவதும் இலவசங்களுக்கு போகிறது என்று தானே அர்த்தம்?


குஜராத், பிஹார் தேர்தலில் இலவசங்கள் தோற்றது எனில் தமிழகத்தில் இலவசங்களை அறிவித்திருக்கும் இருரில் யார் ஜெயித்தாலும், மக்கள் தோற்றதாகத்தானே அர்த்தம்?


ஓட்டுக்கு பணம், இலவசத்திட்டங்கள் இந்த இரண்டும் இருக்கும் வரை நூறு அண்னா ஹசாரேக்கள் வந்தாலும் ஏன் அந்த ஆண்டவன் வந்தாலும் ஊழலில் இருந்து தமிழ்நாட்டை காப்பற்ற முடியாது.





இதையும் கொஞ்சம் பாருங்க...








21 கருத்துரைகள்:

rajamelaiyur said...

Very true friend

rajamelaiyur said...

Free makes worry

சென்னை பித்தன் said...

//ஓட்டுக்கு பணம், இலவசத்திட்டங்கள் இந்த இரண்டும் இருக்கும் வரை நூறு அண்னா ஹசாரேக்கள் வந்தாலும் ஏன் அந்த ஆண்டவன் வந்தாலும் ஊழலில் இருந்து தமிழ்நாட்டை காப்பற்ற முடியாது.//

ஏன் நம் மக்கள் மட்டும் இப்படி?

செங்கோவி said...

யோசித்தால் கேவலமாக இருக்கிறது..

MANO நாஞ்சில் மனோ said...

//ஒரு கருத்து கணிப்பின் படி கடந்த தேர்தலில், 48 சதவீதம் பேர் பணம் பெற்றுக்கொண்டு வாக்களித்ததாகவும், 31.5 சதவீதம் பேர் பணம் வாங்கிக்கொண்டு தங்களுக்கு விருப்பமான வேட்பாளர்களுக்கு வாக்களித்ததாக ஒப்புதல் அளித்து உள்ளனர். //

ம்ஹும் என்னத்தை சொல்ல மக்கா...

MANO நாஞ்சில் மனோ said...

முதல்ல நாம திருந்தனும், அவனுகளை திருத்த...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அசத்தல் தொகுப்பு....

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அரசியல்ன்னவே இப்பலலாம் கொமட்டுதுங்க...
அப்படியிருக்கிறது.. என்ன செய்ய..

குடந்தை அன்புமணி said...

இந்த அநியாயத்தையெல்லாம் கேட்க யாருமே இல்லையா... இப்படி புலம்பத்தான் முடிகிறது. என்ன செய்ய மூன்றாவது அணி என்று திடமாக உருவாகத வரையில் இரண்டு அணிகளுக்கும் மாற்றி மாற்றிப் போட்டு போட்டு.... ச்சை...

சக்தி கல்வி மையம் said...

என்ன சொல்ல? அரசியல்னா ச்சேன்னு ஆயிவுச்சி..

tommoy said...

நிச்சயம் திமுக வெற்றி பெரும்.. யாரும் கவனிக்காத ஒரு விஷயம் இருக்கிறது இந்த தேர்தலில்..

உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் 1996 முதல் 2001 வரை கலைஞர் ஆட்சி மிக நன்றாக இருந்தது.. ஊழல் என்று எதுவும் இல்லை.. உள்கட்டமைப்பு அருமையாக இருந்தது.. பாலங்கள், கிராமத்தில் சிமென்ட் சாலை, தொழில் சாலைகள், சிங்கார சென்னை .. நல்லதொரு நிர்வாகம் என்று நல்ல ஆட்சியை கொடுத்தார். அந்த ஆட்சியில் தான் சென்னையில் டைடெல் பார்க் வந்தது.. OMR சாலை முழுவது கணினி அலுவலகங்கள்.. வேலை வாய்ப்பு என்று பல நல்ல விஷயங்கள் நடந்தது..

அந்த தைரியத்தில் தான் 2001 தேர்தலில் கூட்டணி அமைப்பதில் கோட்டை விட்டார்.. அம்மா பெரிய கூட்டணி அமைத்தார்.. வைகோவை அம்மா பக்கமே தள்ளி விட்டார்.. நல்ல நிர்வாகம் செய்ததும்.. பொற்கால ஆட்சி என்ற விளம்பரமும் தன்னை சுலபமாக வெற்றி பெற வைக்கும் என்று சற்று ஓவர் கான்பிடென்ட்ல் இருந்தார்.. முடிவுகள் பார்த்ததும் திமுக அதிர்ச்சியடைந்தது.. அப்போதுதான் இரண்டு விஷயங்கள் புரிந்தது..

1. கூட்டணி பலம் கொஞ்சம் இருக்க வேண்டும்..
2. என்னதான் நல்ல நிர்வாகம் கொடுத்தாலும் - உள்கட்டமைப்பு, சாலைகள், வேலை வாய்ப்பு, பாலம் எல்லாம் செய்தாலும் (மீன் பிடிக்க கற்று கொடுத்தல்) , மக்களை நேரடியாக சென்றடைவது
போல எதாவது செய்தால் மட்டுமே (மீனையே நேரடியாக சமைத்து கொடுத்தல்) வேலைக்காகது - (இது தான் mgr formula ... இலவச வேட்டி சேலை.. இலவச சத்துணவு.. இலவச தையல் எந்திரம்..)
நேரடியாக எனக்கு கிடைத்தது என்ன என்பது தான் வாக்களிக்கும் மக்களின் கேள்வி.. சிமெண்ட் ரோடு போட்ட , என் வயிறுக்கு சோறு போட்டியா ??? பாலம் சரி , எனக்கு நேரடியா என்ன பண்ண என்ற மக்களின் மனநிலை..

tommoy said...

2001 தோல்விக்கு பின் கலைஞருக்கு பிடிபட்ட இந்த இரண்டு விஷயங்கள் தான் 2006 ல் அவர் அமைத்த கூட்டணி , மற்றும் கதாநாயகனான தேர்தல் அறிக்கை.. அது நன்றாக வேலை செய்தது..

இரு வேடம் அணிய ஆரம்பித்தார் - நிர்வாகத்தில் கருணாநிதி, மக்களை நேரடியாக குளிரவைப்பதில் எம் ஜி ஆர் .. அது 2006 - 2011 ஆட்சியில் நன்றாக தெரிந்தது

2011 தேர்தலில் கூட்டணியும் விட்டுவிடவில்லை.. எதிரணிக்கு சமமான கூட்டணி அமைத்தார் ... அதே போல தான் கொடுத்த இலவசங்களை , மானியங்களை வெகு சிரத்தையாக பெரும்பான்மை மக்களிடம் கொண்டு சேர்த்தார்..

இதுவே இன்று அவரை வெற்றி பெற வைக்க போகிறது.. !
இந்த விஷயம் பிடிபட அவருக்கு 22 வருடங்கள் ஆகியுள்ளது..
2006 ல் வைகோ ஒரு எக்ஸ்ட்ரா கோச் என்று நினைத்து அவர் சென்ற பொது இவர் அலட்டிக்கொள்ளவில்லை . ௨௦௧௧ல் வைகோ ஒரு தேவை இல்லாத சுமை என்று அம்மா திட்டமிட்டு வெளியேற்றினார் ..
இரண்டுமே ஓவர் கன்பிடேன்ட்ல் வந்த வினை.. கலைஞ்சர் சென்ற முறை 2001 ல அதன் நஷ்டத்தை அறுவடை செய்தார்.. அம்மா 2011 ல் செய்வார்.

Unknown said...

உங்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன் குசராத்த நம்ம ஊரோட கம்பேர் பண்ணாதீங்க..........ஆனா பீகார் காரங்க அறிவாளின்னு காமிச்சிட்டாங்க.........
ஆனா நம்ம ஆளுங்க யாரு எப்போ எப்படி இருப்பாங்கன்னு சொல்ல முடியாது ஹிஹி!

Yaathoramani.blogspot.com said...

கார்டூன்களை நன்றாகத்
தெர்ந்தெடுத்து கொடுத்துள்ளீர்கள் ....
அருமை அருமை
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

ராஜ நடராஜன் said...

//பணப்புழக்கம் அதிகமாக இருந்த இந்த தேர்தலில் கிட்டத்தட்ட 40 கோடிக்கும் அதிகமான பணமும், தங்க, வெள்ளி நகைளும் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது.//

இன்னும் 11கோடி சொச்ச்ததுக்கு கணக்கு எங்கே:)

ராஜ நடராஜன் said...

பதிவை படித்து முடித்து நம் மக்கள் மனநிலை பற்றி வருததம் மட்டுமே மிஞ்சுகிறது.

Prabu Krishna said...

எனக்கு ஒரு மெயில் வந்து. 2016 இல் குஜராத் குட்டி சிங்கப்பூர் ஆகி விடும், கருணாநிதி இன்னொரு முறை ஆட்சிக்கு வந்தால் நிஜ சிங்கப்பூரை விலைக்கு வாங்கிவிடுவார்.

நாம் மக்களும் இதை புரிந்து கொள்ள வேண்டும்.

Jana said...

தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!


காப்பாற்ற வந்தா அவருடனும் பிஸ்னஸ் பேசிடுவாங்க :)

Jayadev Das said...

\\குஜராத், பிஹார் மக்கள் இலவசங்களை எதிர்பார்த்து வாக்களிக்காமல், வளர்ச்சிக்கு வாக்களித்தார்கள். அந்த மக்கள் தன்மானம் மிக்கவர்கள், அவர்கள் இலவசங்களை வாங்கும் பிச்சைக்காரர்களாக மாறவில்லை என ஒரு பத்திரிக்கை கட்டுரையில் படித்தேன். அப்படியெனில் தமிழ்நாட்டு மக்கள் தான் இலவசங்களை நம்பும் ஏமாளிகளா?\\ குஜராத்திகள் யோசிக்கத் தெரிந்தவர்கள். இலவசம் இன்று கொடுத்தால் அது நாளை வட்டியும் முதலுமாக நாம் தலையில் தான் விழும் என்று அவர்கள் உணர்ந்துள்ளார்கள். குழந்தையிடம் சாக்லேட்டைக் காட்டி அணிந்திருக்கும் தங்க நகையைக் கழட்டிக் கொடு என்றால் அது கொத்துவிடும், தமிழ் சனம் இந்த நிலையில்தான் உள்ளது. மேலும் தமிழக முதல்வர், வேறு யாருக்குமே வைக்காத முதல்வர், தேடினாலும் கிடைக்காதா அப்பேற்பட்ட முதல்வர், அவர், மக்களை தெனாலி ராமன் குதிரை மாதிரி, பஞ்சதிலேயே வைத்திருக்கிறார்.

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல பதிவு.. நல்ல கருத்துக்கள்.. குஜராத் போல் ஒவ்வொரு மாநிலமும் ஆனால்...

சசிகுமார் said...

பதிவு நல்லாஇருக்கு பாரதி ஆனா கொஞ்சம் லேட்

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்