பதிவுலகம் கொஞ்சம் ராங்காத்தான் போய்கிட்டிருக்கு...


"தெரு முனையில் நின்று கொண்டிருக்கும் நாய் வருவோர் போவோரையெல்லாம் பார்த்து குலைத்துகொண்டிருப்பது போல, உங்களில் சில பதிவர்களும், டுவிட்டர்களும் வருவோர் போவோரை எல்லாம் பார்த்து திட்டிக்கொண்டிருக்கிறார்கள்" என்று கடுமையானதொரு விமர்சனத்தை என் முன் வைத்தார் ஒருவர்.

இது கொஞ்சம் கர்ணகொடூரமான விமர்சனமாகவே தோன்றியது. நான் ஏதேனும் பதில் சொன்னால் நானும் கடிக்க வருகிறேன் என்று சொல்வாரோ என்று தயக்கமாக இருந்தது.(இளைஞ்சவங்ககிட்டதான் எகிறுவாங்க..)

முன்பு திண்ணைகளில் உட்கார்ந்து ஊர்வம்பு பேசுவார்கள் இப்போதெல்லாம் கணிணி வைத்து, இணையம் மூலம் முதல்வர் முதல் சகபதிவர்கள் வரை வம்பிழுக்கிறார்கள் என்று அவர் அடுத்த தாக்குதலை ஆரம்பிக்க, "தெரு நாய்களும், சில பதிவர்களும்" என்று தலைப்பை போட்டு, அவர் சொன்னதை அப்படியே பதிவாக மாற்றலாம் என்று கணக்கு போட்டுக்கொண்டிருந்த என் ஹிட்ஸ் ஆசையில் மண் விழுந்தது.

உங்களுக்கு தெரியாதுங்க, முன்னாடி ஒரு முறை வம்புச்சண்டை மூலமா ஹிட்ஸ் ஏத்திக்கொண்ட உங்க பதிவர், இப்பவும் பித்து பிடிச்சமாதிரி ஏகத்துக்கு கத்தி, ஆபாசமா எழுதியிருக்காரு" அவர் தொடர.. 

எனக்கு தெரியாத விஷயம் தெரியாததாகவே இருக்கட்டும் என்று மேற்கொண்டு ஏதும் விவாதிக்கவில்லை.

அவர் இன்னும் கொஞ்சமும் கூட பேசினார். அவர் வார்த்தைகள் என்னையும் கொஞ்சம் உலுக்கியது. நானும் இது போல ஏதேனும் செய்திருக்கிறேனா என்று எண்ணமிட தோன்றியது.

சங்கரனுக்கு விழுந்த சாட்டையடி சகல ஜீவராசிகள் மீது புராணத்தில் விழுந்தது போல, எங்கே யாருக்கோ அவர் வீசிய சாட்டை, அழுத்தமான சவுக்கடியாக என்மீதும் விழுந்தது.

"என்னிடம் எழுத்து என்னும் சவுக்கு இருக்கிறது. யாரை வேண்டுமானலும் நான் அதனால் அடிப்பேன். கட்சி தலைவராக இருந்தாலும், சினிமா இயக்குனராக இருந்தாலும் விடமாட்டேன்
என்று சகட்டுமேனிக்கு பதிவு எழுதுபவர்கள், வாசகர்கள் கையிலும் ஒரு சவுக்கு இருக்கிறது என்பதை ஏன் மறந்துவிடுகிறார்கள்?"

வாசகர்கள் கண்டித்து எழுதும் கண்டன கமெண்ட்களை வெளிவிடாமல் ஸ்பெம் அல்லது டெலிட் செய்து விடலாம். ஆனால் அதிலிருக்கும் வார்த்தைகள் நிச்சயம் அவர்களை உறுத்தும் என்பது உண்மையே.எல்லோராலும் சினிமாவுக்கு எழுத முடியாது, எல்லோராலும் ஆனந்த விகடனில் எழுத இயலாது என்பது யதார்த்தம். நமக்கான வெள்ளித்திரையாக, விகடனாக வலைப்பூ கிடைத்திருப்பது,இந்த தலைமுறைக்கான வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். அதனை வெட்டி திண்ணைப்பேச்சாக மாற்றி விடாமல், எழுத்தை மிளிரச்செய்வதற்கான படியாக, சமுகம் மீதான கோபத்திற்கான நியாயமான வெளிப்பாடாக மாற்றிக்கொண்டால் நல்லதுதானே.

ஒவ்வொரு பதிவிலும் நம்முடைய எழுத்தின் வீரியம் அதிகரிக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டால் இது சாத்தியமே.

வலைப்பூக்களை சினிமா உலகத்திற்கு செல்ல வழியாகவும், பத்திரிக்கை ஊடகத்திற்கு செல்லும் வழியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மிகபெரிய ஊடக உலகத்திற்கு செல்ல விசிட்டிங் கார்டாக நம்முடைய வலைப்பூ எழுத்துக்கள் இருக்க வேண்டும். 


அப்படியான தேவையில்லாதவர்களுக்கு  பழக பழக வரும் தமிழ் என்பதற்கு ஏற்ப, நம்முடைய எண்ணங்களை, எழுதும் விதத்தை மேம்படுத்த வலைப்பூக்களை பயன்படுத்த வேண்டும் என்பது எமது விருப்பம்.

டிஸ்கி :
நான் மானமில்லாதவன், நீ மானமுள்ளவன் எப்படி வசதி என்னும் வடிவேலு வசனம் சம்பந்தமில்லாது ஞாபகத்திற்கு வருகிறது.

ரொம்ப யோசித்தால் இனி மேல் பதிவே எழுத முடியாது போல தோன்றுகிறது. (அதனால் தானோ என்னவோ இந்த பதிவு முழுமையடையாத பதிவு போல, சொல்ல வந்ததை தெளிவாக சொல்லமுடியாத பதிவாகவே எனக்கு தோன்றுகிறது)

21 கருத்துரைகள்:

# கவிதை வீதி # சௌந்தர் said...

தலைப்பை போட்டு கலாய்க்கிறிங்க...

இருங்க மீதியை படிச்சிட்டு வுருகிறேன்..

# கவிதை வீதி # சௌந்தர் said...

உண்மைதான்...
நான் சில நேரங்களில் வாய் கிழிய பேசுகிறோம்..
மற்ற நேரங்களில் அதை மறந்து விடுகிறோம்....

பதிவானது எழுத்துக்கள் எல்லாம் இந்த சமுகத்தை முன்னேற்றுவதற்காக இருக்க வேண்டும்..
அப்படி இருந்தால் நம் பதிவுகள் எப்போதும் உயிர் வாழும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது...

பட்டாபட்டி.... said...

:-)

ஆகாயமனிதன்.. said...

பதிவுலகில் பாரதி இருப்பது இம்மாதிரியான பதிவுகளின் மூலம் விளங்கும்.

//என்னிடம் எழுத்து என்னும் சவுக்கு இருக்கிறது. யாரை வேண்டுமானலும் நான் அதனால் அடிப்பேன். கட்சி தலைவராக இருந்தாலும், சினிமா இயக்குனராக இருந்தாலும் விடமாட்டேன்
என்று சகட்டுமேனிக்கு பதிவு எழுதுபவர்கள், வாசகர்கள் கையிலும் ஒரு சவுக்கு இருக்கிறது என்பதை ஏன் மறந்துவிடுகிறார்கள்?"//

இந்த பதிவுக்கு வடை போச்சேன்னு பின்னூட்டம் போட்டா..
நம்ம வலைப்பதிவு எதற்க்காக துவங்கப் பட்டது என்று தெரிந்துவிடும்..

கோமாளி செல்வா said...

ரொம்ப சரியான பதிவுதாங்க :-)

பெரும்பாலும் ட்விட்டர் , ப்ளாக் எல்லாத்திலையும் யாரோ ஒருத்தர கிண்டல் பண்ணியோ , திட்டியோ எழுதி இருக்கிறததான் அதிகமா பாக்க முடியுது.

//சமுகம் மீதான கோபத்திற்கான நியாயமான வெளிப்பாடாக மாற்றிக்கொண்டால் நல்லதுதானே.
//

எனக்கு இது மட்டும்தாங்க குழப்பமாவே இருக்கு. சமூகத்தின் மீது எதுக்கு நாம கோபப்படனும் ? நாம சேர்ந்ததுதானே சமூகம், இதுல தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம் . அத விட்டுட்டு கொபப்படுரதால தான் இத்தனை கிண்டல் , கேலி எல்லாம்னு தோணுது!

எப்படியோ சண்டை இல்லாம இருந்தா நல்லா இருக்கும் .. அத விட்டுட்டு எங்க பார்த்தாலும் யாரோ ஒருத்தர அடிச்சிட்டு , அவர் கண்ட படி திட்டிட்டு :-((

MANO நாஞ்சில் மனோ said...

:-]]

சசிகுமார் said...

உண்மையான கருத்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

>>வாசகர்கள் கையிலும் ஒரு சவுக்கு இருக்கிறது என்பதை ஏன் மறந்துவிடுகிறார்கள்?

குட் ஒன்

ஆகாயமனிதன்.. said...

//கோமாளி செல்வா said
எனக்கு இது மட்டும்தாங்க குழப்பமாவே இருக்கு. சமூகத்தின் மீது எதுக்கு நாம கோபப்படனும் ? நாம சேர்ந்ததுதானே சமூகம், இதுல தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டலாம் . அத விட்டுட்டு கொபப்படுரதால தான் இத்தனை கிண்டல் , கேலி எல்லாம்னு தோணுது!//


நீங்க சொல்றதும் சரிதான்

இரவு வானம் said...

செல்வா கூறீயதே சரியானதாக இருக்கும் என எண்ணுகிறேன்

ரஹீம் கஸாலி said...

என்னத்த சொல்ல...

ராஜ நடராஜன் said...

எனக்கு தலைப்பும் புரியல!பதிவுல இருக்குற உள்குத்தும் புரியல:)

ஆனா என்ன சொல்ல வர்றீங்க எனபது மட்டும் புரியது.

siva said...

true

!♫ ♪ …..♥ பனித்துளி சங்கர் .♥...♪ ♫ said...

///////வாசகர்கள் கையிலும் ஒரு சவுக்கு இருக்கிறது என்பதை ஏன் மறந்துவிடுகிறார்கள்?" /////////

மறுக்க முடியாத உண்மைதான் .

வலிபோக்கன் said...

நான் சொல்வதற்கு ஒன்னுமே இல்ல

Nesan said...

நல்லாத்தான் குத்துகிறீர்கள் பதிவர்களை!

நாய்க்குட்டி மனசு said...

மிகபெரிய ஊடக உலகத்திற்கு செல்ல விசிட்டிங் கார்டாக நம்முடைய வலைப்பூ எழுத்துக்கள் இருக்க வேண்டும். //
சத்தியமான வார்த்தைகள் பாரதி.

சாகம்பரி said...

தலைப்பிலேயே தெரிந்து விடும் இது போன்ற பதிவுகள். இவற்றை நாம் படித்தால் குழப்பம்தான் மேலிடும். இதிலெல்லாம் பாதிக்கப்படாமல் ,பாரதி போல சமூக சிந்தனையுடன் கூடிய பதிவுகளை எழுதுங்கள்.

செங்கோவி said...

அருமையாகச் சொன்னீர்கள்..நம்மையே நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்!

நிரூபன் said...

பதிவுலகம் கொஞ்சம் ராங்காத்தான் போய்கிட்டிருக்கு...//

இல்லையே, நல்லாத் தானே போய்க்கிட்டிருக்கு...ஏன்..ஏனு இந்தக் கொல வெறி.

நிரூபன் said...

உங்கள் கருத்துக்களோடு உடன்படுகிறேன் சகோ, எமக்கு கிடைத்த அரிய வரப்பிரசாதமான இந்த பதிவு ஊடகத்தை நாம் பல வழிகளில் பயனுள்ளதாக மாற்றலாம். அதை வுட்டிட்டு....கண்டதையும் எழுதுத...?

Blog Archive

Follow by Email

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்