முஸ்கி:
பிடிச்சவங்க பிடிக்காதது செய்தாலும் பிடிக்கும், பிடிக்காதவங்க பிடிச்சது செய்தாலும் பிடிக்காது. எனக்கு விகடன் பிடிக்கும். ஆதலால் நடுநிலையாய் இந்த பதிவினை கொண்டு செல்ல முடியவில்லை.
இரு வகையான வாதங்கள் இங்கே இருக்கின்றன, சரியான தீர்ப்பை நீங்களே நடுநிலையாக, முடிவு செய்து சொல்லுங்கள்.(தீர்ப்பு சொல்லிட்டு பேனா முனையை உடைச்சுடுங்க, யுவர் ஆனர்)
நிறைய குடும்பங்களில், ரேசன் கார்டில் பெயர் இல்லாத உறுப்பினராக மாறிவிட்ட ஆனந்த விகடனின் நடுநிலை பற்றியும் எப்பொழுதாவது சர்ச்சைகள் எழுவதுண்டு.
முன்பு நாடோடிகள் படமும், விகடன் தயாரிப்பில் வந்த வால்மீகி படமும் ஒரே நேரத்தில் வெளியான போது, வால்மீகிக்கு உடனடியாக விமர்சனம் எழுதி, அதிக மதிப்பெண் கொடுத்து புரோமோட் பண்ணிய பின், அடுத்த வாரம் தான் நாடோடிகள் விமர்சனத்தை விகடன் எழுதிய போதே அவர்கள் படத்தை காப்பாற்ற நடுநிலை தவறுகிறார்கள் என்று பேச்சு எழுந்தது.
விகடனின் அளிக்கும் மதிப்பெண்ணை பார்த்துவிட்டு, படம் பார்க்க போகிறவர்கள் ஏராளம். அதே போல விகடனின் தலையங்கம், அரசியல் கட்டுரைகளை படித்துவிட்டு வாக்களிக்கும் முடிவுக்கு வருபவர்களும் ஏராளம்.
இந்த தேர்தலில் மிக கடுமையான திமுக எதிர்ப்பு, அதிமுக ஆதரவு நிலையில் விகடன் செயல்பட்டதாக ஒரு சர்ச்சையும் எழுந்துள்ளது.
இதனை சார்ந்து எழுந்த விவாத குறிப்புக்கள் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
விகடன் நடுநிலை தவறிவிட்டது என்று சொல்லி வைக்கப்படும் வாதம்:
"திமுகவை காலி பண்ணுங்கள்" என்று அசைன்மெண்ட் கொடுத்தால் எப்படி தீயாய் களமிறங்கி ஒரு கட்டுரையாளர் எழுதுவாரோ அப்படி மிக கடுமையாய், அதிரடியாய் இருந்தது ப. திருமாவேலனின் அரசியல் கட்டுரைகள்.
ஆனந்த விகடன் தலையங்கம் என்றாலே வீரியமிக்கதாக இருக்கும் என்று மக்களிடையே மரியாதையும், மதிப்பும் இருக்கிறது என்பதால், தொடர்ந்து மூன்று வாரங்கள் திமுக தலைமையை, ஆட்சியை தாக்கி, தலையங்கம் எழுதியது. மக்கள் மறந்து விட்ட, ஐந்து வருடத்தில் நடந்த அத்தனை விஷயங்களையும் அம்பலப்படுத்தியது.
குமுதம், திமுகவுக்கு மிக ஆதரவாக எழுத ஆரம்பித்ததால், ஆனந்த விகடன் தொடர்ந்து திமுக எதிர்ப்பில் இறங்கியது. குமுதத்தின் விற்பனை, விகடனை விட அதிகம் என்பதால் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் செயல்பட வேண்டிய நெருக்கடி விகடனுக்கு இருந்தது.
மிக சரியாய் தமிழருவி மணியனை, தேர்தல் நேரத்தில், விகடன் மேடையில் பதிலளிக்க அழைத்து, அவரை "பவர் பிளே" ஆடுமாறு இறக்கி விட்டது. (அவரும் சிக்ஸர்களாய், அடித்து ஆடினார்)
நானே கேள்வி, நானே பதில் பகுதியில், அதிக முறை கிண்டலடித்து, அழகிரியை வதம் செய்தது.
தன்னுடைய மனைவி, மச்சான் என குடும்பத்தோடு "குடி"த்தனகட்சி நடத்தும் விஜயகாந்துக்கு தேவைக்கு அதிகமாக சப்போர்ட் பண்ணி, தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது. (பொது மேடைகளில் வடிவேலுக்கு சரிக்கு சரி பதில் சொல்ல முடியாத விஜயகாந்தின் விகடன் பேட்டிகள் மட்டும் மிக அசத்தலாக இருக்கும். ஒரு வேளை விகடனே எழுதிக்கொடுக்குமோ?)
வி என்று பேர் ஆரம்பித்தால் விகடன் சப்போர்ட் பண்ணுமா?
விகடன் நடுநிலை தவறவில்லை என்று சொல்லி வைக்கப்படும் வாதம்:
யார் ஆட்சியில் இருந்தாலும், ஆளுங்கட்சியின் தவறுகளை ஊடகங்கள் தட்டிக்கேட்கும். அப்படித்தான் ஆளுங்கட்சியின் தவறுகளை விகடன் அம்பலப்படுத்தியது. முன்பு ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோதும் இப்படித்தான் விகடன் செயல்பட்டது.
ப.திருமாவேலனின் கட்டுரைகளில் நியாயம் இல்லை என்று யாரேனும் சொல்ல முடியுமா? எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் தவறு செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு. அடுத்து அதிமுக ஆட்சிக்கு வந்து தவறுகள் புரிந்தால் நிச்சயம், திருமாவேலன் அதையும் சாடுவார்.
தரமான வார இதழ் என்று பெயர் வாங்கி விட்டதால், குமுதம் பின்னால் அலைய வேண்டிய அவசியம் விகடனுக்கு இல்லை.
முன்பு வைகோ-வுக்கு எப்படி எழுதியதோ அப்படித்தான், விஜயகாந்துக்கு விகடன் எழுதுகிறது. நிச்சயம் விஜயகாந்த் சொதப்பும் போது நிச்சயம் சாட்டை வீசுவார்கள்.
விகடன் தலையங்கம், இன்றைய சூழ்நிலையை மட்டும் வைத்து வாக்களிக்க கூடாது என்பதற்க்காக மட்டுமே, ஐந்து ஆண்டுகளில் நடந்த அத்தனை அவலங்களையும் சுட்டிக்காட்டியது. ஐந்து ஆண்டுகளுக்கான மதிப்பீடு தானே இப்போதைய தேர்தல்.
அரசியல் நடுநிலை பற்றி கவனத்தை ஈர்த்த தமிழருவி மணியனின் கருத்து :
" நடுநிலை, அரசியலில் சாத்தியம் இல்லை. வெள்ளையருக்கும், இந்தியருக்கும் இடையில், காந்தி நடுநிலையிலா நடந்தார்? ஒன்றை எதிர்த்து, மற்றொன்றை ஆதரிப்பதற்குப் பெயர் தான் அரசியல்.
மறைமுகமாக அல்ல.. நேர்முகமாகவே நான் இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரிக்கிறேன். தமிழகம் இதுவரை கண்ட ஆட்சிகளிலேயே மிகவும் மோசமானது இப்போது நடந்துகொண்டு இருக்கும் ஆட்சி. நாளை ஜெயலலிதா வந்தாலும், இதை விட மலினமான ஒரு நிர்வாகத்தை நடத்திவிட மாட்டார்.
இந்திய அரசியலில், இது வரை யார் வரக்கூடாது என்று தான் வாக்களித்து இருக்கிறார்கள். இந்திரா காந்தி கூடாது என்பதற்காகத்தான், மொரார்ஜிக்கு வாக்களித்தார்கள். கலைஞர் வரக்கூடாது என்றுதான், மக்கள் தொடர்ந்து எம்.ஜி.ஆரை ஆதரித்தார்கள்.
என் வாக்கு... ஜெயலலிதா வரவேண்டும் என்பதற்காக அல்ல; கலைஞர் மீண்டும் வரக்கூடாது என்பதற்காக!
ஜெயலலிதா மாற வேண்டும் என்பது என் இதய விருப்பம். ஆனால், சிறுத்தையின் உடலில் உள்ள புள்ளிகள் சாகும் வரை மறையாது என்பது இயற்கையின் நியதி!"

30 கருத்துரைகள்:
பதிவர்கள் பலரே நடுநிலை பத்திரிக்கை நடத்தும் காலம் வலையுலகில் வந்துவிட்டதால்..இனி யாரையும் ஏமாற்ற முடியாது.
good one..விகடன் சொல்பவற்றிலும் நியாயம் இருக்கிறது.
எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து செயல் படவேண்டும்...
பிடிச்சவங்க பிடிக்காதது செய்தாலும் பிடிக்கும், பிடிக்காதவங்க பிடிச்சது செய்தாலும் பிடிக்காது. எனக்கு விகடன் பிடிக்கும். ஆதலால் நடுநிலையாய் இந்த பதிவினை கொண்டு செல்ல முடியவில்லை.//
அவ்......அப்போ இது பக்கச் சார்பு விவாதமா?
விகடன்....விகடம் என்ன ஒரு பாதிப்பு ச்சே பதிப்பு!
பிடிச்சவங்க பிடிக்காதது செய்தாலும் பிடிக்கும், பிடிக்காதவங்க பிடிச்சது செய்தாலும் பிடிக்காது. எனக்கு விகடன் பிடிக்கும். ஆதலால் நடுநிலையாய் இந்த பதிவினை கொண்டு செல்ல முடியவில்லை.//
சபாஷ்.........தன் வாதங்களை நிரூபிக்க பாரத் வைக்கும் முதலாவது கருத்து, இது ஆணித்தரமான கருத்து, உங்கள் பக்கம் நியாயம் இருப்பதாக நினைக்கிறேன்.
"திமுகவை காலி பண்ணுங்கள்" என்று அசைன்மெண்ட் கொடுத்தால் எப்படி தீயாய் களமிறங்கி ஒரு கட்டுரையாளர் எழுதுவாரோ அப்படி மிக கடுமையாய், அதிரடியாய் இருந்தது ப. திருமாவேலனின் அரசியல் கட்டுரைகள்.//
இது அடுத்த அடி...
ஆனந்த விகடன் தலையங்கம் என்றாலே வீரியமிக்கதாக இருக்கும் என்று மக்களிடையே மரியாதையும், மதிப்பும் இருக்கிறது என்பதால், தொடர்ந்து மூன்று வாரங்கள் திமுக தலைமையை, ஆட்சியை தாக்கி, தலையங்கம் எழுதியது. மக்கள் மறந்து விட்ட, ஐந்து வருடத்தில் நடந்த அத்தனை விஷயங்களையும் அம்பலப்படுத்தியது.//
இக் கருத்துக்களினூடாக விகடன் நடு நிலையாகச் செயற்படவில்லை என்று தோன்றினாலும்;
மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, பயனற்ற ஒரு அரசை ஆட்சிக் கட்டிலில் இருந்து தூக்கியெறிய விகடன் மேற்கொண்ட பிரச்சாரமாக நாம் ஏன் இதனைக் கருதக் கூடாது?

மிக சரியாய் தமிழருவி மணியனை, தேர்தல் நேரத்தில், விகடன் மேடையில் பதிலளிக்க அழைத்து, அவரை "பவர் பிளே" ஆடுமாறு இறக்கி விட்டது. (அவரும் சிக்ஸர்களாய், அடித்து ஆடினார்)//
இது பத்திரிகைச் சாணக்கியமோ;-))
(பொது மேடைகளில் வடிவேலுக்கு சரிக்கு சரி பதில் சொல்ல முடியாத விஜயகாந்தின் விகடன் பேட்டிகள் மட்டும் மிக அசத்தலாக இருக்கும். ஒரு வேளை விகடனே எழுதிக்கொடுக்குமோ?)//
இந்தக் கேள்வி பற்றி நிச்சயம் ஆராய வேண்டி உள்ளது, ஒரு வேளை விகடன் தன் ரேட்டிங்கை தக்க வைப்பதற்கா கப்டனின் பேட்டிகளையும் எடிற் செய்து வெளியிடலாமல்லவா?
உங்களது கருத்துக்களின் அடிப்படையில் பார்க்கும் போது சகோ, விகடன் நல்ல ஆட்சியை தமிழகத்தில் அமைக்க வேண்டும் எனும் நோக்கில் தான் செயற்பட்டிருக்கிறது என்றே கூறலாம். இதன் ஒரு அங்கமே திமுக எதிர்ப்பு பிரசாரமும்,
கடந்த காலங்களில் மக்கள் பணியினைச் செவ்வனே ஆற்றாத அதிமுக வை ஆட்சியலில் இருந்த அகற்றியதனைப் போல, இந்த வருடம் திமுகவை ஆட்சியை விட்டுத் தூக்க வேண்டும் எனும் எண்ணத்தில் செயற்பட்டிருக்கிறார்கள்.
இங்கே பக்கச் சார்பு இருந்தாலும் தமிழக எதிர்காலத்தின் அடிப்படையில் விகடன் நடு நிலமை தவறவில்லையே என்பது என் கருத்து!
இனி பிரதம நீதியரசர்கள், நீதிபதிகளைத் தங்கள் கருத்துக்களை முன் வைக்க வருமாறு அழைக்கிறேன்.
//இக் கருத்துக்களினூடாக விகடன் நடு நிலையாகச் செயற்படவில்லை என்று தோன்றினாலும்;
மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி, பயனற்ற ஒரு அரசை ஆட்சிக் கட்டிலில் இருந்து தூக்கியெறிய விகடன் மேற்கொண்ட பிரச்சாரமாக நாம் ஏன் இதனைக் கருதக் கூடாது?//
இதையே தான் என் மனமும் சொல்கிறது.
அது சரி உங்களோட கருத்து என்னன்னு சொல்லவே இல்லையே பாரதி, பிடிச்சவங்க சொன்னதால விகடன் சொன்ன கருத்துதான் உங்களுதுமா? எனக்கென்னமோ குமுதம் விகடன் பத்திரிகை போட்டியில ஒரு பக்க சார்பா கருத்துக்களை வெளியிடராங்கன்னுதான் தோணுது
மிகவும் சரியாகச் சொல்வதானால் விகடன் நடுநிலைமை தவறி விட்டது என்பது தான் உண்மை.மூன்று வாரங்களாக தி.மு.க.ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க ,வாசகர்களை 'தலையங்கம்' என்ற பெயரில் மூளைச்சலவை செய்தார்களே. இப்படித் தான் 1996 ல் ஜெயா ஆட்சிக்கு எதிராய் எழுதினார்களா? தமிழருவி மணியனின் 'சிறுத்தையின்.,' என்ற வாதம் தமிழர்களை அவமானப்படுத்தும் வார்த்தைகள். சரி சரி, பதிவுலகமே நடுனிலைமை தவறிய விகடனின் நகல் தானே.
என் கருத்தை இன்றைய என் பதிவுலயே படிச்சுட்டீங்களே..இப்போ என்ன சொல்ல..உங்க கருத்தையும்(தீர்ப்பை) தெளிவாச் சொல்லி இருக்கலாம்.
தமிழருவி மணியனும் இந்த அளவிற்கு இறங்கி இருக்க வேண்டாம்!
"எல்லோரும் இன்புற்று இருப்பதுவே அல்லாமல்
யாமொன்றும் அறியோம் பராபரமே"
//வி என்று பேர் ஆரம்பித்தால் விகடன் சப்போர்ட் பண்ணுமா?//
வி பெயர் இருக்குறவங்க எல்லாம் விகடன் அலுவலகத்தை அணுகவும்:)
நெற்றிக்கண் வச்சிகிட்டே பல்டியடிக்கும் போது மீசைல மண் ஒட்டுவது மாதிரி முழியாங்கண்ணு தாத்தாவுக்கும் கோபத்துல கண் கோணலாடுயிடுச்சு:)
விகடன்,குமுதம் வியாபார போட்டி பார்வை ரொம்ப யதார்த்தம்.
விகடன் நடுநிலை தவறி செயல்பட்டதால் நிறைய வாசகர்களை இழந்துவிட்டது. இப்போது எல்லாம் விகடன் படிக்க அவ்வளவு ஆர்வம் யாருக்கும் ஏற்படுவதில்லை. காரணம் கண்ணை மூடிக்கொண்டு ஒருபக்கமாய் எழுதி குவிப்பதால் எனக்கு தெரிந்த பலர் விகடன் வாசிப்பை நிறுத்திவிட்டார்கள் என்பது மட்டும் உண்மை.
நடுநிலைமை உள்ள பத்திரிகை என்பதே ஒரு மித் தான் .
மிகவும் சரியாகச் சொல்வதானால் விகடன் நடுநிலைமை தவறி விட்டது என்பது தான் உண்மை.
தி.மு.க எதிர்ப்பு என்பது வேறு. அ.தி.மு.க ஆதரவு என்பது வேறு. விகடன் எடுத்தது அ.தி.மு.க ஆதரவு நிலை. இதில் நடுநிலை என்பதெல்லாம் வெறும் பம்மாத்து.
எனக்கு விகடன் மேல் பெரிய மரியாதை இல்லை. துக்ளக் படித்து அரசியல் ஆராய்ந்த காலத்தில், மண்ணாங்கட்டி மதனை பெரிய மண்டைவீங்கியாக வியந்த காலங்களில் சூனிய விகடனின் வெறி பிடித்த வாசகன் நான். இப்பொதெல்லம் விகடனை படித்தாலே அறுவெறுப்பாக இருக்கிறது.
குறிப்பாக இந்தத் தேர்தலில் விகடனின் செயல்பாட்டை பார்க்கும்பொழுது 'இந்த பொழப்புக்கு மாமா வேலையே மேல்' என்றுதான் தோன்றியது. சனியன் தொ.கா (அரசியல் நிலைப்பாட்டை அல்ல) பார்க்கும்பொழுதும் இதே போன்ற அருவெறுப்புதான்.
---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - ஏப் '2011)
இதெல்லாம் மாறன் பிரதேர்ஸ் விகடனை வாங்க முயற்சி செய்து அதற்காக மிரட்டலை ஆரம்பித்த பிறகு வந்தது..அது தெரியாம ..நீங்க வேற..
dear sir,vigadan was only the 4th estate,during mr.balasubramaniyam's period,now this vigadan is 4anthara pathirikai akivittadhu,i am not dmk supporter,i have been supporter & reader of vigadan for 25 years.but now i shamed for their position ,sorry money makes many ,vikadanal pathikkapattavan naan viyabara vikadanal en mudhalaliyidam vazkaiyai tholaithavan
vikadan never stand for any individual
ellam theriyum moodu
விகடனுக்குத்தான் பூனைக்கு மணி கட்டும் தைரியம் உண்டு காலத்துக்கு ஏற்ற தலையங்கம் சபாஷ் விகடன்
நல்ல பதிவு, பாராட்டுக்கள். :) :)
tq for ur templates-- nice idea
பகிர்வுக்கு நன்றிகள், தொடருங்கள்.
Post a Comment