புலியின் வால் பிடித்து ஓர் விளையாட்டு...

வன்மம் சுமந்து திரிந்த நாள்களில், ஒரு பகைமையை வஞ்சம் வைத்து தீர்த்த, முன்நாளின் கதை இங்கே கவிதையாய்.....

*அவன் வார்த்தைகளால்
உண்டான அவமானத்தை
முகம் சுருக்கி
சுட்டிக்காட்டினேன்.
-புரிந்து கொள்ளவில்லை.
 
*மனதிற்குள்சின்னதொரு
கறுப்பு புள்ளி
விழுந்தது.






*பின்
வார்த்தைகள் நீண்டதில்
கறுப்பு விரிவடைந்தது.
 

எனக்கே
தெரியாமல்
யுத்தமுஸ்தீபுகள்
எனக்குள்
நிகழ்ந்தன.

*போர் முரசங்கள்
அதிர்ந்தன.
கண் அசைவுக்கு
வீரர்கள்
குதிரையுடன் காத்திருந்தனர்.


*"போர் என்பது
தவறல்ல.."
என
கீதை உபதேசம்
முடித்த பின்
தயக்
மின்றி
என் காண்டீபம் உயர்ந்தது.
*உறவு
மறந்து போனது.,
இவன் எதிரி
இவன் எதிரி
என்பது மட்டும்
மனதுள் ஓடியது.

அஸ்திரங்கள்
மழையாய்
பொழிந்தது.
*மயங்கி வீழ்ந்து
பின்
மரணித்துபோனான்.
எதன் பொருட்டு
இந்த போர்
என்பதை
உணர்ந்து கொள்ளாமலே...
 


17 கருத்துரைகள்:

பனித்துளி சங்கர் said...

கவிதை வலியின் உச்சம் அருமை .

Unknown said...

ஒரு சொல்
சில இதயங்களை
நெருங்கவோ
விலகவோ செய்துவிடுகிறது...

ஆனந்தி.. said...

தங்கள் ப்லாக் ஐ பற்றி வலைச்சரத்தில் கூறி இருக்கிறேன்..
http://blogintamil.blogspot.com/2011/04/beautiful-blogs.html

நிரூபன் said...

அவன் வார்த்தைகளால்
உண்டான அவமானத்தை
முகம் சுருக்கி
சுட்டிக்காட்டினேன்.
-புரிந்து கொள்ளவில்லை.
*மனதிற்குள்சின்னதொரு
கறுப்பு புள்ளி
விழுந்தது//

நாவினாற் சுட்ட வடு என்றைக்குமே ஆறாது என்பதனை முதல் வரியில் மனதினுள் விழுந்த கறுப்பு புள்ளி மூலம் கூறியிருக்கிறீர்கள்.

நிரூபன் said...

வார்த்தைகளால் ஏற்படும் முரண்பாடுகளுக்கு, காரணம் தேவையில்லை என்பதனை வலிகளை ஒன்று திரட்டிக் கோர்க்கப்பட்ட கவிதையின் மூலம் சொல்லியிருக்கிறீர்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

வலி நிறைந்த வரிகள்....

வைகை said...

விடை தெரியாமலே மரணித்து போகிறோம்!..இது எல்லோருக்கும் உள்ளதுதானே?..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழுத்தம் நிறைந்த வலியை உணரக் கூடிய கவிதை..

சசிகுமார் said...

பதிவு நன்றாக உள்ளது பாரதி

MANO நாஞ்சில் மனோ said...

சக்சஸ் சக்சஸ்..........
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுட்டேம்லேய் மக்கா...ஹா ஹா ஹா......சக்சஸ் சக்சஸ்....
இன்னைக்கு எல்லா மக்காவுக்கும் தமிழ்மணத்துல ஓட்டு போடுரதுதான் என் வேலை ஹே ஹே ஹே ஹே...

Unknown said...

அருமை! வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை!
மரணித்திருக்கிறோம்!

Anonymous said...

தலைப்பு சிலிர்க்க வைக்கிறது

Anonymous said...

அருமையான வரிகள்

ரஹீம் கஸ்ஸாலி said...

அழுத்தமான கவிதை

பாலா said...

மனதை சுடும் கவிதைகள். அருமையாக இருக்கிறது.

இராஜராஜேஸ்வரி said...

ஒரு சொல் கொல்லும்;ஒரு சொல் வெல்லும்,

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை நல்லாருக்கு.. வலைச்சரத்துல கவுரப்விக்கப்பட்டதுக்கு வாழ்த்துக்கள்

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்