காமெடி தர்பாரில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை...



தேர்தல் பிரச்சாரம் நாளை மறுநாள் முடிய இருக்கும் வேளையில் தன்னுடைய தேர்தல் அறிக்கையை மிகவும் சுறுசுறுப்பாக வெளியிட்டு,
கோடை வெப்பத்தில் வாடும் தமிழக மக்களை, சிரிக்க வைக்கும் முயற்சியில் தங்கபாலு டீம் இறங்கியுள்ளதை நாம் வாழ்த்தி வரவேற்கிறோம். (பயபுள்ளைக என்னாமா காமெடி பண்றாங்க....) 


சரி, வாங்க... நிகழ்ச்சிக்கு போகலாம்..

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:


* மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசின் மூலம் தூய்மையான நிர்வாகத்தை வழங்க பாடுபடுவோம்.


ஊழல் என்றாலே காங்கிரஸ், காங்கிரஸ் என்றாலே ஊழல் என்று ட்ரேட் மார்க் வாங்கி விட்ட பின், எதற்காக இதனை சொல்கிறார்கள் என்று தெரிய வில்லை, ஒரு வேளை திமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என்று மறைமுகமாக சொல்கிறார்களோ என்னவோ..


* லஞ்சக் கொடுமை, நிர்வாக திறமையின்மை வேரறுத்து ஒழிக்கப்படும்.


இது தான் ஹைலைட் காமெடியாகத்தெரிகிறது. மன்மோகன்சிங்கை மனதில் கொண்டு, இந்த வரிகளை சோனியா சேர்ந்திருக்ககூடும் போல..நிர்வாக திறமையின்மை என்பது மண்ணு மோகனின் தனி சிறப்பம்சம் என்பதும், லஞ்சக் கொடுமை என்பது வீக்கிலீக்ஸ் வரை சந்தி சிரித்த விஷயம் தானே. (இதைத்தான் காலக்கொடுமை என்று சொல்வார்களோ?)


* சேது சமுத்திர திட்டம், தென்னக நதி நீர் இணைப்பு, முல்லைப் பெரியாறு, காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் போது, தமிழகம் முதன்மை மாநிலமாக செயல்படும் என்பதை உணர்ந்திருக்கிறோம்.
* காந்தி, காமராஜர் வழியில் எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் மருத்துவம், எல்லோருக்கும் வேலை என்ற கனவுகளை நிறைவேற்ற தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவோம்.


அடப்பாவிகளா? இப்ப கூட மத்தியிலும், மாநிலத்திலும் உங்க கூட்டத்தின் ஆட்டம் தானே நடக்கிறது, ஏன் இது வரை செய்யவில்லை. தேர்தல் சமயத்தில்  "உணர்ந்திருக்கிறோம், செயல்படுவோம்" என்று ஓம் போட்டால்  என்ன அர்த்தம். 


* காந்தி, காமராஜர் வழியில் எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் மருத்துவம், எல்லோருக்கும் வேலை என்ற கனவுகளை நிறைவேற்ற தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவோம்.


பொதுவா தமிழக அரசு- சொல்றீங்க. ஒரு வேளை அதிமுக ஆட்சி வந்தால், அந்த பக்கமும் பாய தயாரா ஐடியா பண்ணுறீங்களா?
(ஒரு அறுபது சீட்ல ஜெயித்தாலே, அந்தம்மா மதிக்காது, நீங்க மண்னு திங்க போற ஆளுக.. எப்படி அந்தம்மா மதிக்கும்?)


 **************************************************************************** 
வழக்கமாய் காங்கிரசில் தொகுதி பட்டியல், வேட்பாளர் பட்டியல் என எதை வெளியிட்டாலும், சத்தியமூர்த்தி பவனில் பெரும் கலவரமே நடக்கும், ஆனால் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள இன்று ஒரு பிரச்சனையும் இருக்காது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடுவதால், யாருக்கும் பிரயோசனம் இருக்காது என்பது காங்கிரசில் உள்ள அனைத்து கோஷ்டிகளுக்கும் நன்றாக தெரியும், மக்களுக்கும் நன்றாகத்தெரியும். 
(எடைக்கு பேப்பர் வாங்குபவர்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை சீண்டுகிறார்களா என்பது எமக்கு தெரியவில்லை, யாருக்கேனும் தெரிந்தால் சொல்லவும்)

இவர்களை நம்பி புது வாக்காளர்கள் ஏமாறாமல் இருந்தால் போதும்.



திமுகவின் தேர்தல் அறிக்கை கதாநாயகி என்றால் அதிமுக தேர்தல் அறிக்கை  கதாநாயகன் என்றால், காங்கிரசின் தேர்தல் அறிக்கை என்ன என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறோம்.(ஷ்ஷ்ஷ்...அப்பா...) 


லாஸ்ட் பஞ்ச்:


அரத பழசான வார்த்தைகளை வைத்து  பார்த்தால் பழைய தேர்தல் அறிக்கையையே திருப்பி கொடுத்தமாதிரி இருக்குது, அது எதுக்கு இவ்வளவு நாள்??

15 கருத்துரைகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

hehe. sema comedy

கவிதை வீதி... // சௌந்தர் // said...

கையை நம்பி ஏமாற இங்கு யாரும் தயாராக இல்லை..

காங்கிரஸ் அறிக்கை அது வில்லன் தேர்தல் அறிக்கை தோல்வியடையும்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழ்மணம் வரவில்லை ஏன்என்று தெரியவில்லை..

ஒரு வேளை என்னுடைய கணினியில் பிராபளமா என்று தெரியவில்லை

பொன் மாலை பொழுது said...

உண்மையில் அந்த கைய பாத்தாலே பீதியாகுது ராஜா. படு பயங்கரம்.

MANO நாஞ்சில் மனோ said...

//மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசின் மூலம் தூய்மையான நிர்வாகத்தை வழங்க பாடுபடுவோம்.//

ஆமா மிச்சம் இருக்குற தமிழனையும் கொன்னுரு....

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

what a comedy? what a comedy?

சக்தி கல்வி மையம் said...

செம காமேடிப்பா...

செங்கோவி said...

இவனுக காமெடிப் பீசு என்பதை நம் மக்கள் தேர்தலிலும் நிரூபிக்க வேண்டும்!

Unknown said...

நாதாரிங்க தேர்தல் முடிஞ்ச பின்னாடி கூட அறிக்கை விடும்...

நிரூபன் said...

கோடை வெப்பத்தில் வாடும் தமிழக மக்களை, சிரிக்க வைக்கும் முயற்சியில்//

பாஸ்.....தங்கபாலு பேச்சு அம்புட்டுக் காமெடியா இருக்குமா? நான் இது வரை கேட்டதே இல்லை பாஸ்....... ஐ ஆம் மிஸ்ஸிங் எ பண்டாஸ்டிக் காமெடி.

நிரூபன் said...

மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசின் மூலம் தூய்மையான நிர்வாகத்தை வழங்க பாடுபடுவோம்.//

பாஸ் ஒரு வேளை மிக்ஸி, கிறைண்டர் கொடுத்து வழங்குவோம் என்று சொல்ல வாறாங்களோ?

நிரூபன் said...

சகோ......காமெடி அறிக்கையை வைச்சே....காமெடியா.........
மனம் விட்டுச் சிரித்தேன்.
நன்றாக பெடலெடுத்திருக்கிறீர்கள்..

ஊரான் said...

"உங்களுக்கு நாங்க புள்ளதான் தரல மத்த எல்லாம் கொடுத்துட்டோம்" -பாண்டிச்சேரியைச் சேர்ந்த காங்கிரஸ் நடுவண் அமைச்சர் நாராயணசாமி பேச்சு.

இச் செய்தி எனக்கு இப்பொழுதுதான் தெரியும். எனினும் எனது இடுகை ஒன்றில் அரசியல்வாதிகள் இவ்வாறு வாக்குறுதி கொடுப்பதாக எழுதி அது பெண்களைக் கேவலப்படுத்துவதாக இருக்கும் என்பதால் நீக்கி விட்டேன்.

இலவசங்களை நோக்கி மக்கள் ஓடும் போது அது அங்கேதான் போய் நிற்கும் என நான் நினைத்தது உண்மையாகிவிட்டது.

மேலும் படிக்க...
ஒரு தரம்... ரெண்டு தரம்...!
http://hooraan.blogspot.com/2011/04/blog-post_9929.html

பன்னிக்குட்டி ராம்சாமி said...

’கை’விட்டாச்சுங்கோ......

வானம் said...

இந்த அறிக்கைய சிரிப்பொலியிலயும், ஆதித்யாவுலயும் ஒளிபரப்பிட்டானுங்களா?

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்