நடிகர் சூர்யாவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் விக்ரம் அவர்களே...


 "அதிகமாய் சம்பாதிக்கும் ஒருவனுக்கு, ஒரு நிலைக்கு மேல் பணம் என்பது வெறும் கலர் காகிதமே"
நடிகர் விக்ரம் என்றாலே எனக்கு நினைவுக்கு வருவது இந்த வார்த்தைகள் தான், இதுவும் விக்ரம் சொன்ன வார்த்தைகள் தான்.

முந்தைய படம் பிளாப் ஆனாலும், அதில் நஷ்டப்பட்டு வீழ்ந்தவர்களை பற்றி கவலைப்படாமல், அடுத்த படத்தில் நடிப்பதற்கு கிளம்பி, வருடத்திற்கு மூன்று படங்களில் நடித்து கல்லா கட்ட நினைக்கும் நடிகர்களில் மத்தியில், நல்ல படங்களை தெரிவு செய்து, மனத்திருப்திக்காக நடித்து வரும் நடிகர் விக்ரம் பணத்தை குவிக்கும் எண்ணத்திலிருந்து விடுபட்டு, குவித்த பணத்தை நல்ல காரியங்களுக்காக செலவிட முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

நடிகராகவும், நல்ல மனிதராகவும் தன்னை அடையாளப்படுத்திய இந்த சமுதாயத்திற்கு, நன்றி செலுத்தும் விதமாக, தன்னுடைய இரண்டு விதமான அமைப்பு பற்றிய அறிவிப்பினை செய்துள்ளார் விக்ரம்.
குடிசை வாழ் குழந்தைகளின் கல்வியை உயர்த்த, "கற்க கசடற" என்னும் புதிய அமைப்பினை துவக்க இருப்பதாக நடிகர் விக்ரம் அறிவித்துள்ளார்.

இந்த விஷயத்தில் நடிகர் சூர்யா நடத்தும் அகரம் பவுண்டேசன் அமைப்பினை தன்னுடைய வழிகாட்டலாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் இந்த பதிவின் வேண்டுகோள்.

அகரம் பவுண்டேசன் மூலம் அரசுப்பள்ளிகளில் பயிலும், ஏழை மாணவ மாணவியரின் கல்லூரி படிப்புக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அடுத்த ஆண்டிற்காக மாணவியர்களை தேர்வு செய்யும் பணி இப்போதே தொடங்கிவிட்டது. இன்னும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வராத சூழலில், அதற்காக காத்திருக்காமல், விண்ணப்பத்திருக்கும் மாணவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களையும் ஆராய்ந்து, அவர்களின் குடும்பச்சூழலை தொலைப்பேசியில் கேட்டறிந்து,அதன் அடிப்படையில் மாணவர்களை நேர்முகத்திற்காக அழைத்திருக்கிறார்கள்.

அதாவது உதவித்தொகை வழங்குவதற்காக மாணவர்களின் தெரிவு கூட, மிக சரியான வழிமுறைகளில் நடைபெறுகிறது.

இந்த வாரம் முழுவதும் நடைபெறும் நேர்முகம் முடிந்தபின், மீண்டும் ஒரு முறை அவர்களை வரவழைத்து, அவர்களின் தனித்திறமைகளை ஆராய்ந்து, அதற்கேற்ப அவர்களுக்குரிய கல்லூரி படிப்பினை தேர்வு செய்வதற்காக ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

கல்லூரியில் சேரும் போது கல்வி உதவித்தொகை வழங்குகிறார்கள்.

சரி, பணம் தான் கொடுத்தாச்சே என்று விட்டுவிடாமல், கல்லூரி படிப்பின் இடையே கிடைக்கும் விடுமுறை நாள்களில் ஸ்போக்கன் இங்லீஷ், கணிணி பயிற்சி, தனித்திறன் பயிற்சி என தொடர்ந்து அவர்களுடைய வாழ்வில் இணைந்திருக்கிறது அகரம் அமைப்பு.

சென்ற ஆண்டு உதவித்தொகை வழங்கிய மாணவர்களுக்கு இன்னமும் பயிற்சிகளை வழங்கிக்கொண்டிருக்கிறது அகரம்.

அகரம் அமைப்பின் மூலம் உதவி பெற்று, கல்லூரி படிப்பை முடிந்து வரும் ஒரு மாணவன் கட்டாயம் வேலைவாய்ப்புக்கும், வாழ்க்கைக்கும் உரிய அனைத்து விஷயங்களையும் கொண்டிருப்பான் என்பது சர்வநிச்சயம்.

கிட்டத்தட்ட ரமணா படத்தில் வருவது போல, ஒரு சமுதாய புரட்சியை ஏற்படுத்தும், தனக்கான திறமைமிக்க மனிதர்களை உருவாக்கும் பாதையில் நடிகர் சூர்யா போய் கொண்டிருக்கிறார்.
 ஏதோ மாணவர்களுக்கு பணம் கொடுத்தோம், அதை போட்டோ எடுத்து ஆனந்த விகடனில் போட்டோம், வீடியோ எடுத்து விஜய் டிவியில் விளம்பரத்திற்காக காட்டினோம் என்று "படம்" காட்டாமல் தொடர்ச்சியாக, சரியான திட்டமிடலோடு, கல்லூரி படிக்கும் காலம் முழுமையும் மாணவர்களுக்குரிய சிறப்பான பயிற்சியை அளிக்கும் அகரம் அமைப்பு போன்று விக்ரம் அவர்களின் "கற்க கசடற" செயல்பட வேண்டும்.

சரியான திட்டமிடலோடு நடத்த இயலாவிட்டால், விக்ரம் சில நடிகர்களை போல வெறும் விளம்பரத்திற்காகத்தான் சமுகசேவர் வேடத்தில் "நடிக்க இருக்கிறார்" என்று தான் சொல்ல வேண்டும்.

டிஸ்கி:
விக்ரமின் பச்சைப்புரட்சி என்னும் மரம் நடுவதற்கான அமைப்பை விட, கல்வியளிக்க இருக்கும் "கற்க கசடற" அமைப்பு சிறந்ததாகத்தெரிகிறது.
(ஏற்கனவே மரம் நடுகிறேன் என்று ஏகப்பட்ட "படம்"  மற்றும் "பப்படம்" காட்டிக்கொண்டிருக்கிறார்கள். மரம் நடுவதோடு நிறுத்தி விடுகிறார்கள். அதன் தொடர்ச்சியான கண்காணிப்பை செய்யாமல்)

வித்தியாசமான வேடங்களில் மெனக்கெட்டு மனத்திருப்திக்காக,  நடிக்கும் விக்ரம், ஒரு நகை அடகு கடையின் விளம்பரத்தில், நடித்தது
தவறு தானே என்று நீங்கள் கேட்டால், என் பதில் ஆம் என்பது தான்.



17 கருத்துரைகள்:

sulthanonline said...

சரியாக சொன்னீங்க பாரதி 'அகரம்' போன்ற அனுபவமுள்ள அமைப்பில் ஆலோசனை பெற்றால் நிச்சயமாக 'கற்க கசடற' வெற்றி பெறும்.

செங்கோவி said...

வரவேற்கப்பட வேண்டிய விஷயம்!

Unknown said...

பகிர்வுக்கு நன்றி

R.Ravichandran said...

Vikram,Surya like actors are real super stars of tamilnadu. But some actors earn in Tamilnadu and stores their income to their own state, they are not superstars

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மாற்றிக் கொள்வாரா விக்ரம்.....


ஒரு ஏழை கழந்தைக்கு கலவி அறிவித்தால் அதுதான் மிகப்பெரிய சிறப்பு...

கவி அழகன் said...

நல்ல பதிவு, பாராட்டுக்கள்.

அன்புடன் மலிக்கா said...

பதிவுகள் தொடர வாழ்த்துக்கள்..

Thameez said...

Why you want to publish this to show you are a Surya fan? Let Vikram do his job and take this in positive note. He has used both Tamil words for his movements! Do not comment anything you wanted to do with the help of Blogs.

சசிகுமார் said...

நல்ல பதிவு கல்வி கொடுத்தல் போல மரம் நடுவதும் இப்போது உள்ள நிலைமையில் சிறந்த சேவையே ஆனால் அதை தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.

Anonymous said...

நல்ல விடயம் சமூகத்தில செல்வாக்கு உடையவர்கள் இப்படியான விடயத்தில இறங்குவது மிக வரவேற்க படவேண்டியது மட்டுமல்லாது ஏனையவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டே ...பகிர்ந்த உங்களுக்கும் நன்றி

ரஹீம் கஸ்ஸாலி said...

அருமையான பதிவு

சிநேகிதன் அக்பர் said...

நல்ல கருத்து. வரவேற்கப்படவேண்டியது.

Anonymous said...

ungal muyarsikku valdhukal

Anonymous said...

சொல்லியிருக்கும் கருத்துக்கள் அருமை.

பாராட்டப்பட வேண்டிய பதிவு.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

கொஞ்சம் கொஞ்சமாய் கொல்லும் குளிர்பான விளம்பரத்தில் சூர்யா நடித்ததை விட நகை அடகுக்கடை விளம்பரத்தில் விக்ரம் நடித்து தவறில்லை அதற்காக விக்ரமை நான் ஆதரிக்க வில்லை விக்ரம் கோக் விளம்பரத்தில் நடித்தார் இப்போது இல்லை

Unknown said...
This comment has been removed by the author.

Blog Archive

ட்விட்டர் வரை உறவு...

பூக்கள் பறிப்பதற்கே...

அருகான்மை தோட்டங்கள்